மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு, அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரையில் உள்ளடங்கவில்லை :திஸ்ஸ விதாரண

  
 
 இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்விற்கான யோசனைகள் உள்ளடக்கப்படவில்லையென பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

சர்வகட்சியினால் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு யோசனைத் திட்டம் குறித்து அவர் விளக்கமளிக்கையில்,

புதிய அரசியலமைப்பு, பிரதமரை தலைமையாகக் கொண்ட ஆட்சிமுறை, ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை இரத்துச் செய்தல், நாடாளுமன்றத்தில் இரண்டாவது சபையை ஏற்படுத்துதல், அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்குதல்,
 தேசிய நில மற்றும் தண்ணீர் ஆணைக்குழு, கிராமியக் குழு முறையை மீண்டும் ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியே அனைத்துக் கட்சிக் குழுவின் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது  என தெரிவித்தார்.