மலையகம் தேசியம் சர்வதேசம்- முன்னுரையாக சிலக் குறிப்புகள் : கலாநிதி. ந. இரவீந்திரன்

அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, கொடிய அடக்குமுறைச் சட்டங்களின் கீழ் சுரண்டப்பட்டவர்கள் மலையக மக்கள். வேறு எவரிலும் தங்கியில்லாமல் தமக்கான வாழ்வாதாரங்களுக்கும் உரிமைகளுக்கும் தாமே போராடி ஒவ்வொன்றையும் வென்றெடுத்தவர்கள். அவர்களிடமிருந்து வெளிப்பட்ட நாட்டார் இலக்கியத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு அந்தப்பலத்தில் காலூன்றியபடி தேசிய – சர்வதேச விவகாரங்களிலும் கலை இலக்கியப் போக்குகளிலும் பயணிக்க உதவுகிறது இந்நூல்.

மார்க்சியத்தை எனது உலக நோக்காக வரித்தபடி ஆசிரியத்தொழிலுக்கான முதல் நியமனத்தை மலையகத்தில் பூண்டுலோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டு, முப்பது வருடங்களின் முன்னர் மலையகமக்களோடான தொடர்பாடலை ஏற்படுத்திக்கொண்டேன். மார்க்சியப் பார்வையை விசாலப்படுத்தும் பலகை அனுபவங்களுக்கான களடமாக மலையகம் திகழ்ந்தது. அப்போது மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தோட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். அது மலையகத் தோட்டங்களைப் பிரிக்க முனைனந்த பேரினவாத அரச நடவடிக்கையை வீரஞ் செறிந்த போராட்டங்கள் வாயிலாகவும் சிவனு லட்சுமணனின் உயிர்த்தியாகத்தினாலும் முறியத்திருந்த காலப்பகுதி.

வளம் கொழித்த மண்ணில் வந்து உழைப்பை ஆக்கிரமித்தவர்களல்ல மலையக மக்கள் விண்முட்டும் மலைகளில் மண்டிக்கிடந்த காடுகள் அழித்துப் பணப்பயிர்களான கோப்பி, கொக்கோ, தேயிலை, இருப்பர் நாட்டி வளர்த்து அந்த மண்ணுக்கே உரமானவர்கள். அந்த மண்ணைப் பேரினவாதிகள் களவாட

முனைந்ததைத் தடுத்து, இது எமது உழைப்பாலும் உதிர்த்தாலும் உரமேறிய எமது சொந்த மண் என்ற திடமனதோடும் நம்பிக்கையுடனும் மலையகமக்கள் இருந்த எழுபதுகளின் இறுதி இரண்டரை வருடங்களும், பின்னரும், இன்று வரையிலும் மலையகத்துக்குச் சென்று வருகின்றேன். இந்த மூன்று காலப்பகுதிகளும் தரும் படிப்பினைகள் சிந்தனையைக் கூர்மைப்படுத்த உதவுவன.

வீறுகொண்டெழுந்த தோட்டத்தொழிலாளர்கள் பிளவுப்பட்டுக்கிடந்த தொழிற்சங்கங்களுக்கு அப்பால் மார்க்சிய அரசியல் அணி திரட்டலில் முன்னோற்றத்தொடங்கினர். எண்பதுகளின் தொடக்கத்தில் தலையகம் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அரசோடு கூடிக்குலாவிய தலைமையை அரசியல் விழிப்புணர்வுபெற்ற வந்த இசாந்தலைமுறையினர் தம்பிலிருந்து சமூகப் பிரஷ்டம் செய்து வந்த இசாந்தலைமுறையினர் தம்மிலிருந்து சமூக பிரஷ்டம் செய்து கொண்டனர்.

எந்தவொரு வளர்ச்சியும் நேர்கோட்டுப்பாதையில் முன்னேறிவிடுவதில்லை. தோட்டத்துறையின் உழைக்கும் இளந்தலைமுறை தமது சொந்தக்கால்களில் தங்கியபடி மார்சிய நாட்டத்தில் முன்னேறுவதைத் தடுப்பதற்கு எண்பதுகளில் புற்றிசல்கள் நுழைந்ததைப்போல அரசாரா நிறுவணங்கள் மலையகத்தை நிறைத்துக்கொண்டன. புலவர்களது கொடைகளைக் கொண்டே உங்கள் தேவைகளை நிறைவு செய்துதருகிறோம். என்றார்கள். சொந்தக்கால்கள் முடமாக்கப்பட்டபோது சிந்தனைகளும் முடமாக்கிவிடும் அவலம் தொடர்ந்தது.

அண்மையில் அட்டன் சென்றபோது மூன்றாம் கட்டத்திலான இந்தச் சிந்தனை முடமாக்கலைக்காண முடிந்தது. வீறுகொண்ட மலையகமக்களை வரலாறு படைப்பதிலிருந்து ஓதுக்கப்படுவதற்குப் பணத்தை இறைக்கும் இரண்டாம் கட்டத்துக்குறிய தொண்டு நிறுவனம் ஒன்றில் இதனைக் காண முடிந்தது (இந்தத்தொண்டு நிறுவனம் தொடக்காலத்தில் இருந்ததா, இப்போது இதன் தொழிற்பாடுகள் எத்தகையன என்ற தேடலுக்கு அவசியமிருக்கவில்லை. எழுந்த குரல் முடமான சிந்தனைக்கு உதாரணமாயிருந்ததே கவனிப்புக்குரியது. இந்தியாவிலிருந்து வருகைத்தந்திருந்த முற்போக்குச் சஞ்சிகையொன்றின் ஆசிரியரிடம் கேட்கப்பட்டது இந்தக் கேள்வி எங்களுக்கு இலங்கையில் உள்ள எவரோடுமுள்ள உறவைவிட இந்தியாதான் எங்களுக்கு நெருக்கமானது, எங்களுக்காக நீங்கள் எதைச் செய்யப்போகிறீர்கள்?

அடியந்தரமான மாற்றம்ளூ இது எங்களது சொந்தமன் என்ற உணர்வோடு போராடி உரிமைகளை வென்றெடுத்தபடி இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் ஆளுமையுடன் இணையத் துடித்த முப்பது வருடங்களின் முந்திய வீரியம் எங்கே போனது? அது இன்னமும் உழைக்கும் மக்களிடம் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் உள்ளது. இந்தக்குரல் மக்களைப்பிரிந்த புத்திஜீவிகளின் நபுஞ்சக ஓலம், இலங்கைத் தமிழர் மத்தியில் போராட்டம் என்ற போரிலும் சிங்கள உழைக்கும் மக்களிடம் பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரிலும் எழுச்சிபெற்ற இனவாத சக்திகள் அந்தந்த மக்களின் வரலாறு படைக்கும் ஆற்றல்களைச் சிதைக்கலாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தனளூ மலையகத்தில் தொண்டு நிறுவனங்கள் அந்தக் கைங்கரியத்தை நிறைவு செய்துள்ளது.

இது போன்றதான எத்தனையோ சூழ்ச்சிகளை முரியடித்தே உழைக்கும் மக்கள் தமது விடுதலைக்காகப் போராடி வரலாறு படைத்தத்திருக்கிறார்கள். மூன்று தசாப்தங்கள் எதிரியாகிய சுரண்டற்கும் பல்கள் செய்த எத்தனம் இன்று மக்களை முடக்கியுள்ள போதிலும் தடைகளைத்தகர்;த்தபடி புதிய சக்திகள் எழுச்சி பெற்று மீண்டும் வீறுகொண்டெழும் விடுதலை முழக்கங்களை அரங்குக்கு கொண் வரும் நாள் தொலைவில்லை. அதற்கான ஒரு விடிவெள்ளியாக லெனின் மதிவானம் வெளிப்படுத்தும் இந்தக் கட்டுரைத்தொகுப்பு அமைந்துள்ளது.

அண்மித்த காலத்தில் மலையகத்தில் ஒரு தவிர்க்கவியலாத குரல் எழுந்ததுண்டு. எப்போதுமே தோட்டத்துறைக்குள் நாங்கள் அழுந்திக்கிடக்க வேண்டுமா? எழுச்சியுடன் வெளியேவந்து பல்துறைகளில் பரந்து வளர்வோம் என்ற புதியதலைமுறைப் புத்திஜீவிகள் முழக்க மிட்டார்கள். என்பதுகளில் பிரசாவுரிமை வழங்கப்பட்ட பின்னர் பத்துப்பாராளுமன்ற உறுப்பினருக்கு மேல் பெற்றுக்கொள்ள முடிந்த சூழலில் பெருந்தோட்டத்துறை என்ற அமைப்பைத் தகர்த்துப் பன்மைப் பரிமாணச் சமூக ஒழுங்கைப்பெறும் கோரிக்கை எழுவது தவிர்க்கவியலாததுதான் அந்தவளர்ச்சிக்கான எத்தனங்களை முடக்கக் கூடாது.

அதேவேளை, அந்தக் குரல்களுக்குரியவர்கள் மலையகத் தோட்டத்தொழிலாளர்களுத்தாம் துரோகம் இழைக்காமல் தமது போராட்டங்களை முன்னெடுப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இன்னமும் லட்சக்கணக்கான மக்கள் மலைகளைக் குடைந்து வியர்வை சிந்தித்தமது உழைப்பால் இந்தத் தேசத்துக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிதந்து வளம் சேர்த்துத் தந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். சில ஆயிரம் பேர் போனவர்போக லட்சக்கக்கானோர் அவ்வாறு வாழும் போது அவர்களது உரிமைக் குரல்களை எழவிடாமல் தடுக்க முயலாதிருங்கள்.

அந்த உழைக்கும் மக்களின் தொழிற்சங்க சந்தர்ப்பணத்தில் அரசியல் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஷமுன்னேறும்| புத்திஜீவிகளைக் கொண்டே தங்களது பிழைப்புல்லாத அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக மலையக உழைக்கும் மக்கள் வரப்போவதில்லை – நீங்கள் அவர்களது பிள்ளைகள். நீஞ்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்றபடி இந்த மண்ணில் உழைத்துழைத்து ஓடாக ஒடுங்கும் அவர்களது மீட்சிக்கான குரல்களை எழுலொட்டாமல் தடுக்காதிருங்கள். அண்மைக் காலங்களில் அரசியலாளர்களாகிவிட்ட தொழிற்சங்கத்தலைவர்கள் காட்டிகொடுக்கும் துரோகங்களைத் தொடர்ந்து செய்த போதிலும் தோட்டத்தொழிலாளர்கள் தன்குணர்வாகக் கிளர்தெழுந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு உதவ உங்களால் முடியாவிட்டாலும் பரவாயில்லை, தோட்டத்துறையென்று எதுவுமில்லை எல்லாம் மாறிவந்துவிட்டோம் என்று பசப்புலார்த்தைகள் பேசித்துரோகமிழைக்காது இருங்கள்.

புதிய தலைமுறைப் புத்திஜீவிகளில் இலையக மக்களோடு இணங்கி இயங்கி வளரும் சக்திகள் இல்லாமல் இல்லை என்பதற்கு இந்நூல் சிறந்த உதாரணம். பெருந்தோட்டத் துறைசார்ந்த மக்களோடு நெருங்கிய உறவைப்பேணும் உணர்வுடன் கலை இலக்கியச் செயற்பாட்டை முன்னெடுப்பவராக வெலின் மதிவானம் உள்ளார். இங்குள்ள கட்டுரைகள் மலையக மக்களது விடுதலை மார்க்கத்துக்கான விரிந்து பரந்த தளங்களை விஸ்தீரரணப்படுத்திக் காட்டுவனவாய் உள்ளன. முன்னருங் கூட தோட்டத் தொழிலாளர்கள் பிரதேசவாதத்தினுள் முடங்கிவிடாமல் தேசிய சர்வதேசப் பாட்டாளி வர்க்க எழுச்சிகளுடன் கைகோர்த்து இயங்கியிருக்கிறார்கள். செங்கொடிச் சங்கம், புதிய செங்கொடிச் சங்கம் உள்ளிட்ட இடதுசாரித் தொழிற் சங்கங்கள் அத்திசை வழியில் ஆற்றுப்படுத்தி மார்க்சியப் போதமூட்ட முயன்றுள்ளன.

இந்த மூன்று தசாப்தங்களாகப் பிற்போக்குவாதம் மேலாங்கியதும் முந்திய எழுச்சிப்போராட்ட அவை ஓய்ந்ததும் இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. உலகளாவியது. மக்கள் வரலாறு படைக்கும் இயங்காற்றில் இருந்து ஓராங்கட்டப்பட்டபோது பின் நவீனத்துவக் கட்டச் சிந்தனைகள் புகுந்தன. புதிய உலகைப் படைக்கும் உத்வேகத்தில் முயன்ற மேலைத்தேசம் இரு பெரும் யுத்தங்களுடாகச் சிதைந்தபோது அந்தப்பொது இலட்சிய வீறும் குன்றி வலுவிழந்தது. தனது ஆற்றல் இழப்பால் வரலாறென்றே ஒன்றில்லை என்பது உள்ளிpட்டு நம்பிக்கையீனங்களால் அழுங்கிப் போய்ப் பின் நவீனத்துவம் எனக் குழப்பங்களே நியதியெனவும், ஒட்டு மொத்தச் சமூக மாற்றங்கள் என்ற சாராம்சப்படுத்தல் சாத்தியமில்லை எனவும் கையறு நிலையடைந்தது.

இத்தகைய குழப்பத்துக்கு மார்க்சியர் உள்ளாக வேண்டியதில்லை. குழப்பச் சிந்தனைகளுடாகவும் முதலாளியப் புத்திஜீவிகள் புதிய விடயங்களைக் கண்டறிந்திருக்க முடியுமாயினும், மார்க்சியரிடம் அவ்வழியின்றித் தெளிந்த உணர்வுடன் விடயங்களைப் பகுத்தாராயவும் உலகை மாற்றியமைத்து உழைப்பவர் அதிகாரத்தை வென்றெடுப்பதூடாக வர்க்கபேதங்களை ஒழிக்க வழி தேடவும் இயலுமாயுள்ளது. எப்படி மேலைத்தேச, கீழைத்தேச மார்க்சியங்கள் என்றில்லையோ அவ்வாறே நவீனத்துவ பின் நவீனத்துவ மாக்சியங்கள் என்றும் எவையும் இல்லை. மார்க்சியம் மாற்றத்துக்கு இடமற்ற மதநூல அல்ல  கால – இட வேறுபாட்டை உத்தேசித்து மக்களை விலஙிகிட்டுள்ள அதிகாரங்களைத் தர்க்க ஏற்ற இயங்கியல் – பொருள் முதல்வாத உலகப் பார்வைத் தருகின்ற ஒரு சிந்தனைமுறையே மார்க்சியம் அதனைக்கையேற்றுத் தத்தம் கால – இடச் சூழலில் பிரயோத்த பல நாட்டு மக்களின் அனுபவத்தொகுப்பைக் கற்கும்போது, அவை எம்மை விலங்கிடப்போவதில்லை. அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு வளத்தெடுக்கும் எமக்கான போராட்ட உத்திகளும் மார்க்கங்களும் எம்மை வழிநடத்தி முன்னேறும்.

அந்தவகையில் சாதியச் சமூகமொன்றில் மார்க்சியப் பிரயோகத்துக்கான அனுபவச் செழுமை அறுபதுகளில் இலங்கை;கு வாய்த்திருந்தது. சாதியத்தகர்ப்புப் போராட்ட அனுபவங்களை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. அதன் இலக்கிய எழுச்சியாகப் பரிமணமித்த டானியல் தமிழகத்தில் தமிழழின் தலித் இலக்கிய முன்னோடியாகக் கொண்டாப்புடுவர். அந்தப்போராட்ட அனுபவச் செழுமையை எந்தளவுக்கு மார்க்சிய நிலைப்பட்டு (வர்க்கப்பார்வையில்) படைக்கபாக்கம் செய்ய டானியலால் முடிந்திருக்கிறது என்பது குறித்த சர்ச்சை அவர் வாழ்ந்த காலத்திலும் எழுந்த துண்டுளூ இங்கும் மீள்பார்வையில் மறுமதிப்பீட்டுக்கு உள்ளாகியுள்ளது.

மார்க்சியத்தைப் பின் நவீனத்துவப் போரால் திரிபுபடுத்துவது ஒரு பக்கம் நடந்தபோது, சாதியச் சமூகத்துக்கு மார்க்சியம் பொருந்தாது எனக்கூறித் தலித்தியவாதித்தினுள் முடங்கியவர்கள் மற்றொருபக்கம் உருவாகினர். சாதியச் சமூகம் என்ற புரிதல் ஏற்பட்டால் பின்னர் எப்படி வர்க்கப்பார்வை பற்றிப் பேசலாம், சாதியப்பார்வை தானே சாதியம் எனத் தலித்தியவாதிகள் கூறுவர். இது தனியே சாதிகளின் சமூகமல்லளூ சாதியவர்க்க சமூகம் ஐரோப்பாவைப்போலத் தனிமனிதர்கள் வர்க்கங்களாய் இல்லைளூ ஒரு தனியாள் அடையாளம் சாத்தியமற்றவகையில் ஒவ்வொருவருக்கும் சாதியடையாளம் இங்கே வலுவாக உண்டு. பாட்டாளிவர்க்கத்தில் ஐம்பது வீதத்துக்குமேல் ஒடுக்கப்பட்ட (தலித்) மக்களேயுள்ளனர். முதலாளிகளாக ஒருவீதம் இரண்டுவீதம் (எங்குமே ஐந்து வீதத்திக்கு மேற்படாமல்) மட்டுமே ஒடுக்கப்பட்டுள்ளனர். சுரண்டும் வர்க்கத்திலும் அதிகார பீடத்திலும் ஆதிக்க சாதியினரே எழுப்து வீதத்திற்கு மேல் நிறைந்துள்ளனர்ளூ மிகுதி இடங்களும் இடைச்சாதியினரால் நிரப்பப்பட்டிருக்குமு;. ஆக, நிலப்பிரபுத்தில் மட்டுமன்றி முதலாளித்துவத்திலும் குறித்த சாதிகளுக்கு குறித்த வர்க்க அடையாளம் சாத்தியமாதித்தான் உள்ளது.

ஆயினும் வர்க்கப்பார்வையே விடுதலைக்கு மார்க்கமாக முடியும். பாட்டாளி வர்க்கத்தலைமையில் நிலப் பிரபுத்துவ, முதலாளிச் சுரண்டல் வர்க்கங்ககளை அழித்தொழிப்பது எனக் கொள்கை வகுப்பதைப்போல ஒடுக்கப்பட்டோர் தலைமையில் ஆதிக்க சாதியினரை முறியடிப்பது எனக் கொள்கை வகுத்துவிட முடியாது. சாதிய முறையைத் தகர்ப்பது எனும்போது இயல்பாக ஒடுக்கப்பட்ட மக்களே முழுதாகத்திரள்வர்ளூ உயர்சாதியினரிலும் அதிகாரத்தைத்தகர்த்துச் சமத்துவ சமூகம் படைக்க உள்ள அவசியம் பலருக்கு உள்ள வாழ்கின்ற நிலவதனால் பலரும் அணிதிரள்வர். அணிதிரண்டார்கள் என்பதாலேயே தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமை அமைப்பில் வெள்ளபளர் உட்பட்ட பல்வேறு சாதியினர் இடம் பெற்றிருந்தனர். அந்தப் போராட்டத்திலும் பல்வேறு சாதியினர் பங்கெடுத்தனர்.

சாதியத்தகர்ப்பை சாதியப்பார்வையில் எட்ட முடியாது, ஒடுக்கப்பட்ட சாதியினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவது எனில், முன்னர் ஒடுங்கிய சாதியினரை அடக்குவது என்றாகி, வேறொரு வடிவில் சாதியம் தொடர்வதாகவே அமையும். எந்தச்சாதி ஆள்வது – ஆளப்படுவது என்பதல்லப் பிரச்சினைளூ சாதிமுறையே தகர்க்கப்படவேண்டும் என்பதே அவசியம். பாட்டாளி வர்க்கம் தனக்கு என எதுவுமற்றது, வர்க்கங்களே அற்றுப்போவதனால் மட்டுமே தனக்கான விடுதலையை எட்ட முடிவது. சிறு உடமை உள்ள வேறெந்த சக்தியின் அதிகாரமும் தன் நலனை விருத்தி செய்ய மார்க்கந்தேடும் என்பதனாலேயே பாட்டாளிவர்க்கத் தலைமையிலான வர்க்க ஒழிப்பு மார்க்கம் பற்றி மார்க்சியம் கரிசனம் கொள்கிறது. முதலாளித்துவத் தந்திரோபாயங்கள் பாட்டாளிவர்க்க இருப்பில் சிதைவுகளை ஏற்படுத்திய போதிலும் மார்க்சியத்தினூடாகப் பெறப்பட்ட பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறை மக்கள் விடுதலைக்கான வழிகாட்டலாய் அமைய முடியும். விவசாயப் புரட்சிக்குப் பாட்டாளி வர்க்கச் சிந்தனையைப் பிரயோகித்த சீனப் புரட்சி இவ்வகையில் டா ஒ சேதுங் சிந்தனையை வழங்கிய நிலையிலேயே இலங்கை லெனினிய – மா ஒ சேதுங் சிந்தனை வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.

டானியலின் படைப்பாக்கத்தில் அவர் விரும்பியவாறு பாட்டாளிவர்க்கப் பார்வை வெளிப்படாமல் சாதிய வாதத்தவறு தலைதூக்கி இருந்த போதிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் போராட்டங்களையும் அவரளவுக்கு வேறொருவரும் எழுதவில்லை என்ற வகையில் மக்கள் இலக்கியத்துக்கான அவரது பங்களிப்புக் குறைத்து மதிப்பிடத்தக்க ஒன்றல்ல. அவ்வாறே முற்போக்கு இலக்கியச் செல்நெறியில் முனைப்பாகச் செயலாற்றிய பலரது ஆக்க முயற்சிகள் குறித்தும் இந்நூல் அலசுகின்றது. குறிப்பாக சாருமதி, முருகையன் போன்றோர் குறித்த தனியான கட்டுரைகள் இங்கு இடம்பெற்றிருக்கக் காணலாம். சாதியத் தகர்ப்புப் போராட்டம் பரந்துபட்;ட ஜக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பிய சூழலில் இலங்கைத் தேசியம் முனைப்படைந்திருந்தது. அதனுள் இனத்தேசியர்களின் சுய நிர்ணயத்துக்கான குரலை முருகையன் சாருமதி போன்றோர் முன்வைத்தனர். அவர்களது மார்க்கமே எமக்கான ஈடேற்றத்தைச் சாத்தியப்படுத்தும் என்பது இன்றைய நிதர்சன அனுபவமாகி வருகிறது.

இவற்றை ஆய்வடிப்படையில் வெளிப்படுத்தியவர் கைலாசபதி. அவரது மக்கள் இலக்கிய முன்னேடுப்பும் சோஷலிச நாட்டமும் மக்களின் தேடலுக்குரிய பேசு பொருட்கள் ஆகிவிடக் கூடாது என ஏதோவொரு வகையில் கருதுகின்றவர்களே கைலாசபதியை தாக்குகின்றவர்களாயுள்ளனர். நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பரந்து பட்ட ஜக்கிய முன்னணியூடாக சோஷலிச அமைப்புக்கு மாற்றப்படும் புதிய உலகொன்றிலேயே வென்றெடுக்கச் சாத்தியமுள்ளது. அதற்கான மார்க்கங்களைத் தேடவும் செயற்படவும் ஏற்றதாகக் கலை இலக்கியங்கள் அமைவதற்கு ஆற்றுப்படுத்தியவர் கைலாசபதி. அவரைத் தாக்குதலோ திரிபுபடுத்தவதாலோ அவர் காணவிழந்த புதிய உலகை வென்றெடுப்பதிலிருந்து வரலாற்றைத் திசை திருப்பிவிட முடியாது.

ஆயினும் திசை திருப்புவதற்கான எத்தனங்களை விரோதிகள் இறுதிவரை முன்னெடுத்தவாறு தான் இருப்பர். அவர்களுடைய தாக்குதலுக்கு கைலாசபதியைப் போலவே பாரதியும் இலக்கானார். இலங்கையின் தனித்துவ இயங்காற்றலையும் சொந்த மக்களது அடிப்படை பிரச்சினைகளையும் எமது கலை இலக்கியங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற முற்போக்கு எழுத்தாளர் சங்க பிரகடனம் எழுந்த போது தவிர்க்கவியலாமல் பாரதியை மன்னிருத்திய தேசிய இலக்கியக் கோட்பாடு மேலெழத் தொடங்கியது. முற்போக்கு சக்திகளின் போர்வாளாக பாரதி இலங்கையில் திகழ்ந்துள்ளார். லெனின் மதிவாணம் பாரதி குறித்துக் கொள்ளும் அக்கறை தேசிய இலக்கியக் கோட்பாடு வாயிலாக மக்கள் இலக்கியத்தை வந்தடைந்த கைலாசபதியின் தொடர்ச்சியாக அமைவதைக் காணமுடிகிறது. இன்று சிலர் இந்திய வம்சா வழியினர். என்ற அடையாளத்துக்கு ஏங்குவதைப் போலன்றி பாரதியை இலங்கைத் தேசிய எழுச்சியின் குரலாகப் பார்க்கும் பண்பு இது. மலையக விடுதலையை இலங்கை தேசியத்தின் விடுதலைப் பண்பின் பகுதியாக அமையும் சுயநிர்ணயத்தின் வடிவமாகக் காண்பதன்’ பேறு இது.

அதனாற் போலும் அவரது பார்வை உடனடியாகவே தேசியத்தின் முற்போக்குப் பரிணாமமாக லிஸ்திரணமடையும் சர்வத பாட்டாளி வர்க்க அனுபவங்களைத் தேடிச் செல்கின்றது. தேசியத்தின் மறுபக்கமான பிற்போக்கு அம்சங்கள் மேலோங்கும் போதுதான் பிரதேசவாதமும் அதன் உடன்போக்கான இந்தியக்கனவும் உருவாகும். இந்தியத் தேசியத்தின் புரட்சிப் பரிணாமமாகிய பாரதியை அடியொற்றிச் சர்வதேச நோக்கில் இந்நூல் பரிணமிப்பது கவனிப்புக்குரியது. அவ்வகையில் பாஜியத்துக்கு எதிரான வலுவான அபலப்படுத்தலூடாக சோஷலிசத்தின் உறுதிப்படுத்தலை வெளிப்படுத்திய ஜீலியன் பூசிக்கை அவர் காட்டுவது பொருத்தமாய் அமைகிறது.

இந்திய மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து மலையக மக்கள் இங்கே வந்ததைப் போன்றே மலேசிய மண்ணிலும் மலேசியத் தமிழர் எனும் மக்கள் பிரிவினர் பல இன்னல்களை அனுபவித்தபடி போராட்டங்கள் வாயிலாக முன்னேறி வருகின்றனர். மலேசியத் தமிழர் குறித்த லெனின் மதிவானத்தினது பார்வை ஏனையவர்களிலிருந்து அடியந்தமாய் மாற்றம் பெற்று வந்தள்ளது. மேலே காட்டிவந்தவாறு உழகை;கும் மக்களது போர்க்குணாம்சத்தில் காலூன்றிய படி மலையக மக்களது சுய நிர்ணயத்திற்கும் இலங்கைத் தேசியத்துக்கும் சர்வதேச பாட்டாளியத்திற்கும் பார்வை விசாலிப்பை அவர் விரிவுபடுத்தி வந்ததன் நோக்கு நுட்பம் மலேசியத் தமிழரை தனித்துவப்பண்போடு காட்டவதற்கு உதவியள்ளது.

இறுதியாக அவரது பார்வை வீச்சின் உச்சமான அமையம் பல்லோல் பற்றிய கட்டுரை இந்நூலின் கண் இடம்பெற்றுள்ளது. ஒரு உளவியாளராக மட்டும் பல்லொவை அறிந்தவர்களுக்குப் பல்வேறு பரிணாமங்களில் தரிசிக்க உதவுகிறது இக்கட்ரை. கூடவே சோஷலிச சமூகம் தனது அறிவியலாளரை மாறுபட்டுச் செயற்பட்ட போதிலும் எவ்வளவு கனம் பண்ணி நடாத்தியுள்ளது என்பதும் காட்டப்பட்டிருக்கிறது. பல்லொலில் ஏற்படும் நுண்ணுணர்வு சார் மாற்றம் அழகாக இங்கே காட்டப்பட்டுள்ளது.

மக்கள் கலை இலக்கிய எழுச்சி வலுவோடு தொடர்ந்து விறுநடைபோடும் என்பதற்கு தீர்க்கமான எடுத்துக்காட்டாக இந்நூல் திகழும். இப்படிச் செய்வதால் இங்கு விவாதிக்கப்படும் விடயங்கள் அப்படியே ஏற்றாக வேண்டும். என்றில்லை. இவற்றை பன்மைப் பரிணாம நோக்கில் தொடர்ந்து விவாதிப்போம். அது மக்கள் நலன் சார்ந்த தளத்தக்குரியதாக அமையும் போது மேலும் செழுமை பெற்ற பார்வையைக் கண்டடைவோம். இந்தக் கூட்டு முயற்சியோடு இறுக்கமான ஜக்கிய முன்னணியில் திடமாகச் செயற்படவோம்.

குமரன் இல்ல வெளியீடு, விலை. 450ரூபா.

25 thoughts on “மலையகம் தேசியம் சர்வதேசம்- முன்னுரையாக சிலக் குறிப்புகள் : கலாநிதி. ந. இரவீந்திரன்”

 1. அன்புள்ள லெனின் மதிவாணம் அவர்களுக்கு தங்களது இந்நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்க இயலுமா? தமிழோசை பதிப்பகம் 1050 சத்தி சாலை காந்திபுரம் கோயமுத்து}ர் தமிழ்நாடு அ.கு.எண். 641012 அல்லது தமிழகத்தில் எங்கு கிடைக்கும் என்பதைத் தெரிவிக்கவும்
  க.விஜயகுமார்

  1. அன்புமிகு தோழருக்கு,
   வணக்கம்,
   ஜீலை கடைசியில் நண்பர் ந. இரவீந்திரன் இந்தியா வருகின்றார். அவரூடாக நூலின் பிரதியை அனுப்பி வைக்கின்றேன். லெனின் மதிவானம்.

 2. மலையக தமிழா;கள் புறக்கணிக்கப்படவில்லையா?
  மலையகன.;
  அண்மையில் அட்டன் நகாpல் நடைபெற்ற மலையகம். தேசியம் சா’வதேசியம் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு தலைமைத்தாங்கிய விரிவுரையாளர் கலாநிதி இரவீந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் மலையக மக்கள் இன்றும் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாது என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை தொpவித்திருந்தார். மலையக மக்கள் இன்றும் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று கூறிக்கொள்வது தம்மை தாமே தாழ்த்திக் கொள்ளும் செயல் என்று ஆதங்கப்பட்டார். இக்கருத்தினை மேலோட்டமாக பார்கின்றபோது நியாயமாக தொpயலாம். ஆனால் இதனை ஆழமாக நோக்குகையில் இக்கருத்தில் மயக்கங்கள் காணப்படுவதுடன>; பல கேள்விகளையும் எழுப்ப தூண்டுகின்றது.
  இவர் மலையக சமூகத்தில் இருந்து முன்னேறிய பலரை தொட்டுக்காட்டி தனது உரையினை நிகழ்த்தியிருந்தார்.. உதாரணமாக கொழும்பு பல்கலைகழகத்தின் கல்வியியற் துறையின் தலைவரும்> இலங்கையின் கல்வியியலாளர்களில் முக்கியமானவருமான சோ. சந்திரசேகரன்> கல்வி நிர்வாக சேவையில் உயர் நிலையில் இருக்கும் சு. முரளிதரன்> மலையக இலக்கியவாதி என்று கருதப்பட்டாலும் ஈழத்து இலக்கியத்திற்கு காத்திரமான பங்களிப்பினை செய்துள்ள தெளிவத்த ஜோசப் போன்றவர்களையும் சுட்டிக்காட்டியிருந்தார். இவரது கருத்துக்கிணங்க மலையக சமூகத்தில் இருந்து முன்னேறிய இவர்களின் வளர்ச்சி மதிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. இவர்களோடும் இன்னும் பல்வேறு துறைகளிலும் உயர் நிலையினை அடைந்துள்ள பலரை எம்மால் கூறமுடியும். மலையக தமிழா;களில் இருந்து உருவான சிறந்த ஆங்கில கவிஞராகிய>ஊ.ஏ வேலுப்பிள்ளை> இலங்கையின் முதல் தொழில் அமைச்சராக இருந்த பெரியசுந்தரம்> அமெரிக்க புளோரிடா பல்கலைக்கழகத்தின் மானிடவியல் துறை பேராசிரியர் வேலன்டன் டேனியல்> தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாக இருந்து லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற அருட் தந்தை மரிய அந்தோனி> வெளிநாட்டு தூதுவர் கிறிஸ்ணமூர்த்தி> நீதிபதி டோஸ்கி> உயர் நீதிமன்ற சட்டத்தரணி தம்பையா போன்ற இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லாம். ஏன் சாதாரண தோட்டத் தொழிலாளியாகவும்> கூலி தொழிலாளர்களாகவும் இருந்த சிலர் பாராளுமன்றம் வரையிலும் சென்றுள்ளனர் என்ற பெருமை மலையக தொழிற்சங்க கட்டமைப்புக்கு உண்டு. ஏனைய சமூகத்திற்கு நிகரான வளர்சி பெற்றவர்களும் திறமை உடையவர்களும் மலையகத் தமிழா;கள் மத்தியிலும் இருக்கின்றார்கள் என்பதை பெறுமையுடன் கூறமுடியும். மலையக சமூகம் ஒன்றும் முடமான சமூகமல்ல> இவர்களிடமும் மனித குலத்தின் அத்தனை பண்புகளும் காணப்படவே செய்கின்றது.

  ஆனால் மலையக மக்களில் இருந்து முன்னேறிய சிலரை எடுத்துக்காட்டி ஒட்டு மொத்த சமூகமும் வளர்ச்சியடைந்துள்ளது> மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது குறைந்துள்ளது என்றெல்லாம் கூறமுயல்வது மலையகத்தில் காணப்படுகின்ற பல்வேறு சமூக> பொருளாதார> அரசியல் பிரச்சினைகளை மூடி மறைப்பதாக அமைகின்றது. இன்று தேசிய சுகாதார திட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியச்சாலைகள் உள்ளடக்கப்பட வில்லை> உள்ளுராட்சி அமைப்பின் கீழ் பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புக்கள் உள்ளடக்கப்படவில்லை> பெருந்தோட்டத் தொழில் துறை சிறிது சிறிதாக கைவிடப்படுகின்ற நிலையில் சிறுதோட்ட உரிமையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்> மாத்தளை> இரத்தினபுரி கேகாலை போன்ற பகுதிகளில் பெருந்தோட்ட மக்கள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்> ஒட்டு மொத்த இலங்கையிலும் வறுமையிலும் ஏனைய பல அபிவிருத்தி குறிகாட்டிகளில் பெருந்தோட்ட பகுதியே பின்னடைவதாக இருக்கின்றது. இவ்வாறான சூழலில் மலையக தமிழா;கள் இன்றும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை நியாயப்படுத்த முடியாது என்று ஒரு விரிவுரையாளர் கூறுவதை எம்மைப் போன்ற சமூக அக்கறை கொண்டவர்களால் சகித்துக்கொள்ள முடியாது.
  கலாநிதி இரவீந்திரன் அவர்கள் யாழ்பாணத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர் மலையக மக்களில் இருந்து அந்நியப்பட்டவர் என்று கூறமுடியாது. இவர் பல வருடங்;களாக மலையகப் பகுதிகளில் கல்விப்பணி ஆற்றியுள்ளதுடன்> மலையக மக்களுடனும் இளைஞா;களுடனும் முற்போக்கு சிந்தனையுடன் நெருங்கி பழங்கியவர். அத்துடன் இவர் ஒரு இடதுசாp பின்னணியிலும் வளர்ந்தவர். இவ்வாறான ஒரு மனிதா; இப்படிப்பட்ட நியாயமற்ற கருத்துக்களை முன்வைப்பது வேதனையளிக்கின்றது.

  மலையகத் தமிழ் சமூகத்தில் இருந்து உருவாகி அரசு இயந்திரங்களுக்கு துணைப்போகும் அதிகாரிகளும்> ஏனைய இடைநிலை அரசு உத்தியோகத்தா;களும் தொழிலாளர் சமூகத்தை விட்டு அந்நியப்படுகின்ற நிலை வளர்ந்து வருகின்றது. மேலும் முற்போக்குவாதிகளை போன்று பம்மாத்துகின்ற சிலக் குழுக்களும் அங்காங்கே இருக்கவே செய்கின்றது. எனவே விரிவுரையாளர் இப்படிப்பட்டவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கின்றாரோ? ஏன்று எண்ணத் தோன்றுகின்றது. இவரது தனிப்பட்ட கருத்தியல் பின்னணியையோ> அல்லது கொள்கையையோ நாம் கேள்விக்கேற்;க முனையவில்லை. பிழையான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமாக இளைய தலைமுறையினருக்கு தவறான கருத்துக்கள் சென்றுவிடக்கூடாது என்ற நோக்குடனேயே இக்கட்டுரை வரையப்படுகின்றது. தயவு செய்து கலாநிதி அவர்கள் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்ளை முன்வைக்கின்றபோது நன்கு யோசித்து வெளிப்படுத்துவார் என எதிர்பார்கின்றோம்

  1. மலையகன் குறிப்பிட்டிருக்கும் இரவீந்திரனின் உரை குறித்து சில வார்த்தைகள். அந்த உரையின் ஒரு சிறு பகுதியை வைத்து அதுவே முழுப் பேச்சும் என்பது போல மலையகன் எழுதியிருப்பது வேடிக்கையாக உள்ளது. தோள் கண்டார், தோளே கண்டார். காண விரும்பினால் தடையின்றி முழுத் தோற்றத்தையும் கண்டிருக்க முடியும். தோற்ற மயக்கங்களுக்கு மறைப்பு எதுவும் இருக்கவில்லை. கொழும்பில் ஒரு உரை குறித்து, பேராசிரியர் சந்திரசேகரன் குறிப்பிட்ட பின்னர் இப்போதும் மலையகம் புறக்கப்படுகின்றது என்று சொல்ல முடியாது எனக் கூறியதை அடியொற்றியே இரவீந்திரன் தனது கருத்தை முன்வைத்தார். மலையகம் வழங்கிய ஆளுமைகள் இன்று முழு இலங்கையினாலும் அங்கீகரிக்கப்படுகின்றனர்- இருபது முப்பது வருடங்களின் முன் இந்த நிலை இல்லை என்பது இரவீந்திரனின் கருத்து. அது சரியானதே. சி.வி. வேலுப்பிள்ளை மலையகப் படைப்பாளி என்பதாகவே கணிக்கப்பட்டு வரப்பட்டார். மாறாக தெளிவத்தை ஜோசப் இன்று இலங்கைச் சிறுகதைப் படைப்பாளிகளின் முதல் வரிசைக்குரியவர் எனக் கொண்டாடப்படுகின்றார். இப்படிச் சொல்வதால் சி.வி. யின் படைப்பாளுமை ஒன்றும் குறைவதில்லை. அப்போதிருந்த ஒதுக்கும் பார்வை இன்று பரந்த தளத்தில் அற்றுப் போனதால் இந்த மாற்றம் என்பதே கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

   இதில் வேடிக்கை என்னவென்றால், இரவீந்திரன் திரும்பத் திரும்ப சொன்னதை மறைத்து மலையகன் தனது கேள்வியாக முன்வைக்கும் விடயம் எப்படி அவருக்கு சாத்தியமாகியுள்ளது என்பது தான். ஒரு வலுவான மத்தியத்தர வர்க்கம் இன்று உருவாகி இலங்கைச் சமூக இருப்புக்குரியதான வளர்ச்சி வரவேற்கத்தக்கதே. அதே நேரம் இந்த மத்திய தர வர்க்கத்தினர் இன்றும் இலங்கை அரசால் புறக்கணிப்படுகின்ற மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு (தமது பெற்றோர்களுக்கு) துரோகம் இழைக்காது இருக்க வேண்டும். தோட்டத்தொழில் இப்போது மலையகத்துக்குரியதில்லை என்று சொல்லி, தமது நலனைப்பற்றி மட்டுமே பேசுவதன் வாயிலாக தோட்டத் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக போராடுவதை முறியடிப்பதற்கு உதவ வேண்டாம் என்று இரவீந்திரன் குறிப்பிட்டிருந்தார். தோட்டத்தொழிலாளர்களது சந்தாப்பணத்தில் ஊட்டம் பெற்ற தொழிற்சங்கங்கள் இன்று அரசியல் கட்சிகளாகப் பாத்திரமேற்று பதவிகளைப் பெற்றவுடன் மத்தியத்தர வர்க்கத்தினரது நலன் பேணவே முற்படுகின்றன. எழுச்சி பெறும் மத்தியதர வர்க்கமும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்குத் துரோகமிழைப்பதனாலேயே அவர்கள் தன்னெழுச்சியாக போராட வேண்டியுள்ளது என்றார். இந்த அம்சங்களை அவர் லெனின் மதிவானம் நூல் முன்னுரையிலும் குறிப்பிட்டிருந்தார்.

   மலையக ஆளுமை இன்று இலங்கை பூராவும் மதித்து வரவேற்றகப்பட்டுள்ளமையைக் குறிப்பிட்ட இரவீந்திரன் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் வ. செல்வராஜாவை விமர்சன உரையாற்ற அழைத்த போது குறிப்பிட்ட கருத்து முக்கியமானதாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கற்ற போது முதல் நிலையில் இருந்தவர் செல்வராஜா. மலையகத்தவர் என்பதால் அன்று உரிய இடம் அவருக்கு மறுக்கப்பட்டது. இந்தப் புறக்கணிப்புக்கு எதிராக யாழ்ப்பாண விரிவுரையாளர் ஒருவர் போராடிய போதும் அப்போது எதுவும் செய்ய முடியவில்லை. அன்று அந்தப் புறக்கணிப்பு இல்லையென்றால் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக அவரும் முழு இலங்கை ஆளுமையாக இனங்காணப்பட்டிருப்பார் என இரவீந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

   இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு இலங்கைத் தமிழருக்கான ஒரு சமஷ்டி என்று பேசப்பட்ட காலம் மலையேறி ஏனைய இரு தேசிய இனங்களான முஸ்லிம் மக்கள் – மலையக மக்களுக்கான சுயநிர்ணயமும் மற்றைய சிறுபான்மையினர் நலன்களும் பற்றி பேசப்படக்கூடிய விவாதத்தள விரிவாக்கத்தின் பேறு மலையக ஆளுமைகள் இன்று இலங்கை பூராவிலும் வரவேற்கப்படுதல். மலையகத்தின் வீறு கொண்ட எழுச்சியும் கவனிப்புக்குரியதாகும். இதன் போது தோட்டத் தொழிலாளர் புறக்கணிப்புக்கு உள்ளாவதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது, இரவீந்திரன் அந்த உரையில் குறிப்பிட்டது போல சொந்தக்கால்களில் நின்று போராடிப் பல வரலாறுகள் படைத்தவர்கள் மலையகத் தொழிலாளர்கள். புது வரலாறும் படைப்பர். மலையகன் உங்கள் திரிப்பு வேலைகளுக்குக் கூட அதைத் தடுத்துவிடாது முடிந்தால் நேர்மையுடன் செயற்பட்டு அதற்கு உதவ முயற்சி செய்யுங்கள்.

   1. மலையக மக்களது வாழ்க்கையில் மாற்றமில்லை தொழிலாளர்களது தோளப் பற்றீ ஏணீயாக்கி ஏறீ வந்ததும் அவர்கள் உதறப்படுவதே தொடர்கிறது.மலையக மக்கள் மத்திய தர வர்க்கமாய் மாறூகிறார்கள் என்பது காதில் பூ சுற்றூம் கதை.இண்றூம் தம் கூலி போதமால் போரடும் தோட்டத் தொழிலாளர் பிரச்சனைகள் தீர்க்கப் பட்வில்லை,போதுமான அளவில் பாடசாலைகள் இல்லை.எங்கிருந்து யாரை பேய்க்காட்டுகிறீர்கள்?

  2. ஒரு குறிப்பிட்ட கருத்துடன் ஒருவருக்கு உடன்பாடில்லாவிட்டால் அதை விளக்கி விவாதிப்பதில் தவறில்லையே.
   இடுகைகள் இரவீந்திரன் பற்றியோ அவரது உரை பற்றியோ முழுமையான ஆய்வாக இருக்க எதிர்பார்த்தால், அப் போக்கில், இந்த இணையத் தளத்தை வாசிக்கச் சினிமாத் திரை தேவைபடும்.
   இலங்கையில் மட்டுமல்ல பிற மூன்றாமுலக நாடுகளிலும் பின்தங்கிய சமூகத்தினர் சிலர் சமூக மேம்பாடு கண்டுள்ளனர். அவற்றில் எது முழுப் பிற்பட்ட சமூகத்துக்கும் பயன்பட்டுள்ளது?
   சமூக மேம்படுத்தல் ஒருவரின் சிறு முதலாளியச் சிந்தனைப் போக்கையே தூண்டுகிறது.
   சுயமுன்னேற்றம் மற்றச் சமூக அக்கறைகளை மேவி விடுகிறது. விலக்கான சிலர் அரசியல் சமூக உணர்வு கொண்டோராய் அமையக் காண்கிறோம். மற்றவர்கள் தப்பி ஓடுவோராகவே உள்ளனர்.
   எல்லச் சமூகங்களிலிருந்தும் காலப் போக்கில் படித்தோர், தொழிலதிபர்கள், உயர் கைவினைஞர்கள் எனச் சிலர் உருவாகின்றனர். அதை மட்டும் வைத்து ஒரு சமூகம் பிற்படுத்தப்பட்டதல்ல என்ற முடிவுக்கு வர முடியுமா?
   பற்றைக் காட்டுக்குள் நாலு தென்னை மரங்கள் நின்றல் அது தென்னந் தோப்பாகி விடுமா?
   மலயகக் கல்வி மிகப் பின்தங்கியநிலையிலே உள்ளது. தொழில் வாய்ப்புக்கள் இன்னமும் பெருமளவும் ஊதியம் குறைந்த தொழில்கட்கானதாகவே உள்ளது.
   எனவே ஒப்பீட்டளவிலான முன்னேற்றம், சமூக மேம்பாட்டைக் குறிக்கிறதா என்பது கவனமாக ஆராயப்பட வேண்டும்.

 3. ந. இரவீந்திரன்!
  ஓஹோ ! இவர் எப்போ கல்லா நிதி மன்னிக்கவும் கலாநிதி ஆனார்.?
  மக்களே கவனம் !!!

  1. யோகன்,
   வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கொட்டாதீர்கள்.
   ந. இரவீந்திரன் திருக்குறளில் கல்விச் சிந்தனை பற்றிய ஆய்வுக்கு முனைவர் பட்டம் பெற்றுச் சில ஆண்டுகள் ஆகின்றன.
   அவர் தன் பேரின் முன்னால் பட்டத்தைப் போட்டு விளம்பரப்படுத்துபவரல்ல. இதுநூல் முன்னுரையாதலால்நூலாசிரியர் விரும்பி இட்டது.

   பொறாமை பொல்லாதது!
   மக்களே கவனம்!!

   1. நன்றி. திரு. ந. இரவீந்திரன் பற்றிய உண்மையான தகவல்களை தெரிவித்தமைக்கு. சுத்த வீரன் ஒருவனைத் தாக்க வக்கற்ற பேடி ஒருவன் மறைந்திருந்த கண்களில் மிளகாய் தூலை தூவுவது போல திரு. ந. இரவீந்திரனின் கருத்துக்களை விமர்சன ரீதியாக எதிர்கொள்வதற்கு பதிலாக இப்படியும் ஒரு அற்பதனமா? (யோகனின் கருத்துகளுக்கு பதில்)

    லெனின் மதிவானம்

 4. முற்போக்கில் இருந்து பிற்போக்கிற்கு கவிஞர் கண.ணதாசன்

  ஆன்மீகத்திலிருந்து விடுதலைக்கு பாரதி மார்க்ச{யத்திலிருந்து பின்நவீனத்திற்கு கலாநிதி ரவீந்ரன்

  1. இந்த நண்பரின் கருத்து பரிதாபத்திற்குரியது. தமிழில் முதல் முதல் பின்நவீனத்துவம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தவர் ந. இரவீந்திரன் என்பதை இவர் அறியார். இதுவரையிலான ஆய்வுகளில் பின்நவீனத்துவம் பற்றிய முழுஜமயான விமர்சனத்தை இவரது எழுத்துக்கள் முன்வைத்து வருகின்றது என்பதை வாசக உலகம் அறியும்.

  2. முதல் முதல் பின்நவீனத்துவம் பற்றிய முழுமையான விமர்சனத்தை முன்வைத்தவர் யார் என்று நன்கு விசாரித்துத் தான் சொல்கிறிர்களா?

  3. தமிழில் பின் நவீனத்தை மார்கசிய கண்ணோட்டத்தில் விமர்சித்த முதல் தமிழ் நூல் ந. இரவீந்திரனின் பின் நவீனத்துவமும் அழகியலும் என்ற நூலாகும். இன்றுவரை பின் நவீனத்துவம் குறித்த காத்திரமான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றார். அவர் பின்நவீனத்துவ வாதியாக மாறிவிட்டார் என்பது நகைப்பிற்குசியதொன்றாகும். அப்படியாயின் பின் நவீனத்துவத்தை நியாயப்படுத்தி அவர் எழுதிய கூற்றுக்களை எங்காவது மேற்கோள் காட்ட முடியுமா? இவர்கள் என்ன பின்நவீனத்துத்தையோ அல்லது ந.இரவீந்திரனுடைய நூல்களையோ கற்றுவிட்டா எழுதுகின்றார்கள். ஏதோ பின்நவீனத்துவம் என்று எங்கோ கேள்விப்பட்டதைக் கொண்டும் இவ்வகையில் தாக்குவதன் மூலம் தனக்கும் ஓர் அங்கிகாரத்தை தா என மண்றாடி நிற்பதே இதன் அடிப்படை. இவ்வகையான தனிமனித தாக்குதல்கள் கொண்ட கருத்துக்களை வெளியிடுகின்ற போது இனியொரு போன்ற இணைய தளங்கள் பரிசீலனை செய்து வெளியிடுவது ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழி வகுக்கும்.

   சீண்டலே தொழிலாகி விடும் போது, புறக்கணிப்பது தகும்.

   ஜெயகாந்- சாமிமலை

  4. இரவீந்திரனின் நூல் பெருமளவும் (அப்போது அவர் கடுமையாக முரண்பட்டிருந்த்த) அ. மார்க்ஸுடனான ஒரு விவாதமாக இருந்ததே ஒழியப் பின்னவீனத்துவத்தின் மீதான முழுமையான விமர்சனமாய் அமையவில்லை.
   அதை விடச் சுருக்கமாக ஆனால் பின்னவீனத்துவச் சிந்தனையின் அடிப்படைகளைத் தகர்க்கக் கூடிய விதமாக சி. சிவசேகரம் எழுதிய வரலாற்றுப் பார்வையுடனான ஒரு கட்டுரை 1999இல் தினக்குரல் (இலங்கை) ஏட்டில் தொடராக வந்தது.
   இரவீந்திரனுக்கு முன்பே, மிக விரிவன விமர்சனம் கோ. கேசவனால் வழங்கப் பட்டுள்ளது. அதை விட என். வேணுகோபாலின் தமிழாக்கப்பட்ட உரை ஒன்றும் காலக்குறியில் வெளியானது.
   இ. முருகையன் தமிழாக்கிய ஒரு கட்டுரையும் சிவசேகரத்தினதும் கேசவனதும் வேணுகோபாலினதும் விமர்சனங்களும் தொகுக்கப்பட்டு 2007இல் இலங்கையில் நூலாக்கப்பட்டன.

 5. பாரதியியல் ,பின் நவீனத்துவம் ,தலித்தியம் ,ஓட்டு பொறுக்கும் அரசியல் என்ற ஒரு பரிமாணம் தமிழகத்தில் (திருமாவளவனின் தளபதி ரவிகுமார் )வளர்ந்திருக்கிறது .அந்த அற்புதமான பரிணாம வளர்ச்சியை இலங்கையிலும் வளர்க்காமல் இருந்தால் புண்ணியம்.”கண்டதை எல்லாம் படிக்க கூடாது ” என்றார் மாவோ .

  1. மாஓ எங்கே ”கண்டதை எல்லாம் படிக்க கூடாது” என்று சொன்னார்?

   இலங்கையைப் பொறுத்தவரை, பின் நவீனத்துவமும் தலித்தியமும் தமிழரிடயே மண்கவ்வி விட்டன. அதற்கு மாக்சிய லெனினியர்கள்நல்ல பங்காற்றியுள்ளனர்.
   இலங்கையில் பாரதி பற்றிய ஆய்வு நோக்கு, பொதுப்படக், கைலாசபதிக்குநெருக்கமாக அல்லது அதினும் சற்று விமர்சனப்பாங்காக உள்ளது என்றே நினைக்கிறேன்.
   பாராளுமன்றப் பாதை பற்றி மாக்சிய லெனினியர்கள் மட்டுமன்றித் திரிபுவாதிகளும் நன்கறிவர் — ஆனால் திரிபுவாதிகளால் வெளியில் பேச இயலாது.

 6. மாக்சிய சொற்றோறடர்களின் பின்முதலாளித்துவ பாராளுமன்றவாதம்மறைந்து மாக்சியதத்துவமாய் காட்டியது ஒருபக்கம் ……………………..இந்த குறுங்குழுவாத அமைப்புகளின் அதிகாரங்களைக்கண்டும்பின்நவீனத்துவவாதியிடம் சரன் புக நேர்ந்தது புனிதமானது ஏதுமில்லை என்று பின்நவ{னத்துவமும் அழகியலும் புத்தகத்திள் 4கூறிய ந.இரவ{ந்திரன் அ.மார்க்சை அழைத்து சென்று வடக்கிலும் கிழக்கிலும் மலையிலும் தலித்திய போராட்டத்தில் மக்கள் விடுதலை ஆரம்பமாகின்றது என்று கூறுவதனை ன் ஞாயப்படுத்துகின்றீர்கள்

  kingsley

 7. ஜெயகாந்தனுக்கு பதிலாக
  மலையக சாகித்திய விழாவில் விருது பெருவதற்காக விண்ணப்பம் போட்டு விருது பெற்றவர்கள் இன்று அங்கிகாரம் பற்றிபேசுவது வேடிக்கையான விடயம் எதிர்ப்பிலக்கியத்தின் பாதையில் நடப்பவனுக்கு அங்கிகாரம் இணையத்தில் தேட அவசியம் இல்லை மாக்சிய கட்சியில் அங்கிகாரம் கிடைப்பதுவே இன்பம் பயக்கும் மக்களின் அங்கிகாரமே மேன்மையானதாகும் அ.மார்ஸ்க் ஆதவன் தீட்சன்யா அலெக்சாந்தர் ஆகியோரின் வருகையும் அவர்களுக்கு அங்கிகாரம் பெற்று கொடுப்பதற்காய் சென்று வந்த பயணங்கம் ந.இரவீந்திரனின் சிதைவினை அடையளம் காட்டி நிற்கின்றன சை.கிங்ஸ்லி கோமஸ்

  1. இது எனது சொந்த பெயர். புனைப்பெயரில் ஒழிந்துக் கொண்டு எழத வேண்டிய அவசியமோ அல்லது யாருக்கும் அடிமாட்டு வேலை செய்கின்ற அவசியமோ எனக்கு இல்லை. மலையக சாகித்திய விழா தொடர்பாக நீங்கள் கூறும் கருத்து சரியானதென்றால் உமது ஒரு நிமிட திரைப்பட வெளியீட்டில் இவர்களை அழைத்து அதிலும் முதலில் ஏன் அய்யா கௌரவித்தாய்(. யாவற்றுக்கும் மேலாக இந்த விழாவிற்கு நகர சபை தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவருமான டாக்டர் அ. நந்தகுமார் வந்த போது அலறியடித்து ஓடி அவருக்காக எல்லா நிகழ்ச்சிகளையும் அவருக்காக ஒழுங்கமைத்தது எந்த மக்கள் அங்கிகாரம். ஓ நீங்கள் கட்சியின் அங்கிகாரத்தை பெற்றுள்ளீர்கள் நான் மறந்தே போயிவிட்டேன். இந்த லட்சணத்தில் மக்கள் அங்கிகாரத்தையும் இல்லாத பொல்லாதற்கும் இரவீந்திரன் மீதா தாக்குதல்கள் வேறு. இவ்வகையான சில்லறைத்தனங்களை விடுத்து இப்போது நீங்கள் சூரிகாந்தியில் எழுதிவருவது போன்ற கட்டுரைகளை எழுதுவீர்களானால் பயன் மிக்கதாக அமையும்.

  2. ஜெயகாந்
   நீங்களும் ஒர் “சொந்தப் பேர்” என்பது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அதை ஒரு தகுதியாக்கப் பார்க்காதீர்கள்.

   “சீண்டலே தொழிலாகி விடும் போது, புறக்கணிப்பது தகும்.
   ஜெயகாந்- சாமிமலை” என்று எழுதிவிட்டு இப்போது என்ன செய்கிறீர்கள்?

 8. நல்லா சொன்னீர்கள் kingsley!.

  இப்படி மாக்சியத்தை சுய நலன்களுக்காக பயன் படுத்துவது என்பது பல்கலை கழக ( எல்ல்லாம் தெரிந்த மேதாவிகள் ) வட்டத்தினருக்கு ஒன்றும் புதிதல்லவே.இவர்களை தான்( (டாக்டர்களை ) டானியல்” பரியாரிமார் “என்று சேஷ்டை பண்ணுவார்.

  1. திரு.ந.இரவீந்திரன் தமிழக நண்பர்களான அ. மார்க்ஸ், ஆதவன் தீட்சணயர், வே. அலெக்ஸ் முதலானோருடன் கொண்டிருக்கும் உறவுக் குறித்து சில கருத்துக்கள்.

   முதன் முதலாக சீனா அமெரிக்காவுடன் உறவு ஏற்படுத்திய போது தோழர் மாஓ அமெரிக்க ஜனாதிபதி நிக்சனுடன் கைக்குழுக்கியது தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவர் வினாவிய போது அதற்கு மாஓ அளித்த பதில்: அமெரிக்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவரூடாகNவு நாம் அமெரிக்க மக்களை அணுக முடியும.; அமெரிக்க மக்கள் உங்களை தெரிவு செய்திருப்பார்களாயின் இதனை விட மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்பதாக அமைந்திருந்தது. கட்சிக்கும் கட்சிக்கும் இடையிலான உறவும், கட்சிக்கும் மக்களுக்குமான உறவும், நாட்டுக்கும் நாட்டுக்குமான உறவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

   நிதானமான இடதுசாரி கட்சியொன்று இலங்கையில் இல்லாத போது தனிமனிதர்கள் இவ்வகையான உறவுக் குறித்து சிந்தித்தல் காலத்தின் தேவையாகின்றது.

   ஆதவன் தீட்சணா இந்திய கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர். அவரது செயற்பாடுகளோ அல்லது எழுத்துக்களோ என்றுமே தலித்தியவாதத்திற்குள் மூழ்கியதல்ல. ஆனால் தலித் மக்களின் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கலகக் குரலை அவரது எழுத்துக்களில் காணலாம். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் போராட்டம் முனைப்பு பெற்ற போது இந்த உணர்வுகள் இலக்கியமாக்கப்பட்டன என்பதும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளத்தக்கது.

   வே. அலக்ஸை பொறுத்தமட்டில், இன்று தலித்துகள்; தொடர்பாகவும், அவர்கள் சார்ந்த தலைவர்கள் தொடர்பாகவும் பல பதிவுகளை ஆவணப்படுத்தி வருகின்றவர். அவர் இலங்கை வந்திருந்த போது திரு. ந. இரவீந்திரன் அவர்கள் இந்தியாவில் இருந்தார் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை மேற் குறிப்பிட்ட குறிப்புகள் காட்டுகின்றது. அது வேறுவிடயம்;;;: ஆனால் இரவீந்திரன் அலக்ஸின் பங்களிப்பினை மறைக்க முனைந்ததில்லை.

   அ.மார்க்ஸ், தமிழியல் சூழலில் பின் நவீனத்தை அறிமுகப்படுத்தியதில் முதன்னையானவர். இது குறித்து ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைத்தவர் ந. இரவீந்திரன். இதைத் தவிர அ. மார்க்ஸின் ஆய்வுகள் பலவற்றில் சமுதாயம் சார்ந்த உள்ளடக்கக் கூறுகளும் காணப்படுகின்றன என்பதை அவரது எழுத்துக்களை பாடிப்பவர்களுக்குப் புரியும்.

   இன்று இலங்கையில் இடது சாரி அமைப்பு என்பது சிதைந்து சின்னாப் பின்னமாகிய சூழலில் இத்தகைய அதிதீவிர வாதங்களின் ஊடாக சகலவற்றையும் நிராகரிக்கின்ற போக்குகள் முனைப்பது தற்செயல் நிகழ்ச்சியல்ல.

   அதிதீரவாத சூலோகங்களை சுமந்து நிற்பதால் மட்டும் ஒருவர் இடதுசாரியாகிவிட முடியாது. தேர்தலில் போட்டியிட்டு குறைந்தபட்சம் ஒரு மாகாணசபை மந்திரியாகவாவது வந்து விட வேண்டும் என்ற ஆசையில் தேர்தலில் பங்குபற்றி பலருடன் சந்தர்ப்பதற்கு ஏற்ப கூட்டு சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு மக்களால் பதிலடி கொடுக்கப்பட்ட பின்னர் மக்களையே வசைப்பாடுகின்றவர் (பணத்திற்காகவும், சாராயத்திற்காகவுமே வுhக்களிப்பவர்கள் மலையக மக்கள் தமது ஓ மன்னிக்கவும் தனது கட்சிபத்திரிக்கையில் எழுதியவர்கள்) எப்படி இடது சாரியாகிவிட முடியும்.

   பிழையான வாழ்க்கை முறைகள், நேர்மையீனங்கள் இத்தகைய அதிதீவரவாத கோசங்களை எழுப்ப செய்துள்ளமை ஆச்சிரியப்பட தேவையில்லை. யுதார்த்தப்ப+ர்வமான கருத்துக்களை சித்தாந்த ப+ர்வமாக எதிர்கொள்ள முடியாது செல்கின்ற போது இத்தகைய சில்லறை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.
   இத்தகையவர்கள் திரு. இரவீந்திரனை தனிமனித தாக்குதலுக்கு உட்படுத்துவது இந்த பலவீனத்தின் பின்னணியிலே.

 9. கெ.ஏ.நவரத்னத்திற்கு பதிலாக
  தமழ் தேசிய வாதத்தின் பரிசுகளை ரசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு வர்க்கப்போராட்டத்தைப்பற்றி பேசவும் எழுதவும் மாத்திரமே தெறியும் அதற்காக வாழ்வது என்பது மக்களை நோக்கி போவது. அவசர கால சட்டம் மக்கள் மத்திக்கு செல்ல தடையாக இருந்ததுவும் துப்பாக்கிக் கலாச்சாரம் மக்கள் நேசர்களை குறி வைத்தகாலங்களிலும் பதுங்கியிருந்தவர்கள் உண்மையான மார்க்ஸிஸ்டுகளை விமர்சித்துக்கொண்டுமாத்திரமே இருந்துப் பழகியவர்கள்.மக்கள் மத்திக்கு செல்ல சிறந்த காலம் தேர்தல் காலம் என்பது மாத்திரம் அல்ல பின்நவீனத்துவத்தை நோக்கிய நகர்வு என்பது ஏகாதிபத்தியத்தின் கால்களில் பதுங்குவதற்கான முதல் அடி மத வாதிகள் இன்று அனைத்து மார்க்சிஸ்டுகளும் மதத்தின் காலடியில் மண்டியிட்டு விட்டனர் என்பது மதத்தினுல் மார்க்சியம் தேடுபவர்கள் தேடித்தந்த வெகுமதியாகும்

 10. KA Navaratnam:
  “நிதானமான இடதுசாரி கட்சியொன்று இலங்கையில் இல்லாத போது” — இதற்கு என்ன பொருள்?
  இடதுசாரிக் கட்சி என்று திரு.நவரத்னம் எதைக் கருதுகிறர் என்று விளக்காமல் தொடர்ந்து விவாதிப்பது கடினம். என் வாசிப்பில், அவரது அளவுகோல்களின் படி, திரிபுவாதிகள் முதல் ற்ரொட்ஸ்கிவாதிகள் வரை எல்லாரும் “நிதானமாகவே” உள்ளனர். ஜே.வி.பியும் “நிதானமாகவே” உள்ளது.
  யாரை, ஏன் நிதானமற்றோர் என அவர் சொல்லுகிறார் என்று காரணங்களுடன் விளக்கின் மேற் கொண்டு பேசலாம்
  இலங்கை அரசின் “புலி எதிர்ப்புக்” காசில் பயணங்கள் மேற்கொண்டு வந்து போனவர்கள் “மிக மிக நிதானமானவர்கள்” தான்.
  அ. மார்க்ஸின் நேர்மையீனத்தை அறிய அவரது ‘தீராநதி’ இலங்கைப் பயணக் கட்டுரைத் தொடரைப் பார்க்கலாம்.

  மாஓ பற்றிய மேற்கோளை நவரத்னம் எங்கிருந்து பெற்றார் என்று சொன்னால் உதவியாயிருக்கும்.

 11. ஜெயகாநத்திற்கு பதில்
  உங்கள் விமர்சனங்கக்கு நன்றி நீங்கள் புனைப்பெயா கொண்டு எழுதுவதாக யாரும் கூறியதாய் நாம் அறியவில்லை.
  இலங்கை தொடர்பாக இந்திய மேலாதிக்கத்தின் கரங்கள் அன்மைக்காலங்களில் தனது கோரமுக்தினை அரிதாரம்பூசி அடையாலம்காட்டி வருவது தாங்கள் அறியாததல்ல
  இலும் இலங்கையில் பிரித்தாளும் தந்திரத்தை சிறப்பாக செய்து வருகின்றது இந்த நிகழ்ச்சி நிரலின் ஒறு பகுதியாக சாதிய சிந்தனையை விதைப்பதாகவே அடையாலப்படுத்தலாம் இந்த நிலைமையினை நோக்கும் போது நமது கல்விமான்கள் இதற்கு துணைபோவது விமர்சனத்திற்கு காரனமானது என்றால் பிழையாகுமா குறுந்திரைப்படநிகழ்ச்சியில் இன்னும் ஏன் இப்படி விவரன படத்தில் இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் உட்பட மலையக அரசியல் கட்சிகளை விமர்சித்து தயாரிக்கப்பட்டவை என்பதுவும் இந்த நிகழ்விற்கு நகர சபை தலைவரை அழைத்ததுவும் தங்களின் பார்வையில் விமர்சனத்துக்குல்லாகும் என்றால் வாழ்க உங்கள் பார்வை கிங்ஸ்லி

Comments are closed.