மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!

இலங்கையில் தமிழர்கள் என்றால் எமக்கு நினைவிற்கு வருவது வட கிழக்கில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் தான். இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்புகளாகத் திகழும் மலையகத் தமிழர்கள் குறித்து நாம் சிந்தித்துக் கூடப்பார்பதில்லை. காலனியக் காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கூலியடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட இலங்கைப் பிரஜைகளான இவர்களின் உழைப்பில் தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் கூட இலவசக் கல்வி கற்றிருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக அடிமைகளாக நடத்தப்படும் உழைப்பாளிகளான இவர்கள் மத்தியிலிருந்து உருவாகும் ஒவ்வொரு சமூக அசைவியக்கமும் முக்கியத்துவப் படுத்தப்படவேண்டும்.

தோழர் சண்முகதாசன் தலைமையிலான செங்கொடிச் சங்கத்தின் தலைமையகம் அமைந்திருந்த தலவாகலைக்கு அருகாமையில் ஹட்டன் என்ற அழகிய நகரம் மலைகளும் அருவிகளுமாகப் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும். அங்கு 24.07.2010 இல் ஒரு இலக்கியச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்ட இச் சந்திப்பில் இந்தியாவிலிருந்து ஆதவன் தீட்சண்யாவும் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்வுகள் குறித்து தோழர் ஏ.கே.நவரட்ணம் அனுப்பியிருந்த செய்திக் குறிப்பின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது:

ஏற்பாடு முச்சந்தி இலக்கிய வட்டம்: அதன் ஆலோசகர்களில் ஒருவரான ந. இரவீந்திரன் தலைமை தாங்கினார். மலையகத்தின் மூத்த படைப்பாளிகள், கல்வியியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் முதல் இளம் தலைமுறை ஆர்வலர்கள் வரை பலரும் கலந்து கொண்டு ஆரோக்கியமான கருத்தாடற் களமாக ஆக்கியதால் சந்திப்பினை அர்த்தமுள்ளதாக்கியிருந்தனர்.

தலைமையுரையில் இரவீந்திரன், ஒருதசாப்தங்களின் முன்வரை அதற்கு முன்பு இருந்த எழுச்சியின் பேறாக கார்க்கி பெரிதும் ஆதர்ச சக்தியாக இருக்க முடிந்தது. இன்றைய தலைமுறையோ செல்லும்வழி இருட்டு என்ற திகைப்புடன் முச்சந்தியில் நின்று மார்க்கம் எதுவென அறியாது மயங்கும் நிலையில் அல்லாடுகிறது. அந்தவகையில் பெயர்மாற்றம் காலப்பொருத்தமானது. நாம் அனைத்தும் அறிந்தவர்கள், வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும் சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது. முச்சந்தியில் கூடும் மக்களின் இருப்புக்கு நிகராக முன்முடிவுகள் இல்லாமல் இங்கே விவாதிக்க வேண்டியவர்களாக கூடியுள்ளோம்.

மனந்திறந்த கருத்தாடல்கள் வாயிலாக எமக்கான மார்க்கத்தை கண்டறிந்து செயற்பாட்டில் நாம் முன்னேற வேண்டும். மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய இடதுசாரி சக்திகள் ஒன்றில் வலதுசாரி சந்தர்ப்பவாதிகளாக அல்லது அதிதீவிர இடதுசாரி வாத வாய்ச்சவடால் பேர்வழிகளாக ஆகிவிட்டார்கள். இன்று அதிதீவிர இடதுசாரிக் கோசங்களால் தம்மைப் பெரிய புரட்சியாளர்களாக வேடம் போடுபவர்கள் இளம் தலைமுறையை நச்சுப்படுத்துபவர்களாயுள்ளனர்.

முப்பது வருட யுத்தத்தினால் நாடு முழுமையிலுள்ள மக்கள் நல நாட்ட சக்திகள் அழிக்கப்பட்டதோடு இன்றைய வெற்றிடத்துக்கு தொடர்புள்ளது. அதேவேளை இந்த நெருக்கடி எமக்கு மட்டும் உரியதல்ல. இயல்பான வாழ்வில் முன்னேறும் இந்தியாவிலும் அரசியல் நெருக்குவாரங்கள் இடதுசாரிகளுக்கு பெரும் இடர்ககளை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய புதிய சூழலுக்கு அமைவான மார்க்சியப் பிரயோகத்துக்கு ஏற்ற விவாதங்கள் அவசியப்படுகின்றன.

அறிமுக உரையை நிகழ்த்திய திரு. வ. செல்வராஜா மலையக மக்கள் தொடர்பாகவும் அதன் பின்னனியில் மலையக தேசியம் தொடர்பாகவும் தமது அறிமுக உரையை நிகழ்த்தினார். இன்று மலையக மக்களின் சமூக இருப்பு தொடர்பான வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இம்மக்களை மலையக மக்கள் என்று அழைப்பதா? அல்லது இந்திய வம்சாவழி தமிழர் என்று அழைப்பதா? என்பதாகவே அவ்வாதங்கள் அமைந்திருக்கின்றன. திரு செல்வராஜ மலையக மக்கள் என்று அழைப்பதை அழுத்தமாக வழியுறுத்திய அவர் தமது கருத்தை பின்வருமாறு முன்வைத்தார்:

மலையக மக்களின் அரசியல் சமூக பொருளாதார வாழ்வியல் அம்சங்களை ஒட்டி பார்க்கின்ற போது அவர்களை மலையக தமிழர் என்றழைபபதே பொருத்தமானது. மலையக தமிழர் என்று அழைக்கின்ற போது அதன் ஆத்மாவாக அமைவது பரந்துபட்ட உழகை;கும் மக்களாவார். ஒரு புறமான இன காலனித்துவ ஆதிக்கமும், சமூக ஒடுக்கு முறைகளும் மறுபுறமான சமூக உருவாக்கமும் இணைந்து இம்மக்களை தனித்துவமான தேசிய இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் இந்திய வம்சாவழி தமிழர் என்ற பதம் மலையக சமூக அமைப்பின் பண்பாட்டு பாராம்பரியங்களை அதன்; பரந்துப்பட்ட உழகை;கும் மக்களின் நலனிலிருந்து அன்னியப்படுத்தி பார்ப்பதாகவே அமைந்திருக்கின்றது.

யாவற்றுக்கும் மேலாக இந்திய முதலாளிகளின் நலனை காக்கின்ற அடிப்படையில் தான் இந்திய தமிழர் என்ற பதம் பாவிக்கப்பட்டு வருகின்றது. இன்று மலையகத்தில் தோன்றியுள்ள புதிய மத்தியத்தர வர்க்கம் இப்போக்கை அங்கிகரிப்பதாவும் படுகின்றது. இப்போக்கானது மலையகத்தின் ஒட்டு மொத்தமான சமூக இருப்பையும் சிதைப்பதாக அமையும்’ என்றார்.

ஆதவன் தீட்சண்யா தனது உரையில் சென்ற வருடம் ஒக்டோபர் மாதத்தில் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தந்தபோது அட்டன் வந்தமையுடன் தொடர்புபடுத்தி இரண்டாவது பயனங்குறித்து பேசினார், இந்தியாவிலும், உலகெங்குமே இடதுசாரி இயக்கங்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன. இது தொடர்பில் தென்னமெரிக்க அனுபவங்களை வெளிப்படுத்தும் நூல் ஒன்று தமிழில் பாரதி புத்தகாலயத்தால் வழங்கப்பட்டுள்ளமை காலப்பொருத்தமுடையது.

தனது உரையை ஆதவன், மார்த்தா ஹர்னேக்கர் எனும் மார்க்சியரின் ஷஷஇடதுசாரிகளும் புதிய உலகமும்|| எனும் அந்த நூலை அடிப்படையாக முன்வைத்து ஆற்றியிருந்தார். உலகெங்கிலும் இடதுசாரி இயக்கங்கள் புதிய உலகச் செல்நெறிக்கு அமைவாக மார்க்சியத்தை பிரயோகிக்க இயலாத நிலைக்க அமைவாக மார்க்சியத்தை பிரயோகிக்க இயலாத நிலைக்கு உள்ளாகியுள்ளன. சோவியத் பானியிலான கட்சியமைப்பு இன்று கேள்விக் குறியாகியுள்ளது.

அன்றைய எதேச்சாதிகார ஆட்சியில் ருஷ்யாவில் கட்டியெழுப்பப்ட்ட மாதிரியை ஜனநாயக நாடுகளின் கம்யூனிஸ் கட்சிகளைக் கட்டியெழுப்பிட முடியாது. சோவியத்பாணி தோல்வியடைந்ததாலேயே மார்க்சியம் தவறென்று சொல்லிவிடவும் முடியாது. தோசை சுட்ட ஒருவர் கருக விட்டதாலேயே சமையல் குறிப்பு நூல் தவறென்று சொல்லிவிட முடியாது. உண்மையில் இன்றைய சூழலுக்கு பிரயோகிக்க ஏற்றவகையில் மார்க்சிடம் கற்றுக்கொள்ள இயலும்.

இவ்விடத்தில் இடதுசாரிகளாகிய நாம் எதனை செய்தோம் அல்லது எதனை செய்ய வேண்டும் என்பது பற்றி சிந்தித்தல் அவசியமாகும். புழைய பெருமைகளை பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. பெருங்காய டப்பா எவ்வளவு காலத்திற்கு மனக்கும். இன்று உலகமயம் என்பது பாரதூரமான விளைவுகளை நம் மத்தியில் ஏற்படத்தியுள்ளது. அது தாராளமயத்தின் மூலமாக தேசிய எல்லையை தாண்டி ஒரு ஒற்றைச் சந்தையை உருவாக்குவதன் மூலமாக அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து வருகின்றனர். இங்கு மனிதர்கள் கூட விலைப் போகும் சரக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் தான் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் மக்கள் மத்தியில் இடதுசாரி மனோபாவம் கொண்ட ஆட்சியை உருவாக்கியுள்ளனர். இங்கு இந்நாடுகள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டன, எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளத் தவறின என்பது பற்றிய தெளிவான பார்வை அவசியமானதாகும்.

மேலும் இன்று இயங்க கூடிய இடதுசாரிகளை கட்சி சார்ந்த இடதுசாரிகள், சமூகம் சார்ந்த இடதுசாரிகள் என இரண்டுவிதமாக வகைப்படுத்தலாம். மக்களின் விடுதலைக்காக ஒரு ஸ்தாபனமாக இணைந்து சமூகமாறறப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற செயற்பாட்டாளராக செயற்படுபவர்களை கட்சிசார்ந்த இடதுசாரிகள் என கூறலாம். இதற்கு மாறாக கட்சியில் அங்கம் வகிக்காத அதேசமயம் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போர்க்குணத்தையும் செயற்பாடுகளையும் கொண்டுள்ளவர்களை சமூகம் சார்ந்த இடதுசாரிகள் எனக் குறிப்பிடலாம். இன்றைய சூழலில் புதிய தாராள மயமாக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இவ்விரு சக்திகளும் ஐக்கியப்படுவது காலத்தின் தேவையாகும். எனவும் ஆதவன் தீட்சண்யா தமது உரையில் குறிப்பிட்டார்.

இவ்வகையான சூழலில் இடதுசாரிகள் தமது புதிய சூழலுக்கு ஏற்றவகையில் தம்மை புனரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்கள் நடைப்பெற்றன. இக்கலந்துரையாடலில் திருவாளர்கள். ஓ. ஏ. இராமையா, லெனின் மதிவானம், ஜெ. சற்குருநாதன், கே. மெய்யநாதன், அ.ந. வரதராஜா, கு. இராஜசேகர், முதலானோர் கலந்துக் கொண்டனர். நன்றியுரையை திரு. ஜே. பிரான்சிஸ் ஹலன் வழங்கினார்.

18 thoughts on “மலையகத்தில் முச்சந்தி இலக்கியவட்டம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்பு!”

 1. ஆதவன் தீட்சண்யா,
  //இன்று அதிதீவிர இடதுசாரிக் கோசங்களால் தம்மைப் பெரிய புரட்சியாளர்களாக வேடம் போடுபவர்கள் இளம் தலைமுறையை நச்சுப்படுத்துபவர்களாயுள்ளனர்.// என்று இங்கே கூறுகிறார் ரவீந்திரன். இக் கூற்று நீங்கள் சார்ந்த சீ.பி(எம்) கட்சியை நினைவுபடுத்தவில்லையா? பழங்குடி மக்களின் அழிப்பிற்குத் துணை போகும் துரோகத்தை நீங்கள் சார்ந்த கட்சி ஆதரிக்கும் போது எப்படி அந்தக் கட்சியில் உங்களால் உறுப்பினராக இருக்க முடிகிறது?
  நந்திகிராமில் ஆரம்பித்து எத்தனை படுகொலைகள்? இது தான் கம்யூனிசம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது நீங்கள் மௌனமாக புலிகளை மட்டும் கண்டித்தீர்கள் என்பதை எப்படி விளக்குவீர்கள்?
  உங்களிடம் சில கேள்விகள்:
  1. ராஜபக்சே குறித்த உங்கள் கருத்து என்ன?
  2. ஒடுக்கு முறைக்கு உள்ளான தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கிறீர்கள?
  3. பழங்குடி மக்கள் அழிக்கப்படுவதை ஆதரிக்கிறீர்களா?
  4. சீ.பி(எம்) இன் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தத் தயாரா?

 2. ஆதவன் நீங்கள் எத்தனை வருடமாக ஈழத் தமிழர் தொடர்பிலும், மலையகத் தமிழர் தொடபிலும் பேசுகிறிர்கள். தலித் அரசியலை இலங்கையில் அவதியுள்ள தமிழ் தேசிய இனப் போராட்டத்திற்கு எதிராக நிறுத்திய உங்களின் இன்றைய நண்பர்கள் டக்ளஸ் தேவானந்தாவோடு சேர்ந்திருப்பட்தில் உங்களுக்கும் உடன்பாடு உண்டு இல்லையா? ஒடுக்கப்படும் தலித் மக்களின் அரசில் இலங்கையின் முன்னெடுக்கப்படுவதன் நோக்கம் உண்மையான தலித் விடுதலை நோக்கிலா? அல்லது ஈழத்தமிழர்களுக்குள் குழப்பம் ஏற்படுத்தவா? இதையும் சேர்த்துச் சொல்லவும்

 3. கண்ணுகளா !. இந்திய வம்சா வழிகள் என்று நல்ல தமிழில் நீங்கள் அல்லைக்கும் மலையாக தமிலர்களுக்க்கே இந்திய அரசு ஒன்றும் பெரிதாக செய்து கிழித்த தாக சரித்திரம் இல்லை ..சுமா நீங்கள் “தொப்புள் கொடி” என்று தூரத்து உறவை தூக்கி தூக்கி காதினாலும் ஏதாவது நடக்கும் என்றா நினிகீங்க? அதுவும் தமிழ் மண்ணில் அந்த ஹிந்தி பேசும் இந்திய தலை மகனை போட்டு தள்ளிய பின் ?. லூசுபயளுகள்…கண்ணை திறவுங்கோ ..பம்மாத்து பன்னுரத்தை நிறுத்துங்கோ..

 4. சந்திக்கு வர சகுனம் பார்த்திரப்பவர்களுக்காய் நடீகர் விஜேகாந்த் கதவடைத்திருப்பது வும் சி பி எம் தலைமைகலும் விஜேகாந்த் கதவுகளுக்கு பக்கத்தில் யாசகர்களாய் தேர்தல் கூட்டமைப்பிற்காய் தூங்கி கிடக்கும் காலத்தில் ஆதவன் தீட்சன்யா இலங்கையில் புரட்சி செய்யவும் மலையகத்தைப்புரட்டவும் புரப்பட்டதுவும் தோழர் சன்முக தாசன் செங்கொடி சங்கம் ஆரம்பித்த அட்டன் நகரில் செங்கொடி சங்கம் ஆரம்பித்த மக்கள் அச்சகம் விற்பனை செய்யப்பட்ட அட்டன் நகரிலே ஓ.ஏ.இராமைய்யாவுடன் சேர்ந்து இலக்கியம் வளர்க்கும்……….ம்…..பேசப்படாது பேசினால் அதி தீவிர வாதி

 5. ஆதவன் தீடசண்யா வெல்லாம் கொமடியாயிட்ட பின்னர் இந்தக் கதையெல்லாம் வேஸ்ட்…….

 6. i was happy to hear the news about the conference and hoped this meeting could be helpful to work out a new path..but lost the hope that they have invited Adavan theedsania….

 7. ஆதவன் தீட்சண்யா என்பவர் திரிபுவாத கட்சியில் இருப்பவர் .பழங்குடி மக்களின் அழிப்பிற்குத் துணை போகும் கட்சியின் பிரதி நிதி .இவர்களுடனான தொடர்புகளை வைத்திருப்பவர்களும் சந்தேகத்குரியவர்களே.

 8. ஜெயலலிதா என்னும் புரட்சி செல்விக்கு அடி மாட்டுத்தனம் செய்யும் சிபிஎம் மீது இல்லாத விமர்சனங்கள் இலங்கையின் நேர்மையான மர்க்சிய லெனினியர்கள் மீது தேவையின்றி வைப்பதானது ஸ்டாலின் மீது ரொஸ்ட்கி வைத்த விமர்சனத்திற்கு சமமானதாகவே காணலாம் ரொட்ஸ்கியின் சர்வதேசபுரட்சியின் ரணங்கள் இன்று மாக்ஸியத்தை சிதைவடைய செய்ததன் பங்கு தொடர்பாக (இன்றைய தலைமுறையோ செல்லும்வழி இருட்டு என்ற திகைப்புடன் முச்சந்தியில் நின்று மார்க்கம் எதுவென அறியாது மயங்கும் நிலையில் அல்லாடுகிறது. அந்தவகையில் பெயர்மாற்றம் காலப்பொருத்தமானது. நாம் அனைத்தும் அறிந்தவர்கள்இ வழிப்படுத்த வந்திருக்கிறோம் என எவரும் சொல்லமுடியாத நெருக்கடி நிலை இன்று உள்ளது. முச்சந்தியில் கூடும் மக்களின் இருப்புக்கு நிகராக முன்முடிவுகள் இல்லாமல் இங்கே விவாதிக்க வேண்டியவர்களாக கூடியுள்ளோம்.
  இந்தகருத்தக்களும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய இடதுசாரி சக்திகள் அதிதீவிர இடதுசாரி வாத வாய்ச்சவடால் பேர்வழிகளாக ஆகிவிட்டார்கள். இன்று அதிதீவிர இடதுசாரிக் கோசங்களால் தம்மைப் பெரிய புரட்சியாளர்களாக வேடம் போடுபவர்கள் இளம் தலைமுறையை நச்சுப்படுத்துபவர்களாயுள்ளனர்.)
  என்னும் கருத்துக்களின் அடிப்படையில் தனிமனித சங்கடங்களையும் ஐக்கியப்பட்டு புரட்சி நோக்கிய பாதையில் பயணிக்க முடியாத மனஅழு த்தங்களையும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது தனிமனித அங்கிகாரம் என்பது மாக்ஸிய அமைப்பில் வாழ்வியல் கருத்தியல் என்னும் அடிப்படையிலேயே வழங்கப்படும் இது அதிதீவிர வாதம் என்றால் சமரசம் தான் சரியான மாக்ஸியம் என்றாகி விடும்
  இந்த நிலையினை நேர்மையாக நோக்கும் போது சரியான மார்க்சி வழியைய் காணலாம்

  1. கிங்கிஸ்லி எம் ஜி ஆர் பாடல் போல் உணர்ச்சி வசப்பட வைக்கிறார். நண்பர்களோடு அமர்ந்து சிங் கிள் மோல்ல்ட் விஸ்கி அடிக்கும் போது ஏற்படும் போலொரு உற்சாகம் ஏற்படுகிறது,ஆனால் ஏதோவொரு புளீத்துப் போன பாலின் வாசம் தவிர்க்க முடியாது வருகிறதை தவிர்க்க முடியவில்லை.

 9. இலக்கியம் என்பது பசியடங்காத பசி ஆனால் இலக்கியக் கூட்டமெல்லாம் வடையும் தேத்தண்ணீயும் குடித்து அரசியல் பேசுவதாய ஆகிப்போனது வேதனையானது.செக்கோ,நிலகொவிச் டொஸ்கி.,கோணங்கி என்றூ பேசுவார்கள் என எதிர்பார்த்தால் கறீக்கு உதவாத கதைகள பேசி கட்டிப்பிடித்து உருள்கிறார்கள் நம்மவர்களீன் இலக்கியக் கூட்டம் நடுத்தெருவில் கிடக்கும் குப்பை போலாயிற்றூ.என்ன செய்வது கோயில் மரத்து மணலில் கவிதை பேசியதை கனவாக்கி காலத்தை கடத்த வேண்டியதுதான்.இல்லை எனில் ஓல்ட்பார்க் சைனீஸ் ரெஸ்ரோறண்ட்டில் தண்ணீ அடித்ததை பீவ் ப்ரைட் ரைஸ் சாப்பிட்டதை ஜோசப்பு வாத்தியாரைக் கண்டதும் பயத்தில் மூத்திரம் அடித்ததை நினைத்து வெடகப்பட வேண்டியதுதான்.

 10. “கட்சி சார்ந்த இடதுசாரிகள், சமூகம் சார்ந்த இடதுசாரிகள் என இரண்டுவிதமாக வகைப்படுத்தலாம். மக்களின் விடுதலைக்காக ஒரு ஸ்தாபனமாக இணைந்து சமூகமாறறப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற செயற்பாட்டாளராக செயற்படுபவர்களை கட்சிசார்ந்த இடதுசாரிகள் என கூறலாம்.
  இதற்கு மாறாக
  கட்சியில் அங்கம் வகிக்காத அதேசமயம் அதிகார வர்க்கத்திற்கு எதிரான போர்க்குணத்தையும் செயற்பாடுகளையும் கொண்டுள்ளவர்களை சமூகம் சார்ந்த இடதுசாரிகள் எனக் குறிப்பிடலாம். ” – ஆ.தீ.

  ஒரு நல்ல கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த்து இருப்பதானால் அவர் முதலில் மக்கள் சார்ந்து (எனவே சமூகம் சார்ந்து) தான் இருக்க முடியும். இது தான் மக்கள் போராட்டப் பாதை, மார்க்சிய லெனினியப் பாதை. “கட்சி சார்ந்த – சமூகம் சார்ந்த” என்று பிரித்துப் பேசும் ஒருவரை எப்படிப் புரிந்து கொள்ளுவது? அவர் அறிந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிற மக்கள் சார்பற்ற தலைமைத் தோழர்களை மனதில் கொண்டு பேசுகிறாரா? அல்லது கட்சியில் இருந்தும் இல்லாமலும் என்று வேளைக்கொரு தோற்றம் காட்டும் வெளவால்தனத்தை நியாயப்படுத்துகிறாரா?
  பல்வேறு விடயங்கள் பற்றி இவர் பேசுவது இவர் வக்காலத்து வாங்கும் சி.பி.எம்முக்கு உடன்பாடானவையா?

 11. “முச்சந்தியில் கூடும் மக்களின் இருப்புக்கு நிகராக முன்முடிவுகள் இல்லாமல் இங்கே விவாதிக்க வேண்டியவர்களாக கூடியுள்ளோம்”….//இன்று அதிதீவிர இடதுசாரிக் கோசங்களால் தம்மைப் பெரிய புரட்சியாளர்களாக வேடம் போடுபவர்கள் இளம் தலைமுறையை நச்சுப்படுத்துபவர்களாயுள்ளனர்.-இரவீந்திரன்

  “முன்முடிவுகள் இல்லாமல்” என்றால் மாக்சியம் -லெனினியம் – மாவோஜிசம் இல்லாமல் என்று கொள்ளலாமா “கலாநிதி “ரவீந்திரன் அவர்களே !

  புழைய பெருமைகளை பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. பெருங்காய டப்பா எவ்வளவு காலத்திற்கு மனக்கும். -ஆதவன் தீட்சண்யா

  இவரை பொறுத்தவரை மாக்சியம் என்பது பெருங்காயடப்பா. அது அவரின் தப்பு அல்ல அவரது கட்சியின் நிலைப்பாடு தான் அது.ஜெயலலிதாவோடும் .விஜயகாந்தோடும் கூட்டு சேர்ந்து புரட்சி பண்ணுகிறவர்கள் இவரது கட்சியினர்.

  முச் சந்தியில் நிற்பது ரவீந்திரனும் ,ஆதவன் தீட்சன்யாவும் தான் என புரிகிறது.தாங்கள் எங்கே நிற்கிறோம் என்று அவர்களுக்கு புரியாததாலே இந்த குழப்பம்.

 12. ஆதவன் தீட்சண்யா சங்கடமான கேள்விகள் கேட்டால் நழுவிவிடுவார்.
  இலங்கையில் அவரை நிழல் போல் தொடர்ந்தும் குடைபிடித்தும் திரியும் அறிஞர் குழாம் ஏன் அவரரிடம் விடுக்கப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்காது?
  “மெய்நிகர் கொமிசார்” கவிதை பற்றிக் கொதித்தெழுந்து எல்லாப் பக்கமும் சேறடித்த மலையகத்துச் “சிந்தனைச் சிற்பிகள்” வாயடைத்துப் போன மருமம் என்ன?

 13. சர்வதேச தொழிலாளவர்கத்தின் சிதைவுகளும் பின்னடைவுகளுமே ! இந்த அறுபத்தைத்து
  கால அவலங்களையும் ஏற்படுத்தி இடதுசாரிகளையே திக்கு முக்காட வைத்துவிட்டது.
  இன்று நிலை அப்படியானது அல்ல.
  தேசியம் எல்லாம் உடைந்து நொருங்கி சர்வதேசிய மயப்பட்டிருக்கிறது. எமக்கு தேவையானது “தொழிலாளவர்க்க ஸ்தாபனமே” அது எந்த வடிவில் இருந்தால் என்ன?.
  உரிய இடத்தில் இருந்தே விவாதிக்கிறீர்கள். இடியும் மின்னலும் இல்லாமல் மழை ஏது?
  நிலம்தான் செழிப்பு தன்மையை எப்படி? எட்டுவது.
  உங்கள் இலட்சிய வேட்கை அதற்குரிய இடத்தை காண்பிக்கும்.நீங்கள் தனித்தவர்களில்லை.உலகம் முழுக்க தோழர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள்.நிச்சயம் முன்னேறுவீர்கள்.சோர்வடைந்து விடாதீர்கள்.
  விவாதத்தில் பங்குகொண்ட அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி உங்கள்
  பக்கமே!.அதை நம்புங்கள்.

 14. ஆதவன் தீட்சண்யா சார்பாகப் பதிலையே காணோம்.
  அதற்குள் இது வேறே!
  தயவு செய்து யாராவது இந்தத் திருக்கூட்டத்தின் “இலட்சிய வேட்கை” என்னவென்று விளங்கப் படுத்துவார்களா?

  1. மானிடவரலாறே! வர்க்கப்போராட்டத்தின் வரலாறுதான். ஒடுக்கிறவனுக்கும் ஒடுக்கப்படு-
   கிறவனுக்கும் இடையுள்ள வரலாறுதான்.தொழியாளவர்கத்திற்கும் முதலாளி-ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போராட்டம் தான்.
   ஒரு பொதுவுடைமைவாதி எந்தக் கோணத்தில்லிந்தாலும் தன்னை தொழிலாளிவர்கத்துடனே தன்னை இணைத்து கொள்வான்.அவனே ! எதிர்காலத்தை ஒர்ரளவே யானும் முன்கூட்டி அறியும் தகமை பெற்று தொழிலாளவர்கத்தின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தகுதி படைத்தவன் ஆகிறான். தொழிலாள வர்கத்தின் வரலாற்றையோ வெற்றி தோல்விகளையோ ஆய்வுகள் தேடல் இல்லாதவன்
   எந்த போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாத ஒரு”சப்பாணி” தனத்தை அடைகிறான்.
   தொழிலாளவர்க்கம் என்ற “வார்த்தையை” முதாளித்துவ சிந்தனைக் கண்கொண்டு பார்த்தால் அற்பசொற்பமாகவே தெரியும். ஆனால்…பொதுவுடமை அர்த்தத்தில் அணுவலிமைக்கு ஒப்பானது.குக்கிராம் கிராமம் நாடு தேசம் கண்டம் கண்டம் விட்டு
   கண்டம் பாயும் மாபெரும் சக்தி படைத்தது.இன்றைய நிலையில் இந்த உண்மையையும்
   தேடலையும் உள்ளவர்களகவே லெனின்மதிவாணன் ஆதவன் தீட்சண்யா போனன்றவர்களையும் அவர் தோழர்களையும் காணவேண்டுயாகவுள்ளது. இதை அர்த்தப் படுத்தியே “இலட்சியவேட்கை”என்ற பதத்தைப் பாவித்தேன்.
   எக்ஸ்.எக்ஸ்! உங்கள் அர்த்தம் இல்லா கேள்விகளுக்கு அர்த்தம் கற்பிக்க புறப்பட்டால்
   அவர்களின் பொண்னா நேரம் மண்னாகாதா? இருந்தாலும் உங்களுக்கு இரண்டு துருப்பு
   சீட்டுகள் தருகிறேன் முடிந்தால் முயற்ச்சி செய்யுங்கள்.புரிதலுக்கு…
   ஒரு முதாளித்துவ அரசை மாற்றி அமைக்கிற சக்தியாக விவசாயிகள் ஒருபோதும்
   விளங்குவதில்லை! இந்த வகையிலே பழங்குடிமக்களின் போராட்டத்தையும் வரையறை செய்யமுடியும்.இந்தியாவில் தொழிலாளிவர்க்கம் முன்னிலைக்கு வராதவரை அவுஸ்ரேலிய பழங்குடிமக்களுக்கு ஆபிரிக்க அடிமைகளுக்கு செவ்விந்திய
   இனத்திற்கு ஏற்பட்ட கெதியையே இந்த பழம்குடிமக்களும் அனுபவிக்கப் போகிறார்கள்
   என்ற உண்மையை மிகவும் வேதனையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
   இரண்டாவது ; முப்பது வருடப்புலி போராட்டம்-புண்னாக்கு போராட்டமாக மாறிப்பபோனது தொழிலாளிவர்கச் “சூத்திரத்தை” விளங்கிக் கொள்ள முடியாமையே!அல்லது
   விளங்கிக் கொள்ள விருப்பமின்மை.மகிந்தராஜயபக்சாவை முதாலிளித்தவ உறவுகள்
   முதாலித்துஅரசு என்று மதிப்பீடு செய்து உங்கள் போராட்டத்தை மகிந்தாவுக்கெதிராக
   தொடங்குங்கள்.தமிழன்…தமிழன்உரிமை…தனியரசு என்று வெற்றுக்கூச்சல் போடாதீர்கள்.
   இப்ப உங்களுக்கு “இலட்சியவேட்கை” என்னவென்று கொஞ்சம் கூடுதலாக புரிந்திருக்கு
   மென்று நினைக்கிறேன்.இல்லாவிட்டாலும் முச்சந்தி இலக்கிய வட்டத்தை எதிர்த்து
   கேள்வி கேட்கிற உரிமையோ விமர்சிக்கிற தகுதியோ உங்களுக்கு வந்துவிடவில்லை
   என்பதை அழுத்ததிருத்தமாக கூறிக்கொள்விரும்புகிறேன் திரு எக்ஸ்.எக்ஸ்.

 15. chandran.raja: “ஒரு முதாளித்துவ அரசை மாற்றி அமைக்கிற சக்தியாக விவசாயிகள் ஒருபோதும் விளங்குவதில்லை!”
  அதனால் தான் சி.பி.எம். அவர்களை ஒழித்துக் கட்ட முன்னிற்கிறது போலும்!

  “ஆபிரிக்க அடிமைகளுக்கு செவ்விந்திய இனத்திற்கு ஏற்பட்ட கெதியையே இந்த பழம்குடிமக்களும் அனுபவிக்கப் போகிறார்கள்”– உங்கள் தீர்க்கதரிசனத்துக்கு யார் உங்களை மெச்ச வேண்டுமோ தெரியாது.
  ஆபிரிக்கர்களை அடிமை வியாபாரம் செய்தோரையும் செவ்விந்தியரைக் கொன்று குவித்த வெள்ளை இனவெறியர்களையும் யாருடன் சமன்படுத்தியுள்ளீர்கள் என்பது மிகவும் சுவையானது. (சி.பி.எம்மும் அதில் அடக்கமா?)

  ராஜபக்ச அரசுக்கு ஆலவட்டம் பிடிக்கிற “இரட்டைத் தேசியக் குழுக்களுக்கு” என்ன அடிப்படையில் ஒருவர் ராஜபக்ச அரசை விமர்சிக்கிறர் என்று விளங்குவது கடினம்.

  என்றாலும் அவர்களது “இலட்சிய வேட்கை!!!” என்னவென்று தெளிவாகி விட்டீர்கள். நன்றி.

  “முச்சந்தி இலக்கிய வட்டத்தை எதிர்த்து கேள்வி கேட்கிற உரிமை”யை “அழுத்ததிருத்தமாக” எனக்கு மறுக்கும் அதிகாரத்தை உங்களூக்கு வழங்கியவர் எந்தப் புண்ணாக்குப் பெருமானார் என்று அறியத் தருவீர்களாயின் மேலும் நன்றி உடையவனாய் இருப்பேன்.

 16. ஆதவன் தீட்சண்யா “அவர்களின் பொண்னா நேரம் மண்னாகாதா?” என்று கவலைப்படாதீர்கள்.
  தனக்குச் சங்கடமான கேள்வி எவ்வளவு கனதியானது என்றாலும் பதில் சொல்ல மாட்டார். ஈகோப் பிரச்சனை என்றால் மட்டும் பக்கக் கணக்காக விளசித் தள்ளுவார்.
  இங்கே பலரும் கேட்ட கேள்விகட்கு அவரால் பதில் சொல்ல இயலாது. அது உங்களுக்கும் தெரியும் அவருக்குக் குடை பிடிக்கச் சந்தியில் நிற்கிறவர்கட்கும் தெரியும்.
  அதற்கு மேல் பம்மாத்து ஏன்?

Comments are closed.