மலையகத்தில் புலனாய்வுப் பிரிவினரின் கைதுகள் ! பழிவாங்கல் நடவடிக்கைகளா?

மத்திய மாகணப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தலைவாக்கலையைச் சேர்ந்த நபரொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து கடந்த 22 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் தா.சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தலவாக்கலையில் நடைபெற்ற தேடுதலில் ர.56 ரக துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்ப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 24 ஆம் திகதி ஐனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் லெட்சுமணன் பாரதிதாசன் மத்திய மாகணப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லெட்சுமணன் பாரதிதாசன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் மனோ கணேசன், 2001 ஆம் வருடப்பகுதியில் கிளிநொச்சிக்கு சென்று வந்தார் என்று கூறியே பாரதிததாசன் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை எனத்தெரிவித்திருக்கிறார். லெட்சுமணன் பாரதிதாசன் இ.தொ.காவின் உறுப்பினராக இருந்தவர். பின் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து செயற்பட்டவர். கடந்த மாகாண சபைத் தேர்தலில் ம.ம.முன்னணி சார்பாக ஆளும் ஐ.ம.சு.கூட்டமைப்பில் வேட்பாளராக வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டவர்.

One thought on “மலையகத்தில் புலனாய்வுப் பிரிவினரின் கைதுகள் ! பழிவாங்கல் நடவடிக்கைகளா?”

  1. தமிழ் ஈழத்தை யோசித்து சாப்பிடாமல் கிடக்கிற மலையக மக்களூக்கு புலலாய்வு என்ற போர்வையில் மறூபடியும் சோதனை..நான் உங்கள் தோழன் மனோ கனேசனோ அம்புலிமாமா கதை பேசுகிறார்.கைப்பற்றப்படும் துப்பாக்கிகள் என தொண்டமானுக்கும் சொல்லத் தெரியவில்லை பாதிக்கப்பட்டு நிற்கும் பாட்டாளீ வர்க்கம் வாழ மறூபடி போராடும் நிலமை.

Comments are closed.