மலேஷியா அகதித் தமிழர்களை தமிழகம் கொண்டு வர சி.பி.எம், ஸ்டாலினிடம் கோரிக்கை.

இலங்கையிலிருந்து தப்பி மலேஷியா சென்ற 75 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு மலேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். கிரிமினல் கைதிகளைப் போல அந்த அகதிகளை நடத்துவதாக புகைப்படங்கள் வெளியாக தமிழகத்தின் பல் வேறு அமைப்புகளும் மலேஷியத் தூதரகத்திடம் அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது என கோரிக்கை மனுக் கொடுத்தது. இந்நிலையில் மலேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 75 ஈழத் தமிழர்களையும் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.இது போக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரினர்.