மரிக்கானாப் போராட்டத்தை பறை முழக்கத்துடன் தமிழர்களும் கலந்துகொண்டனர்

parai_voice_freedomஇலங்கையில் வெலிவேரியாவில் மட்டுமல்ல, வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் நிலப்பறிப்புக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறி மக்களைக் கொசுக்கள் போலக் கொன்று போடுகிறது. வல்லூறுகள் போல உலகம் முழுவதும் வட்டமிடும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பண வெறிக்காக உலகம் முழுவதும் போர்கள் நடைபெறுகின்றன. வன்னியில் லட்சம் லட்சமாக மக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு வருடங்களின் முன்னர் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதியன்று தென்னாபிரிக்காவின் மரிக்கானா தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் தமக்கு ஊதிய உயர்வு கோரி அமைதி வழிப் போராட்டம் நடத்தினார்கள். அப் போராட்டத்தின் மீது பல்தேசிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இராணுவம் சென்று நிராயுதப்பாணியான தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரையோகம் நடத்திற்று. 34 தொழிலாளர்கள் அதே இடத்தில் மாண்டுபோனார்கள். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்ததனர். அவ்வேளையில் இலங்கையில் சமாதனம் குறித்துப் பேசும் இன்றைய தென்னாபிரிக்க ஜனாதிபதி தங்க வியாபாரம் செய்யும் பல்தேசிய நிறுவனங்களின் ஆலோசகராவிருந்தவர்.

இப் படுகொலைகளை நினைவுகூரும் போராட்டம் ஒன்று நேற்று 16.08.2014 அன்று லண்டன் ரபல்கஎ சதுக்கத்தில் நடைபெற்றது. ஆபிரிக்க நாட்டவர்களுடன் ஈழத் தமிழர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டமை புதிய ஆரம்பத்தை உணர்த்தியது. பறை – விடுதலைக்கான குரல் இளைஞர்கள் பறை முழங்கியது போராட்டத்தின் சிறப்புப் பகுதியாக அமைந்தது.

இன்று புலம்பெயர் தமிழ்த் தேசியம் என்பது லைக்கா லிபாரா என்ற இரண்டு பல்தேசிய நிறுவனங்களின் பிடியில் சேடமிழுத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள் நம்பிக்கை தர வல்லவை.

மரிக்கானா படுகொலைகள் தொடர்பாக இனியொருவில் வெளியான ஆக்கங்கள்:

ஈழத் தமிழர்கள் உட்பட உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைய வேண்டும் : ஆபிரிக்க புரட்சிகர முன்னணி

தென்னாப்பிரிக்காச் சுரங்கத் தொழிலாளர் படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!

படுகொலைகளின் இரத்த வாடையோடு இலங்கையில் ஜனநாயகம் மீட்கவரும் தென்னாபிரிக்க அரசு

மனிதப்பிணங்களின் மேல் நடந்துசென்று தென்னாபிரிக்கா நோக்கி தேசியக் கூட்டமைப்பு