மரணித்துப் போனது நாங்கள் மட்டுமல்ல…!மானிடமும் கூட!! :வடக்கான் ஆதாம்

ar2நான் யாரென்று உங்களுக்கு விளங்கியிருக்கும். சிங்களப் பேரினவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட போரில் கொல்லப்பட்ட அல்லது உயிருடன் மருத்துவ வசதியின்றிஎம்மவர்களாலேயே எரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் (நீங்கள் விரும்பினால் போராளிகள் என அழைக்கலாம்.) ஒருத்தி. இரத்தமும் தசையும கால் வேறு, கை வேறு, தலை வேறு என பரிசோதனைக் கூடமாக மாறிய வன்னி மண்ணில் தான் நான் எனது நண்பர்கள,; நண்பிகள் என ஏராளமானவருடன் கொல்லப்பட்டேன்.

எனக்கு நன்றாக வாழப் பிடிக்கும். எனது கனவெல்லாம் நன்கு படித்து உங்களைப் போல் (அதிகமாக இதைப் படிப்போர் மேற்கத்தைய நாடுகளில் குடும்பம் குட்டியென வாழ்வோர்) நன்றாக உழைத்து எனது தம்பி தங்கைகளை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். எனது சொந்தங்கள் சிலர் சமாதான காலத்தில் இங்கு வந்த போது என் வயதொத்தவர்களைப் பார்க்கும் போது ஏங்குவேன். அவர்கள் கொடுத்த முக்கால் பான்ட் , சட்டைகள் எனக்கு நிறைய பிடிக்கும்.

எனது அப்பா சமாதான காலத்திற்கு முன் புலிகளுக்கு சில வேலைகளைச் செய்யத் தொடங்கினார். ஏனெனில் தோட்ட வருமானம் சரிவரக் கிடைக்காமையால் அப்போதெல்லாம் எனது அம்மா இது சரி வராது என எச்சரிக்கை செய்தார். அதற்கு அப்பா சொல்வார், ‘எங்களுக்கு இரண்டு பக்கமும் இடி. நாங்கள் என்ன செய்வது? வன்னியை விட்டு வெளியேறுவது சாதாரண விடயமில்லை! வெளியேறி எங்கு செல்வது? வசதியானவர்கள் கொழும்பில் வாழ்கிறார்கள். அல்லது வெளிநாடு சென்று விடுகிறார்கள். நாம் என்ன செய்ய முடியும்?’

நானும் குடும்ப சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நன்றாகப் படித்தேன். எனக்கு மிகப் பிடித்த பாடம் கணிதமும் விஞ்ஞானமுமே ஆகும். ஆனால் பெற்றோல் ஏற்றிக் கொண்டு போன எனது அப்பாவையும் வேறு சிலரையும் ஆழ ஊடுருவும் படை வைத்த வெடிகுண்டு வெடித்து சிதறடித்தது. அவரது உடல் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை.. அம்மாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கதறி அழுதார். நானும் தம்பி தங்கைகளும் திகைத்து நின்றோம். ஓரளவிற்கு சிந்திக்க தலைப்பட்டேன். ஏன்? எதற்காக? முடிவு?……..

அம்மாவிடம் நான் புலிகளல் இணையப் போவதாக கூறினேன். வழமையான அம்மாவாக கதறினார். நான் உறுதியாக நின்று இணைந்தேன். பயிற்சி கடுமையாக இருந்தது. பல இளைஞர் யுவதிகள் பலவந்தமாக இணைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன். பயிற்சியின் கடுமை உங்களிற் பலருக்கு தெரியும். எண்பதுகளில் நீங்கள் எடுத்த பயிற்சியை விட கடினமானது. கடல் , நிலம் , காடு என பலவகைப் பயிற்சி.

போர் தொடங்கியது. களமுனைக்கு அனுப்பப்பட்டோம். பலர் கொல்லப்பட்டனர். சிறு காயங்களுடன் தப்பித்து கொண்டேன். இப்பொழுது அரச படையினரின் கை மேல் ஓங்கியுள்ளது. ஏனெனில் அவர்கள் ஆயுதம் , ஆட்கள் இரண்டிலும் எங்களை விட பல மடங்குகள் நிறைவாக இருந்தனர். மேலும் விமானப் படை எங்களை துவம்சம் செய்தது. நாங்கள் நினைப்பதற்கு முன் அவர்கள் முடித்து விடுகின்றனர். எங்கள் நிலைகளை இலக்கு வைத்து அடித்தார்கள். எங்களிடம் அவர்களை விட பலமடங்கு அதிகமாக இருந்த மன பலம் மெல்ல மெல்ல குறைந்தது.

தந்திரோபாயங்கள் அற்று சண்டை புரிந்தோம். எங்களுக்குள் முரண்பாடுகள் தோன்றின. முன்பே பல முரண்பாடுகள் இருந்ததை பயிற்சியின் போது அவ்வப்போது மிக இரகசியமான முறையில் ar1கேள்விப்பட்டிருந்தோம். இம்முறை வெற்றி பெறாது எனத் தெரிந்திருந்தும் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டோம். மிக இலகுவாக சிதறடிக்கப்பட்டோம். ஆம்! வாழ்க்கையை ஒரு போதும் சந்தோசமாக கழிக்காமல் , சந்தோசம் என்றால் என்னவென்று புரியாமல் வாழ்ந்த ஒரு உயிர் தனது 17 வது வயதில் மரணத்தை பெற்றது.

எனதருமை சொந்தங்களே!

பலர் எங்களின் நடவடிக்கைகளில் குற்றம் கூறுகிறீர்கள். எண்மைதான். எனது தலைமை தந்திரோபாயமற்ற ஒரு போராட்டத்தையே நடத்தியதை நான் புரிந்து கொண்டேன். ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேறு . எமது தலைமை வேறு என்பதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்னால் என்ன செய்ய முடியும்? எனது நிலையில் உங்கள் மகளை அல்லது மகனை ஒப்பிட்டுப்பாருங்கள். எனது தகப்பனார் உங்களை மாதிரி வெளிநாட்டிற்கு வந்திருந்தால் நானும் இப்போது நல்ல கல்லூரியில் ஏன் பல்கலைக்கழகத்திற்கு கூட போயிருப்பேன்.

புலிகளின் இருப்பிற்கு யார் காரணம் என்பதில் இருந்து பிரச்சனைகளைப் பாருங்கள். அதை விடுத்து இறந்து போன எங்களைக் கொச்சைப்படுத்துவதன் மூலம் பிரபாகரனால் நீங்கள் துரத்தப்படுவதற்கு முன் இறந்து போன உங்கள் தோழர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.

தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக இல்லை இல்லை இலங்கை வாழ் அனைத்து மக்களின் நல்வாழ்விற்காக (நீங்கள் பல் தேசியவாதிகள்) குரல் கொடுத்து அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த உங்களால் எனது குடும்பம் எங்கிருக்கின்றது என கண்டு பிடித்து தர முடியுமா? அல்லது வன்னியில் உங்களை சுயாதீனமாக உலாவ விடுவார்களா?

எனக்கு முன் இருந்த ஒரே வழி புலியில் இணைந்து தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்துச் செல்வதேயாகும்! எனது அனுபவம் இதற்கு மேல் சிந்திக்க இடம் தரவில்லை. ஆனால் தொடர்ச்சியான சிந்தனை மூலம் நீங்கள் சொல்வது என்னவென்றால் ஓரளவு பிரச்சனை இருந்த காலத்தில் போராடத் தொடங்கிய நீங்கள் பிரச்சனைகள் முற்றிய இந்தக் காலத்தில் போராடத் தேவையில்லை என கூறுகிறீர்கள்.

எமது வாழ்க்கை நிர்மூலமானதற்கு நீங்களும் ஒரு பகுதி என்பதை மறைத்து இப்போது இனப்பிரச்சனை இல்லை எனவும் அங்கு மக்கள் நன்றாக வாழ முடியும் எனக் கூறும் நீங்கள் எம்மக்களின் இறப்பினால் கிடைத்த வெளிநாட்டு செல்வத்தை வைத்து இங்கும் வந்து வாழப் போகின்றீர்கள். அதற்கு உங்களுக்கு அரசின் ஆதரவும் உண்டு. மறந்து விடாதீர்கள் இந்த அரச ஆதரவு சில காலங்களுக்கு மட்டுமே!

நிறைய எழுத மனம் துடிக்கி;றது. என்ன செய்வது? உங்கள் குழந்தைகள் படிக்க நல்ல பாடசாலைகள் தேடித் திரிகிறீர்கள். இதைப் படிப்பீர்களா தெரியவில்லை. அடிக்கடி இங்கு விடுமுறை கழிக்க வாருங்கள். உண்மைமையக் கண்டறியுங்கள். சிங்கள  சக்திகளே இங்கு பிரச்சனை இருப்பதை உறுதி செய்கிறார்கள். ஆனால் நீங்கள்……?

இப்பொழுதெல்லாம் வன்னியில் ஆவியாய் திரிவதே பயமாக இருக்கி;றது. 15 ஆயிரம் பரப்பளவில் ஆடு மாடு நாய் பூனை தவிர நானும் எனது தோழர்களும் எமது குடும்பங்களைத் தேடி அலைகின்றோம். அந்த ஆடு மாடு நாய்களுக்கு உள்ள உணர்வு கூட உங்களுக்கு இல்லாமல் போனது……..

-நேற்று முன் தினம் உறங்க முடியாமல் உறங்கியபோது கனவில் வந்த வன்னிச் சிறுமி-

வடக்கான் ஆதாம்.

10 thoughts on “மரணித்துப் போனது நாங்கள் மட்டுமல்ல…!மானிடமும் கூட!! :வடக்கான் ஆதாம்

 1. அழகாகப் வலியைப் புலப்படுத்தி உள்ளீர்கள்.

  1. sister i read in your story its very deficult
   one dont worreid ,,we will be get inour tamil elaam

 2. தொலைவில; இருந;தாலும;

  மனதோடு உரசிக;கொhண;டு

  அந;யோன;யமாக

  இருக;கும; புலம;பெயர;ந;த

  தமிழர;களே

  நாங;கள;

  புலம;பெயராமல;

  சொந;த நாட;டில; இருந;தாலும;

  வேற;று நாட;டவர;களுக;கு

  மத;தியில; அந;நிய நாட;டில;

  வசிப;பது போல;தான;

  உணர;கின;றோம;

  அருகருகே இருந;தாலும;

  ஒருவருக;கொருவர;

  பாராமுகமாய;

  அந;நியமாகத;தான;

  இருக;கிறோம;

  கண;ணுக;குதெரியாத

  தொலைவில;

  நம; இனம; ஒன;று

  உயிருக;கு போராடுவது கண;டு

  உணர;வுடன; கொந;தளிக;கின;றீர;கள;

  ஆனால; உள;ளுரில;

  கண;முன;னே ஒருவன;

  உயிருக;கு போராடினாலும;

  கண;டும; காணாதது போல;

  செல;லும; காட;டமிராண;டிகளுக;கு

  மத;தியில; நடைபிணமாய;

  உயிருடன;….

  கோவை மு. சரளாதேவி

 3. நீங்கள் ஆவியாக வந்து கட்டுரை மட்டும் தான் எழுதுவீர்கள். அவர்கள் கூட்டம் போடுவார்கள். காசு வாங்குவார்கள். பேய்ப் படமும் காட்டுவார்கள்.வடக்கன் ஆதம், நீங்களும் அவர்களுக்கு காசு குடுக்காமல் எழுதுகிற காலம் கூட மலையேறி விட்டது.

 4. உங்களுக்கு புலிகளுக்கு விருப்பப்பட்டு இணைந்து கொண்ட சிறுமி மட்டும் தான் கண்ணுக்குத் தெரிகிறாள். புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு இராணுவத்தால் கொல்லப்பட்ட சிறுமிகளின் ஆவி எனது சொப்பனத்தில் மட்டுமல்ல பகலிலிம் கூட என்னைத் தொந்தரவு செய்கின்றன. புலிகள் போய் விட்டார்கள் ஆனால் உங்களைப் போல எச்சங்கள் என்னும் நாறிக் கொண்டு தான் உள்ளன.

 5. Rajeev sent troops to kill Tamils. not successful
  sendt raw mebers to kill Amirthalinga using LTTE members with the idea that Tamils ould hate Praba – failed.
  planned to Kill Praba using Maththay failed – several plans – failed
  Using computer voting mechines and fraulent wins – 25 percent success success
  Paid money top voterls 25% success
  Given Colour satalite uimages, Tigers arms shipds were bombed by using missiles by congress hailf success – 25 % success
  Computer images of Praba, deat body – 10 percent success – 85% success to secure immigrants rule – arian rule

  Praba is going to come back – 95% failure
  Allmesiles, aircraft production, arms and ammuntion prodcudtio – 5% failure
  Tamil eelam – 100% failure to Congress-

  Rajeev escaped from Genocide trial because congress party’s leadership conesters killed Rajee and put the blame on Tigers.

 6. ஜெய்சீக்குரு சன்டை நடந்த காலத்திலும் ,புலிகழ் சன்டைக்கு ஆழ் பிடிதார்கழ் தான் ..ஆனால் ஜெய்சிகுரு சன்டை வென்டதால்……அந்த சம்பவம் யார் கன்னுக்கும் தெரியலயோ…….இப்பெ……..தோத்தவுடன் எல்லாரும் சன்டைக்கு வாரீங்க…..சே வெக்கம் இல்ல……..வென்டால் சரித்திரம்…..தோத்தால் சம்பவம்…அடிகடி தலைவர் சொல்ல்வார்…அது இப்பொ ..உன்மை ஆச்சு………………

 7. தொட வேண்டிய பிரச்சனைகளை இவ் எழுத்து நம்முன் வைத்துள்ளது.
  விடுதலைப்புலி ஆதரவு–எதிர்ப்பு என்று கட்சி கட்டி ஆடுவதைத் தவிர்த்து அவற்றைப் பார்ப்பது பயனுள்ளது
  வலியப் போனாலும் வற்புறுத்திப் போனாலும் போராளி வாழ்க்கை ஒன்று தான்.
  அதை நாம் ஓரளவு புரிந்துணர்வுடன் பார்க்கக் கற்றுக் கொள்வது நல்லது.
  30 ஆண்டுக் காலப் போராட்ட வரலாற்றின் சிதறிய துண்டங்களைப் பொருத்திப் பார்க்கிற ஒரு முயற்சியாக இதைப் பார்ப்பதும் இதற்குச் சமாந்தரமாக வேறுகோணங்களினின்றும் பார்ப்பதும் ஊக்குவிக்கப் படத் தக்கன.
  இனியொரு அதற்கு ஏற்ற இடமாகத் தன்னை வளர்க்க நமக்கு உதவ இயலும்.

 8. i accept tamilans knw how to speak well,like the bastered karunanidhi,prabhakaran didnt know how to speak in a language which all will understand.he only wanted freedom for his people,he foughtthats the language he knew,he was successful in that,he changed his plans as per interntional situation,ofcoarse,certain things dint happen as per his planning,he failed to undersand that he is fightng a freedomwar with corporate world.but it doent mean he has lost,dear people,pls understand,in freedom fight war styles hve changed,but never a war is lost which is fought for freedom.long live prabhakaran.only in lanka u dont see ltte flag,but u can see the same flag flying high world wide,remember the flag what is used worldwide,its LTTE FLAG.now say,has prabhakaran has lost.sri

Comments are closed.