மன்மோகன் சிங் மின் நிலையத்தை மூட மறுப்பு – கூடங்குளம் உண்ணாவிரதம் தொடர்கிறது

கூடங்குளம் அணு மின் நிலயத்தை எக்காரணம் கொண்டும் மூட முடியது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள நிலை உண்ணாவிரதம் தொடர்கிறது,
உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் இ‌ன்று 4வது நாளை எ‌ட்டியு‌ள்ளது.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி ஏ‌ற்கனவே 12 நா‌ட்க‌ள் தொடர் உண்ணாவிரத‌ப் போராட்டம் நடத்திய கடலோர ‌கிராம‌ம‌க்க‌ள், கட‌ந்த ஞா‌யிறு முத‌ல் ஒரு நா‌ள் உ‌ண்ணா‌‌விரத‌ம் இரு‌ந்தன‌ர்.

ஆனா‌ல் இ‌ந்த ‌உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌ம் 3 நா‌ட்களாக ‌நீடி‌த்தது. நெ‌ல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் உ‌ண்ணா‌விரத‌ப் போராட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இ‌‌தி‌ல் 106 பேர் தொட‌ர் உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளதா‌ல் மிகவும் சோர்வடைந்து காணப்படு‌கி‌ன்றன‌ர்.

தொடர்புடைய பதிவு:
கூடங்குளம் மக்கள் போராட்டம்