மக்கள் அச்ச நிலை:மன்னார் நகரப்பகுதியில் மீண்டும் இராணுவ நிலையங்கள்!

மன்னார் நகரப் பகுதியில் அகற்றப்பட்டிருந்த இராணுவ காவல் நிலையங்கள் மீண்டும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் மீண்டும்   அச்ச நிலைதோன்றியுள்ளது.

மன்னார் நகரப் பகுதியில் உள்ள பல இராணுவ காவலரண்கள் அகற்றப்பட்டு சோதனை கெடுபிடிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் காவலரண்கள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல விதமான கெடுபிடிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

3 thoughts on “மக்கள் அச்ச நிலை:மன்னார் நகரப்பகுதியில் மீண்டும் இராணுவ நிலையங்கள்!”

  1. இன்றய இடர்களீல்நாலையநம்பிக்கையை புதைக்கமுடியாது.எமக்கு எது சாதகம் என் அறீந்து வாழ்க்கையைநகர்த்துவதேநல்லது.ஒருநாள் இரவில் எல்லாம் மாறூம் என்றூ புலம்பிக் கொண்டிருந்தால் வாழ்க்கை சுமையாகிவிடும்.பொறூத்திருப்போம்.காலம் மாறூம்.

    1. ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பல விதமான கெடுபிடிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர், தாங்கள் சொல்கிறீர்கள், “ஒருநாள் இரவில் எல்லாம் மாறூம் என்றூ புலம்பிக் கொண்டிருந்தால் வாழ்க்கை சுமையாகிவிடும்.பொறூத்திருப்போம்.காலம் மாறூம்.” என்று.

      நண்பரே! என்னதான் சொல்ல வருகிறீர்கள்? கெடுபிடிகள் எல்லாம் ஒரு இரவில் திடீரென்று அமுல் படுத்தப் படாமல் படிப்படியாக வரும் என்று சொல்கிறீர்களா? ஆனால் மூன்று மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகிறதே அதற்கும் வாக்கு வங்கி நிரப்பவேண்டுமே?

  2. தோழரே தங்கள் கருத்துக்கள் அறீவூட்டுகின்ற ஆரோக்கியமான விவாதங்கலை தொடங்கி வைக்கின்றன.தேடலோடு இயங்கும் உங்கலைநான் மிகவும் மதிக்கிறேன்.ஒரு பொல்லாப்பும் இல்லை என்பார் எங்கள் யோகர் சுவாமிகள்.எல்லாம் பழகிப்போயிற்றூ இதையும் கடந்து விடுவோம் எனும்நம்பிக்கை எமது மக்களீடம் எழுப்புதல் அவசியம்.

Comments are closed.