மனித உரிமைப்பயிற்சி மூலம் இலங்கை இராணுவத்தை உயர்நிலைக்கு இட்டுசெல்ல முடியும்!:அமரிக்க தூதர் ரொபர் ஓ பிளக்!!

20.08.2008.
இலங்கை இராணுவத்துடன், இராணுவ சம்பந்தப்பட்ட சட்டங்களை பகிர்ந்துக்கொள்ள அமரிக்க பசுபிக் கட்டளையகம், முன்வந்துள்ளது.
இதன் அடிப்படையில், விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையிடல் விடயங்களை அமரிக்கா இலங்கை இராணுவத்தினருடன் பகிர்ந்துக்கொள்ளவுள்ளது. இதன் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்களை தடுக்கலாம் என நம்புவதாக அமரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த திட்டத்தின் மூலம் இலங்கை இராணுவத்தை உயர்நிலைக்கு இட்டுசெல்ல முடியும் என அமரிக்க தூதர் ரொபர் ஓ பிளக் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இவ்வாறான இரண்டாவது திட்டத்தை அமரிக்க பசுபிக் கட்டளையகம் மேற்கொண்டுள்ளது. இந்த பயிற்சி திட்டத்தின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் காப்பு விடயங்கள் இராணுவத்தினருக்கு புகட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .