மத வெறியைத் தூண்டும் இந்திய அமைப்பு இன்னும் சட்டரீதியாகவே இயங்குகிறது.

இஸ்லாமிய பெண்கள் அணியும் “பர்தா” வுக்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

“பர்தா” வையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளதை பாராட்டியுள்ள சாம்னா, பர்தாவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரான்ஸ் அதிபர் சர்கோஸி எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து அடிப்படைவாதக் கட்சியும் பல கொலை மற்றுக் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுமான சிவசேனா இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படாட்க கட்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலம் பெயர் தமிழர்கள் நிதியுதவு வழங்கியது போன்று சிவசேனாவிற்கு புலம் பெயர் இந்தியர்கள் குறிப்பாக குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொடுப்பனவுகளை வழங்குகிறார்கள்.
பிரான்சின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்களின் உணர்வுகளைத் திசை திருப்புவதற்கு எதிராக பிரஞ்சு அரசு அங்கு இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமிற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் பாரப்ட்சமான அயோத்தித் தீர்ப்பின் பின்னதாக இந்தியாவில்  மதவெறி மேலோங்கி வருகிறது.

மத வெறியைத் தூண்டும் இந்தியக் இன்னும்  சட்டரீதியாகவே இயங்குகிறது.

15 thoughts on “மத வெறியைத் தூண்டும் இந்திய அமைப்பு இன்னும் சட்டரீதியாகவே இயங்குகிறது.”

 1. ஓடு கழட்டி வீடு உள்ளே வந்த திருடர் எடுத்துச் சென்றது பகவத் கீதையை விட்டுச் சென்றது பர்தாவை, இந்தப் பர்தா பயங்கரவாதிக்கும் பாதுகாப்பு.பகற் கொள்ளக்காரனுக்கு முகமூடி.வாப்பா சொன்னாரென்றூ அப்பாவிகள கொல்லும் தொப்பிக்காரன் எந்த முகத்துக்கு சொந்தக்காரன்?இந்த பின்னூட்டம் வராது தெரியும் ஆனால் பயங்கரவாதம் வாழும் வியாதி இதில் வாழ்வை இழக்கும் அப்பாவிகள நினைத்துப் பாருங்கள்.7/7 என்னத்தை இங்கிலாந்தில் சொல்லி நிற்கிறது?……………………..குறயாக நினைக்காதீர் சவூதிக்கார இளவரசன் தன் கம்பி இன்பத்துக்காக கொலையும் செய்கிறானே இதுதான் காக்காமாரின் மனிதாபிமானமா?

  1. ரோமாபுரியில்” ரோமனாக” இரு என்பது ஒரு பழைய முது மொழி. இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்துவாக இருக்காட்டியும் , இந்தியானக இருக்க பழகக் கற்றுக்கொள்ளவேண்டும்.

   1. வன்னியன் நீங்க முதலில் இந்தியனாக இருந்திருந்தால் இந்த வன்னியன் என்ற பெயர் தேவைப்பட்டிருக்காது

    1. :Dநதிமூலம் , ரிஷி மூலம் பார்ப்பது எண்டால், இந்தியன் நாங்கள் எல்லாரும் ” ஆபிரிக்கர்” எண்டுதான் சொல்ல வேண்டி வரும். உலகிலேயே அதிக முஸ்லீம்கள் வாழும் இரண்டாவது நாடு இந்தியாதான். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அதிக அநியாயம், அக்கிரமம் நடக்கும் எண் டால் , இது சாத்தியப் பட்டிருக்குமோ….துருக்குயில் 3 மில்லியன் வாழ்ந்த கிறிஸ்த்தவர்கள் இன்று 10 ஆயிரம் பேர் தான் இருக்கினம். துருக்கி ஒரு உதாரணம் மட்டுமே. பல முஸ்லிம்நாடுகளில் இப்படித்தான்நடக்கிறது.

  2. இலங்கை எண்டு சொல்லுகிற “ரோமாபுரியில” தமிழர் சிங்களவரா இல்லாட்டியும் இலங்கையரா இருக்கப் பழக வேணும் எண்டும் சொல்லுகினை.
   அப்ப இருக்க ஏலாதவை தான் வெளிக்கிடவையோ? அல்லது அழிக்கப் பட்டவையோ?

   1. இலங்கையின் ஆதிக் குடிகள் இயக்கர்களும் ,நாகர்களும். இலங்கை முழுவதையும் ஆண்ட தமிழ் மன்னன் இராவணன். வெள்ளையர்கள் தான் பிரிந்திருந்த தமிழ் , சிங்கள தேசங்களை தனது வசதிக்காக இணைத்தான். எனவே இலங்கையை தனியே சிங்கள தேசம் எண்டு சொல்வது தவறு.தமிழரது தேசத்தில் நாம் தமிழர் , தமிழராக இருப்பதில் என்ன தவறு. சும்மா இருப்பதை விட , எதாவது செய். முயற்சி செய்ததால் தான் மனித இனம் இன்று இவ்வளவு முன்னேறி இருக்கிறது. ஏன்நீர் பிறந்ததில் இருந்து இன்று வரை படுத்த படுக்கையில் கிடந்து எல்லாம் செய்கிறீரோ…

    1. தமிழனாய் நான் இருந்தாலும் இலங்கையனாய்த்தான் என்னை இனம் காணூகிறார்கள்.எம்மிடையே கிறீஸ்தவர், கத்தோலிக்கர் என எல்லோரும் இருந்தாலும் தமிழைப் பேசி தமிழராய் வாழும் இஸ்லாமியர் மட்டும் தம்மை முஸ்லீம் என் கிறார்கள்.தாம் வாழும் பகுதியை முஸ்லீம் வட்டாரம் என் கிறார்கள்.தம்மைப் பிரித்து தனியாகவே வாழ்கிறார்கள் அவர்களூம் தம்மை இல்ங்கையராக் நினைக்க வேண்டாமா?குறயே மன்னிக்கவும்.

   2. நீங்கள் தானே ரோமாபுரிக் கதை எழுப்பினீங்கள்— முஸ்லிம்களுக்கு ஒரு ரோமாபுரி நியாயமும் தமிழருக்கு இன்னொரு ரோமாபுரி நியாயமுமா — நல்ல பகிடிதான்.
    (இந்தக் குறுணித் தீவை ராவணனும் ஆளேல்லை ராமன்ர அடியாளும் ஆளெல்லைப் பாருங்கோ. அதெல்லாம் பழைய புளிச்சல் பகிடி. இப்ப ஆருஞ் சிரிக்கவும் மாட்டினை).

    இங்கை ஆரும் எழும்பாமை ராவிலை படுக்கையிலை கிடக்கேக்கை தானோ, வாய் வீர “ராவணன் பரம்பரை” ராவோட ராவா — இல்லை ராவணனோடை ராவணனா — வெளிகிட்டுப் புலம் போனது?

    நான் மொக்கன், சும்மா இருந்திட்டுப் போறன்.— வீரமும் அறிவும் விவேகமும் உள்ள தாங்கள் என்ன செய்கிறிர்கள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ.
    செய்யாததையும் சேர்த்துச் சொல்லுங்கோ, கூடுதலாச் சிரிப்பு வரும். ஏனெண்டா இந்த ஊரிலை சிரிக்கிறதுக்குக் கனக்க இல்லை. — எல்லாம் வல்ல ராசபக்சவாலை கூடச் சிரிப்பு மூட்ட ஏலேல்லை என்டாப் பாருங்கோவன் அநியாயத்தை! நீங்களாவது உதவ வேணும்.

 2. இலங்கையில் நடந்து வரும் இன அழிப்பு மாதிரி இந்தியாவிலும் நடக்காதா என்று ஒரு கூட்டம் அலைகிறது

   1. அஸாம் ,நாகலாந்திலும் நடக்கிறது.

  1. மணிப்பூரில் நடக்கிறது.
   நாட்டில் உள்ள பழங்குடிகளுக்கு எதிராக நடக்கிறது.

   இந்தியாவை இந்து-முஸ்லிம் என்று மட்டும் பார்ப்பதே தவறு.
   ஏனெனில் அது அடிப்படையான அடையாளப் பிரச்சனையல்ல. அவ்வாறு மோதல் நிகழ்வதில் இந்துதுவவாதிகள் 1930கள் முதல் பெரும் பங்காறி வந்தனர்.

   இந்தியா ஒரு தேசமல்ல. பாக்கிஸ்தானும் ஒரு தேசமல்ல.
   அவை பிரித்தானிய கொலனி ஆட்சி ஒன்றன் வரலாற்று எச்சங்கள்.
   அவை தமது தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது தவிக்கின்றன.
   ஆளும் வர்க்க நலன்கள் இந்தியாவை ஒரு அமெரிக்காவின் அடியாள் வல்லரசக்கத் துடிக்கின்றன.

 3. “இதுதான் ‘காக்காமாரின்’ மனிதாபிமானமா”
  திரும்பத் திரும்ப இந்த விதமான துவேஷமான கருத்துக்கள் ஒருவரிடமிருந்து வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வருகின்றன.
  புலிகளை நிந்தித்து மகிழ்வுறும் இந்த ஆளுக்கும் புலிகளில் மிக மோசமானவர்களுக்கும் சிந்தனையில் என்ன வித்தியாசம்?

  வன்னியன்,
  உங்களுக்கு இந்தியாவில் ஒரு முஸ்லிம் ‘இந்தியனாக’ இருப்பதில் உள்ள பிரச்சனை தெரியாது போலும்.
  பல துறைகளில் அவர்கள் தலித்துக்களிலும் கீழே உள்ளனர்.
  இந்தியாவில் முஸ்லிம்கள் வன்முறைக்குபட்ட அளவுக்கு எந்த முஸ்லிம் நாட்டிலும் கடந்த 50 ஆண்டுகளில் ‘இந்துக்கள்’ எனப்படுவோர் அனுபவித்ததில்லை.
  இந்தியா தமிழரைத் துன்புறுத்தினால் ஒரு நியாயமும் முஸ்லிம்களைத் துன்புறுத்தினால் இன்னொரு நியாயமுமா?

  1. இந்தியாவும், பாகிஸ்தானும் விளயாடினால் பாகிஸ்தானுக்காக கொடி பிடிப்பதும்,முகாஜீன் களூக்கு அடைக்கலம் கொடுத்து அப்பாவிகள கொல்ல உதவுவதும் இந்தியனாக இருப்பதின் சிரமமே??? பாகிஸ்தானில் கொல்லப்படும் இந்துக்கள், கத்தோலிக்கராக இருந்து முஸ்லீமாக மதம் மாற வற்புறூத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்.அரேபியாவில் ஆரியவதியை ஆராதித்து அனுப்பினார்களே மறந்து விட்டீர்களா?உலகில் இந்தியாவில்தான் முஸ்லீம்கள் அதிகம் அங்குதான் முஸ்லீம் முஸ்லீமாக வாழ்கிறான்.

  2. புலிகளில் மிக மோசமானவர்களுக்கும் இந்த ஆளுக்கும் சிந்தனையில் என்ன வித்தியாசம்?
   வெள்ளை நிறவெறியர்களுக்கும் இந்த ஆளுக்கும் சிந்தனையில் என்ன வித்தியாசம்?

Comments are closed.