மட்டக்களப்பு சிறைச்சாலையில் குண்டு வெடிப்பு : EPDP உறுப்பினர்கள் காயம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்துள்ளனர். இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில், தமது கட்சி உறுப்பினர்கள் நான்கு பேர் காயமடைந்ததாக ஈ. பி டி பி தெரிவித்துள்ளது. அண்மையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஈ பி டி பியின் ஏறாவூர் பிரதேச பொறுப்பாளர் ரவி உட்பட்ட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். இதேவேளை கடந்த வாரத்திலும் இந்த சிறைச்சாலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும்  அதிகாரிகள் தரப்பினரால் அந்தச் செய்தி மறுக்கப்பட்டிருந்தது.

One thought on “மட்டக்களப்பு சிறைச்சாலையில் குண்டு வெடிப்பு : EPDP உறுப்பினர்கள் காயம்”

 1. ஆடியூலை 1983
  வாள் கத்தி பொல்லு போத்தல் தகரம்
  இருபத்தைந்து வருடங்கள் கழிந்தன
  நாம் முன்னேறி விட்டோம்
  இனி நாகரீகமான ஆயுதங்களையே பாவிப்போம்
  வெலிக்கடை கடையருக்கு நாம்மென்ன? குறைந்தவர்களா??
  வடக்கிலும் கிழக்கிலும் பலமடங்கு வெலிக்கடைகள்.
  இனியொன்ன பிரச்சனை
  பெரியபுலியா!
  சின்னப்புலியா!!
  அல்லது மனிதனா?

Comments are closed.