மங்கள சமரவீரவைத் தொடரும் இலங்கை அரசு

இலங்கையில் ஊழல் குறித்த நீண்ட அறிக்கை ஒன்றை என்ற தன்னார்வ நிறுவனம் வெளியிட்டது. இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற மங்கள சமரவீர இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சிறிலங்கா ஜனாதிபதிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட சுவரொட்டிகளை அச்சிட்டமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மங்கள சமரவீர விசாரணையின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்ட மங்கள சமரவீரவிடம் இன்று நண்பகல் 12.30 மணி முதல் 3.30 மணிவரையில் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
ஒரு சுவரொட்டியை வெளியிட்டமைக்காக தன்னை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்த மங்கள சமரவீர, இந்த நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து வருவதையே இது காட்டுவதாக அமைந்துள்ளது எனவும் கூறினார்.

மகிந்த ராஜபக்சவை  அதிகாரத்தை  உருவாக்குவதில் மங்கள் சமரவீர ஆரம்பத்தில் பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.