மக்கள் தொலைக்காட்சி மார்க்ஸ்சிஸ்ட் தொண்டர்கள் தாக்குதல்.

மக்கள் தொலைக்காட்சி நேற்று மார்க்ஸ்சிஸ்ட் தோழர் வரதராஜன் தற்கொலையை கொலை என்றும் இக்கொலை உட்கட்சி பூசலால் நடந்த ஒன்று என்றும் செய்தி வெளியிட்டது. வரதாராஜன் தற்கொலை தொடர்பாக இது கடும் சர்ச்சைகளைக் கிளப்ப இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த மார்க்ஸ்சிஸ்ச் கட்சித் தொண்டர்கள் வீசி அலுவலகக் கண்ணாடிகளை உடைத்தனர். இதில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்தனர்.  இத்தாக்குதலை மார்க்ஸ்சிஸ்ட் தொண்டர்கள் மேற்கொண்ட போது அவர்கள் பெரிந்திரளாக வந்து கையில் கட்சிக் கொடியுடனே தாக்குலை மேற்கொண்டனர்.வரதராஜனின் தற்கொலை என்பது மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலைமையால் அநியாயமான முறையில் நடத்தப்பட்ட ஒன்றும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்றாலும் தோழர் வரதராஜனின் உடலை வைத்து மார்க்ஸ்சிஸ்டுகளுக்கு எதிராக பிரச்சாரம் ஒன்றைச் செய்ய தமிழக உளவுத்துறையை ஆளும் கட்சித் தலைமை நிர்பந்தம் செய்ததாகவும் செய்திகள் கசிந்திருப்பதும் மறுக்க முடியாத் ஒன்றுதான்.