மக்கள் கொல்ல்ப்பட்ட இடங்களில் இராணுவ முகாம்கள் : கோதாபய

வன்னியில் மக்கள் குடியேற்றப்படவில்லை. முகாம்கள் என்ற பெயரில் மக்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல் கோதாபய ராஜபக்ச நம்பிக்கை வைக்கக் கூடிய மனிதர் என்கிறார் கே.பியும் அவரின் புலம்பெயர் அடிவருடிகளும். இனப்படுகொலையின் சூத்திரதாரியாம கோதாபய எதிர்வரும் நாட்களில் வன்னியில் இராணுவ பயிற்சி முகாம்கள் நிர்மாணிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் நிரந்தர இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டதன் பின்னர் வன்னியில் நிரந்தர இராணுவ பயிற்சி முகாம்களை அமைக்கும் பணி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் அதிகளவு படையணிகள் வன்னியை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் தற்போது காணப்படும் தற்காலிக இராணுவ முகாம்களுக்கு பதிலாக சகல வசதிகளுடன் கூடிய நிலையான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

One thought on “மக்கள் கொல்ல்ப்பட்ட இடங்களில் இராணுவ முகாம்கள் : கோதாபய”

  1. கமக்காரர் கமம் செய்ய கோத்தபாய விட மாட்டார் போல இருக்கு அதனால எங்கட பிள்ளகளயும் ஆமியில சேர்த்து விட வேண்டியதுதான்.கடவுள் ஒரு விழி இல்லாட்டி இன்னொரு வழி காட்டுவார் இப்ப கோத்தபாய வடிவில காட்டுறார்.அவருக்கு பால் புட்டும் செய்து பலாச்சுளவோட சீனி மரவள்ளீக் கிழங்கும் அவிச்சுக் கொடுத்து விடுவம் மனுசன் மசின்சிடும்.மனுசியின்ர கருணக்கிழ்ங்கு மனுசனுக்கு இரவில அவர் அவதிப்படாமலிருக்க உதவும் ஒரு நட நட்ந்தால் எல்லாம் சரியாகும்.

Comments are closed.