மக்கள் கதறி அழுதனர் – ராஜபக்சே ஒத்துக்கொண்டார் : திருமா

திருமாவளவன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலிருந்து..
5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்கவில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை.

பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர். மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர்.

thirumaஇந்த விவரங்களை எல்லாம் தொகுத்து இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவிடம் விளக்கி சொன்னோம். மழைக் காலத்திற்கு முன்னதாக அனைவரையும் சொந்த இடங்களுக்கு அனுப்ப அவரும் ஒத்துக்கொண்டார்.

One thought on “மக்கள் கதறி அழுதனர் – ராஜபக்சே ஒத்துக்கொண்டார் : திருமா”

  1. திருமாவின் பேச்சு சந்தர்ப்பவாதமாக இருக்கிறது. கொழும்பில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக பேசுகிறார். இந்தப் பயணம் எந்த நல்லதையும் ஏற்படுத்தாத சூழலில் ஒன்றிலோ இதை அவர் தவிர்த்திருக்க வேண்டும். அல்லது எங்கும் எப்போதும் ஒரே குரலில் பேச வேண்டும். குரலை உயர்த்தி ஒரு இடத்திலும், தாழ்த்தி இன்னொரு இடத்திலும் பேசுகிற திருமா. முதலில் நாங்கள் தனி அறிக்கை வெளியிடுவோம் என்றார். சென்னைக்கு வந்தபிறகு குழுவின் அறிக்கைதான் என் அறிக்கை என்று விட்டா.ர்

Comments are closed.