இலங்கை மக்களின் வரிப்பணத்தில் மகிந்த ராஜபக்ஷ..

Rajapakseஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக டொயோடா ரகத்திலான குண்டு துளைக்காத ஐந்து சொகுசு ஜீப் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளதாகவும், இதன் ஒரு வாகனத்தின் விலை சுமார் 10 கோடி ரூபாவாகும் எனவும் மிகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் ஜனாதிபதியைக் கொலை செய்வதற்கான உள்ளக சூழ்ச்சியிருப்பதாக பிரசாரப்படுத்தி ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஆர்.பி.ஜி. குண்டுத் தாக்குலுக்குக் கூட தாக்குப்பிடிக்கக் கூடிய வகையிலான வாகனங்களே இறக்குமதி செய்யப்படவுள்ளன.

தற்போது இலங்கையிலுள்ள குண்டு துளைக்காத வாகனங்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய வலயத்தில் உள்ள நாடுகளில் உள்ள வாகனங்களை விடவும் அதிகமாகும் எனத் தெரியவருகிறது. இந்த குண்டுத் துளைக்காத வாகனங்களில் ஏராளமானவை ஜனாதிபதியின் உறவினர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன.