மகிந்த வெற்றிபெற்றார் : தேர்தல் ஆணையாளர் மிரட்டலின் மத்தியில் அறிக்கை

கடந்த சில மணி நேரங்களாக எனக்குத் தரப்பட்ட அழுதங்களும் மிரட்டல்களும் தாங்கமுடியாதவை. எனது வரலாற்றில் இவ்வாறான அழுத்தங்களை முன்னெப்போதும் நான் சந்தித்ததில்லை. நான் தேர்தல் ஆணையாளராக 8 வருடங்கள் கடைமையாற்றுகிறேன், இப்போது எனது பதவியிலிருந்து என்னை விடுவிக்குமாறு நான் வேண்டுகிறேன். வாக்குகள் எண்ணப்படும் வேளையில் பலர் மிரட்டப்பட்டனர். இந்த அறிக்கைக்குப் பின்னர் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. சூழ்னிலைகளின் அடிப்படையில் இந்த முடிபுக்கு வருமாறு நான் கட்டாயப்படுத்தப்பட்டேன். தேர்தல் ஆணையகத்தின் பாரம்பரிய வழமைகளின் கீழ் நான் இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார் என அறிவிக்கும் போதிலும், இது வழமையான அறிக்கையே தவிர எந்த சட்டவமைப்பிற்கும் உட்படாதது. என தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார். இதே வேளை மகிந்த அரசின் இராணுவத்தினால் தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 thoughts on “மகிந்த வெற்றிபெற்றார் : தேர்தல் ஆணையாளர் மிரட்டலின் மத்தியில் அறிக்கை”

  1. நடுநிலைச்செய்திகள் என்ற போர்வையில் அவரவர் ஆதங்கங்கள் வெளிப்படும்.

  2. நாங்கள் இந்த நாட்டிலே கொழும்புவில் இருக்கிறோம். எங்கள் மயக்கிவிட்டு இதையெல்லாம் யாரோ நடத்துகிறார்களோ? நீங்கள் என்ன> பேய் பிசாசா? உங்கள் கண்களுக்கு மட்டும் இதெல்லாம் தெரிகிறது. மக்களை மடையர்களாக நினைத்து பொய்யான தகவல்களைத் தெரிவித்துக்கொண்டு இருக்காதீர்கள் தயவுசெய்து நந்திக்கடலில் தள்ளியமாதிரி எங்களையும் எங்காவது தள்ளிவிடாதீர்கள்.

Comments are closed.