மகிந்த ராஜபக்ச என்ற இனவாதி சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார் : எட்வர்ட் டெவி

மகிந்த ராஜபக்ச என்ற இனவாதி இன்று தனது முகாமைச் சார்ந்தவர்களையே சிறைப்பிடிக்கும் அளவிற்கு மோசமான சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார். இவருக்கு அழுத்தங்கள் வழங்கப்பட வேண்டும். இது இரண்டு வகையில் மேற்கொள்ளப்படலாம். முதலாவதாக ஐரோப்பிய ஒன்றியம்,ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளூடாக செயற்பட வேண்டும்.இரண்டாவதாக இவரின் நண்பனாகத் தொழிற்படும் சீன அரசின் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டும். வன்னியில் நடந்த சம்பவங்கள் இன்னும் என்னை உறுத்திக்கொண்டு இருக்கின்றது. உலகத் தமிழ் போரம் என்ற அமைப்பின் செயற்பாடுகள் காத்திரமானவை. அது ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு பிரித்தானியாவில் கிங்ஸ்டன் தமிழ்ப் பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய லிபரல் டெமோகிரட் எம்.பி ஆன எட்வர்ட் டெவி தெரிவித்தார். நேற்று, 27.03.2010 இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய தான் தமிழ் மக்களுக்காகப் போராடுவேன் எனவும் தெரிவித்தார்.

6 thoughts on “மகிந்த ராஜபக்ச என்ற இனவாதி சர்வாதிகாரியாக வளர்ந்துள்ளார் : எட்வர்ட் டெவி”

 1. மகிந்த ராஜபக்சவின் மகனுக்கு பிரித்தானிய கடற்படைப் பயிற்சி வழங்கப் பட்டது.
  அப்போது போர்க் குற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.
  பட்டமளிப்பு விழாவின் பிரதம விருந்தினர் மகிந்த ராஜபக்ச.
  ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பிரித்தானியா இலங்கைக்குப் பெருமளவில் ஆயுதங்கள் விற்றது.
  யாருடைய நட்பில் அதெல்லாம்நடந்தது?

  எட்வட் டேவி அதையெல்லாம் பற்றிப் பாராளுமன்றத்தில் கதைப்பாரா?

 2. இவரும் இவரோடு சேர்ந்த இன்னொருவரும் இன்னும் பல வெள்லைகலும் சேர்ந்து தான் தமிழரது வாழ்வோடும் விலையாடியவர்கள். இவர்கலை அழைத்து கோப்பி கொடுது பள்ளீக் கூடத்திற்கு புதிய கட்டிடம் வாங்க முடியுமா என்றூம் கவனியுங்கள் இல்லை என்றால் கதைத்தே எம்மைக் கரைய வைத்து விடுவார்கள்.

  1. தமிழ்மாறன் தயவு செயது உமது விசர்த்தனமான கருத்துக்களை அனுப்புவதை நிறுத்தும். எம்மைப் பொறுத்தவரை சிங்கள இன வாதத்தை வளர்த்து விட்டவர்களைக்கொண்டுதான்அதனை வெட்ட வேண்டும். மகிந்தவை வளர்த்து விட்டவர்களே அந்தவளர்ச்சியின்ஆபத்தைப் புரிந்து கொள்கின்ற வேளையில் உமது லூசுத்தனமான கொமன்ட்சை விட்டுவிடும்.

   1. you have no manners bro, you think you better than every one.i think you the fool bro.

   2. விரல் சூப்பித் திரிந்தோர் தமக்குள்ள குரையை மறக்க விசர்க்கதை பேசுவதால் பரங்கிகள் எல்லோரையும் நாம் மீட்பராக ஏற்க மாட்டோம்.

   3. மகிந்தவை வளர்த்து விட்டவர்கள் தான் ஒரு காலம் புலிகளையும் வளர்த்து விட்டார்கள்.
    அவர்கள் யாரையும் வெட்டுவது தமிழர் தின்னுவதற்காக அல்ல தாங்கள் தின்னுவதற்காக.
    நாங்கள் அவர்களின் கத்திடயிலிருந்து தப்ப வேண்டுமென்றால் எட்ட இருக்க வேண்டும்.
    இதில் இந்தியா வேறல்ல மேற்குலகு வேறல்ல.

Comments are closed.