மகிந்த – சரத் மோதல் வலுக்கிறது

ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் mahindha-sarathசெயலாளர் பதவியை ஏற்குமாறு முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அந்தப் பதவியை சரத் பொன்சேகா இதுவரை ஏற்காமையினால் ஜனாதிபதி சீற்றமடைந்திருப்பதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை கிடைக்காதுபோனமைக்கான பொறுப்பை சரத் பொன்சேகா மீது சுமத்துவதற்காக ஜனாதிபதி குறித்த அமைச்சின் செயலாளர் பதவியை தமக்கு வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் அந்தப் பதவியை பொறுப்பேற்பதை அவர் தாமதப்படுத்தி வருகிறார்.

மேலும் இலங்கை இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் ஏற்பாடுகளை சரத்பொன்சேகா தற்போது மேற்பார்வை செய்துவருவதாகத் தெரியவருகிறது.