மகிந்த – சரத் : தீவிரமடையும் முரண்பாடு

ராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 17 oct 2009 கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் நடைபெற்ற இராணுவக் கண்காட்சியின் போது மகிந்த ராஜபக்ஷ மற்றும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேகா ஆகியோர் கலந்துகொண்ட போதிலும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இதில் கலந்துகொள்ளவில்லை.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கடந்த 16ம் தகிதி வெளியிடப்பட்ட நூல் வெளியிட்டு விழாவிற்கு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், அந்த விழாவில் கோதாபய ராஜபக்ஷ மாத்திரமே கலந்துகொண்டிருந்தார்.

கெத்தாராமவில் நடைபெற்ற இராணுவக் கண்காட்சியின் போது ஜனாதிபதி மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவரம் உரையாடுவதைப் போன்றதொரு புகைப்படத்தை எடுக்க ஜனாதிபதியின் புகைப்படப் பிடிப்பாளர் கடும் பிரயத்தனம் மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லை.