மகிந்த உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழுவின் பயணம் ரத்து!

  
  அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஏதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ  உள்ளிட்ட 80 பேர் கொண்ட குழுவின் பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அழைத்துச் செல்லவிருந்தவர்களில் பலருக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுரகம் வீசா வழங்க மறுத்துள்ளமையே இதற்கான காரணம் என கூறப்படுகிறது.

அமெரிக்க தூதரகம் இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது. குழுவில் இடம்பெற்றிருந்த பலரின் செயற்பாடுகள் அவரிகளின் பின்னனி குறித்து ஆராயும் போது, அவர்களுக்கு வீசா வழங்க முடியாது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
 
 
 அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதியுடன், அமைச்சர் கருணா, ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ, ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் உள்ளிட்ட 80 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பல நபர்கள் தொடர்பில் அமெரிக்காவுக்கும் பாரிய சிக்கல்கள் இருப்பதாக தூதரகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வீசா வழங்க மறுத்தாலோ, அல்லது அவர்களுக்கு எதிராக அமெரிக்காவில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டாலோ, தனது பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடும் என உணர்ந்து கொண்ட ஜனாதிபதி தனது பயணத்தை இடைநிறுத்த தீர்மானித்துள்ளார்.