மகிந்த ஆட்சியின் தொடரும் இனச் சுத்திகரிப்பு : கிளினொச்சியில் அழிவுகளிடையே விகாரை

போரில் அழிவுற்ற கட்டிடங்களின் நடுவே புதிய வெள்ளை நிறக் கட்டிடம் ஒன்று தலை நிம்ர்ந்து நிற்பது புலிகளின் முன்னைய தலை நகரான கிளினொச்சிக்குச் செல்லும் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. பொது சன நடமாற்றம் இல்லாத, இராணுவம் மட்டுமே வாழ்கின்ற கிளினொச்சியில் காணப்படும் பௌத்த விகாரைதான் அது.

முன்னரே இருந்த விகாரை புலிகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தது எனவும் அதையே மீள்கட்டமைப்புச் செய்ததாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க பிரித்தானிய ரைம்ஸ் சஞ்சிகைக்கு இது குறித்துத் தெரிவித்தார். கார்த்திகேசு சிவத்தம்பி ரைம்ஸ் இற்குத் தெரிவிக்கையில் அவ்வாறான எதுவும் முன்னர் அங்கு காணப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

கிளினொச்சியைச் சிங்கள மயமாக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என பல தமிழ் அரசியல்வாதிகள் ரைம்ஸ் இற்குத் தெரிவித்துள்ளனர். தொல் பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த சரத் திசானாயக்க, இவ்வாறான 60 பௌத்த விகாரைகள் தமிழ்ப் பகுதிகளில் ஏற்கனவே அமைந்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகக் காணப்பட்ட இவ்வாறான விகாரைகளை ஏன் இப்போது மீளமைப்புச் செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் கருத்துத் தெரிவித்தனர்.

 

 

மகிந்த அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் கலாச்சார ஆக்கிரமிப்பாக நடைபெறும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக ஆர்வலர்கள் போராட முன்வர வேண்டும் என பேரதனைப் பல்கலை கழக விரிவுரையாளர் ஒருவர் இனியொருவிற்குத் தெரிவித்தார்.

14 thoughts on “மகிந்த ஆட்சியின் தொடரும் இனச் சுத்திகரிப்பு : கிளினொச்சியில் அழிவுகளிடையே விகாரை”

 1. அபிவிருத்தியின் பேரால் தமிழ்தேசிய உணர்வை மழுங்கடிக்க மானமுள்ள தமிழன் துணை போகமாட்டான்:

  தமிழன் தனக்கென தமிழ் இராட்சியத்தை உருவாக்கி ஆண்ட சரித்திரம் உண்டு. இந்த வகையில் 16ஆம் நூற்றாண்டு காலத்தின் இறுதியில் தமிழ் அரசனான சங்கிலிய மன்னனால் இலங்கையின் வடக்குக் கிழக்கு மகாணமும் வேறு சில பகுதிகளும் உள்ளடங்கலாக தமிழ் இராட்சியம் பரந்து இருந்தமை வரலாற்று ரீதியான உண்மையாகும். இந்த வகையில் தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்பவற்றை பேசுவதற்கும் அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அந்த உரிமையையும் தமிழர் கொண்டிருந்த இறைமையையும் இன்றுவரை எவரிடமும் தமிழன் ஒப்படைக்கவில்லை என் றும் கொள்வதே சாலச் சிறந்ததும், பொருத் தமானதுமாகும்.

  அந்நியராம் ஆங்கிலேயர் தம்மால் கைப் பற்றப்பட்டு ஆளப்பட்ட இராட்சியங்களான கண்டி, கோட்டை, யாழ்ப்பாணம் இராட்சியங்கள் என்பன எந்த இனத்தால் ஆளப்பட்டதோ அவ் இனத்திடம் மீள ஒப்ப டைக்கப்பட முன்வரும் போது முன்னைய தமிழ்த் தலைவர்கள் முன்பிருந்த சிங்களத் தலைவர்களுடன் ஒன்றாக ஆளுவதற்கு நிபந்தனைகள், புரிந்துணர்வு, நன்னம் பிக்கை அடிப்படையில் இணக்கம் கண் டார்களே தவிர தமிழ்த் தேசிய உணர்வை தமி ழர் தாயகமாகிய வடக்குக் கிழக்கு மாகா ணத்தை பெரும்பான்மை சமூகத்திடம் தாரைவார்த்துக் கொடுக்கவும் இல்லை. தமிழர்கள் தம்முடைய இறைமையை யாரிடமும் ஒப்படைக்கவும் இல்லை. இக் கருத்து தமிழ்த் தலைவர்கள் நால்வர்க ளுக்கு எதிராக யூரலல்லாத விசாரணை யில் (கூணூடிச்டூச்tஆச்ணூ) மேல் நீதிமன்றவழக் கில் ஜி.ஜி.பொன்னம்பலம் (கி.இ), முன் னைநாள் சொலிசிற்றர் ஜெனரல் பிள்ளை நாயகம் ( கி.இ), மு.திருச்செல்வம் (கி.இ) ஆகியோர்களால் முன்வைக்கப்பட்ட வாத மும் கூட.

  தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலை வர்களும் ஏற்றுக் கொண்ட நியதிகளின் படி தென்னிலங்கை ஆட்சியாளர்கள் நட வாமல் பெரும்பான்மைச் சமூகம் சிறு பான்மை சமூகத்தை தனித்து ஆளப்புறப் பட்டதனாலேயே தன்னைத்தான் ஆண்ட தன்மானமுள்ள தமிழன் அந்நோக்கத்திற் காக தன்னால் ஒப்படைத்திருக்காத இறை மையைப் பிரயோகிக்கவும் தனது தேசி யத்தை, தனது வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகக் கோட்பாட்டை நிலை நிறுத் தவும் பெரும்பான்மைச் சமூகத்தின் நடவ டிக்கைகளால் தள்ளப்பட்டனர். எனவே இந் நிலையில் தமிழரின் எதிர்பார்ப்பு தமிழ்த் தேசிய உணர்வே தவிர அபிவிருத்தியல்ல. எனக் கூறுவதே சாலப்பொருத்த மானதாகும்.

  தமிழ் மக்கள் அதுவரை காலமும் அனுபவித்துவந்த உரிமைகளை வென்றெடுப் பதற்காக, ஆரம்ப காலத்தில் தமிழர்களுடைய பெரும் கட்சியாகத் திகழ்ந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் பெரும்பான்மை இனத்துடன் சம உரிமையுடன் இணைந்து வாழும் போக்கைக் கைக் கொண்டு பெரும்பான்மை சமூகத்தினரு டைய ஆட்சியாளரால் பல கோணத்தி லும் ஏமாற்றப்பட்ட நிலையில் அவரால் கைக்கொள்ளப்பட்ட நடைமுறை தோல் வியைத் தழுவியது.

  தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலத்துடன் இணைந்து செயற்படும் போக்கு எந்தக் காலத்திலும் வெற்றிபெறுமா என்பது அர சால் முன்னெடுக்கப்பட்டு நடந்துவந்த செயற்பாடுகளின்படி கேள்விக்குறியா கவே அமைகின்றது. காரணம் பெரும் பான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசு காலத் திற்குக் காலம் தமிழர் தாயகத்தில் திட்ட மிட்ட குடியேற்றத்தின் மூலம் தாயக நில அபகரிப்பைச் செய்ததுடன் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்பவற்றில் சிறுபான்மை யோர் மீது காட்டிய புறக்கணிப்பைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளும் புறமும் தமிழ்க் கட்சிகளால் எடுத்துக்கூறியும் இவ் விடயங்களை ஆட்சேபித்தும் பெரும்பான்மை யோரின் அரசின் போக்கில் இன்றுவரை எவ் வித மாற்றம் ஏற்படவில்லை. எனவே சிறு பான்மை பெரும்பான்மையுடன் ஒற்று மையாகச் சேர்ந்து செயற்படும் கோட்பாடு தென்னிலங்கை ஆட்சியாளரது குறுகிய நோக்கால் வெற்றி பெறவில்லை. மற்று மொரு கட்சியான தமிழரசுக்கட்சியின் தலை வர் தந்தை செல்வாவால் சமஷ்டி ஆட்சி முறை முன்வைக்கப்பட்டது. இதுவரை காலமும் சமஷ்டி ஆட்சிமுறை தென் இலங்கை ஆட்சியாளரால் ஏற்றுக்கொள் ளப்படவில்லை என்பதுடன் அமரர் எஸ். டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவைப் பிரதமராகக் கொண்ட அரசு சமஷ்டி ஆட்சி முறையை முன்னெடுத்தபோது ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்த்து அக்கொள் கையும் கைவிடப்பட்டு சமஷ்டி ஆட்சி முறைக் கோட்பாடும் தோல்வியடைந்து விட்டது.

  இக்கோட்பாடுகள் ஒரு புறமிருக்க தமிழர்களுடைய தாயகக் கோட்பாடு, தமிழ்த் தேசியம் என்பவற்றை இலங்கையில் இருந்து அகற்றி இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் சிங்கள மொழி அரச மொழி என்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக் காவின் ஆட்சியில் 19.06.1956ஆம் திகதி முன் வைக்கப்பட்ட கருத்து ஒட்டுமொத்தமாகத் தமிழர் தாயகத்திற்கும் தமிழ்த் தேசியத்திற் கும் இந்த நாட்டில் இடமிருக்கமாட்டாது என்பதற்குப் பச்சைக்கொடி காட்டப்பட்ட செயலாகும். குறித்த சமஷ்டி ஆட்சி முறைச் செயற்பாடுகளுக்கு பெரும்பான்மை சமூ கத்தாலும் எதிர்க்கட்சியாலும் காட்டிய எதிர்ப்புக்களால் 1958இல் இனக்கலவரம் ஏற்பட்டதும், பண்டா செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அது பின் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதயாத்திரை எதிர்ப்பால் கிழித்தெறியப்பட்டதும் வரலாறாகும்.

  நில ஆக்கிரமிப்பு, இன ஒழிப்பு, இன ஒடுக்கல் போன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த மேற்கொண்ட, சேர்ந்து வாழும் புரிந்துணர்வு கோட்பாடும் ஒரே இலங்கை யில் சமஷ்டி முறை ஆட்சிக் கோட்பாடும் தோல்வியைத் தளுவிய அதே நேரம் தமிழர்களுக்கும் தமிழ்த்தாயகத்துக்கும் தேசி யத்துக்கும் மாறான அச்சுறுத்தும் செயற் பாடு துரிதமாகச் செயற்பட அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய நிலையில் அகில இலங் கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ, தந்தை செல்வா ஆகியோரால் பல கடைய டைப்பு, சட்டமறுப்புப் போராட்டம், சத்தி யாக்கிரகம், உண்ணாவிரதப் போராட்டங் கள் எனப் பலவித சாத்வீக முறையி லான போராட்டங்கள் மேற்கொண்டும் பயன ளிக்கவில்லை.

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தீர்வுகள் முன்வைக்கப்படும் பொழுது அதனை ஐக் கிய தேசியக் கட்சி செயற்படுத்தாமல் தடுத் ததும் குறிப்பாக முன்னைநாள் ஜனாதி பதியான சந்திரிகா குமாரதுங்கவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டம் ஐக் கிய தேசிய கட்சியால் குழப்பப்பட்டதும் அதேபோல ஐக்கிய தேசியக் கட்சி முன் வைத்த மாவட்ட சபை ஆட்சிமுறைக்கு (ஈ.ஈ.இ) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் எதிர்ப்புத் தெரிவித்திருந்தும் அச்சபை முறை (ஈ.ஈ.இ) நடைமுறைக்கு வந்தது மான செயற்பாடுகள் அனைத்தும் சமஷ்டி ஆட்சிக்கோ தமிழர் தாயகக் கோட்பாட் டிற்கோ, தமிழ்த் தேசியத்திற்கோ எந்தக் காலத்திலும் இலங்கையில் இடமிருக்காது என்ற தென்னிலங்கை ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் அறை கூவல்களாக அமைகின்றன.

  1987இல் இந்தியாவின் தலையீட்டி னால் ஐக்கிய தேசியக் கட்சியால் நிறை வேற்றப்பட்ட 13 ஆவது அரசியல் திருத் தச் சட்டத்தின் வாயிலாக உருவாக்கப் பட்ட மாகாணசபை ஆட்சிமுறையில் மாகாணசபைக்குச் சட்டத்தில் கிடைத்த அதிகாரம் கூட பெரும்பான்மை அரசால் மாகாணசபை அமைக்கப்பட்டும் அதிகா ரம் வழங்கப்படாமலும் இதுவரை வட கிழக்கு மாகாணங்களுக்கு ஒரு தமிழர் ஆளுநராக நியமிக்கப்படாமலும் இன்று வரை சாக்குப் போக்குக் காரணங்கள் கூறி தட்டிக்கழிக்கப்பட்டு வருகின்றன என் றால் வடகிழக்கு இணைந்த தமிழ்த் தாய கம், தமிழ்த் தேசியம் என்பது தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களப் பெரும்பான்மை இன அரசு தானாக முன்வந்து வழங்கும் என்றோ அல்லது பேச்சு மூலம் தீர்க்கப் படும் என்றோ எதிர்பார்க்கக் கூடிய ஒன்றல்ல.

  ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மைத் தமிழர்க ளுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய் யும் வகையில் தமிழர்கள் திருப்தியடை யும் வகையில் அரசியல் தீர்வு வழங்கப் படும் என காலாகாலமாகத் தேர்தல் காலங் களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி னரே தவிர குறித்த வாக்குறுதிகளை இதுவரை எந்தக் கட்சியும் நிறைவேற்ற முன்வரவுமில்லை, நிறைவேற்றி இருக்கவுமில்லை. இது இவ்வாறிருக்க வழமை யான பாணியில் இம்முறையும் இதே கோஷம் தென்னிலங்கைக் கட்சிகளால் முன் வைக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் தமிழர்களுடைய உரிமைகளை வலி யுறுத்த அவர்களுக்கு என ஒரு உறுதியான கட்சியோ அல்லது பிரதிநிதித்துவங் களோ கிடைக்காது போகும் வகையில் பல யுத்திகள் கையாளப்படுகின்றன. தமிழ்த் தேசியம்,தமிழ்த் தாயகக் கோட்பாடு என்பவற்றை மழுங்கடிக்க முனையும் வெளி யுலக வலைப்பின்னலில் தமிழ்க் கட்சிகளை சிக்க வைத்து உள்நாட்டிலும் வெளிநாட் டிலும் குறித்த கொள்கைக்கு மாறான செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப் பது, நடந்து கொண்டிருக்கும் நடவடிக்கை களை உன்னிப்பாக ஆராயும் பொழுது உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்ப தாகப் பலரும் பேசிக் கொள்வதில் எந்தவித அர்த்தமும் இல்லையெனக் கொள்வதற்கு இடமில்லை.

  உலக நாடுகளிடையே தற்காலத்தில் காணப்படும் மனித சமுதாயத்தின் உரிமை மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய ஆட்சி, மொழி, சமயம், அரசியல், பிராந்தி யம் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற தற் கால போக்கிற்கு அமைய சர்வதேசங்களின் அழுத்தங்களினாலேயே ஒரே இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒரு தன் னாட்சி அமைய வேண்டும் என்ற நிலை இருந்து வருகின்றது. இந்த வகையில் இலங்கை நாடு இந்தியப் பிராந்தியத்திலி ருந்து பிரிந்த பகுதி, இந்தியாவில் இருந்து வந்தவர்களே இலங்கை மக்கள் என்கின்ற தன்மையில் இலங்கைப் பிரச்சினையில் தலையிட இந்திய நாட்டுக்கு முதல் உரி மையுண்டு. அதேபோல சங்கிலியன் ஆட் சியைப் பறித்த போர்த்துக்கல், ஒல்லாந்து, ஆங்கில நாடு ஆகியவர்களுக்கும் இலங் கையின் இறைமையைப் பாதிக்காத வகை யில் தலையீடு செய்து பிணக்கைத் தீர்த்து வைக்க உரிமையுண்டு. தமிழரது ஆட் சியை 1947 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு மூலம் பிரித்தானிய ஆட்சியாளர் பாது காப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தி உரி மையை வழங்கி அப்பாதுகாப்பு ஏற்பாடு கள் 1972ஆம் ஆண்டு இலங்கை ஜனநா யக சோசலிசக் குடியரசு யாப்பால் நீக்கப் பட்ட உத்தரவாதம் மீறப்பட்டு குறித்த 1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பால் பெரும்பான்மை இனத்திற்கு மட்டும் சிறப் புரிமை வழங்கியமை மற்றும் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பால் சிங்கள மொழி அரச மொழி என உறுதிபடக் கூறி தமிழ் மொழியும் அரச நிர்வாக மொழியாக அமையும். ஆனால் அதற்கான சட்டங்கள் ஆக்கப்பட வேண்டும் என கண்துடைப் பிற்கான வாசகம் காட்டப்பட்டு அதற்கான சட்டங்களை ஆக்காது தவிர்க்கும் அதே நேரம் தமிழர்கள் விடயத்தில் மென்மைப் போக்கு கடைப்பிடிப்பதாக உலகிற்குக் காட்டி வருவதை மனிதாபிமான தன்மை யில் தட்டிக் கேட்பதற்கும் பிரச்சினையில் தலையிடவும் மேற்குறித்த நாடுகளுக்கு உரிமை கிடைக்கிறது எனலாம். தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன இல்லை என்றால் அபிவிருத்தி என்பது அர்த்தமற் றது. அபிவிருத்தி என்பது எக்காலத்தி லும் மேற்கொள்ளக் கூடிய ஒன்று. ஆனால் அனுபவித்து வந்த தமிழர் தாயகம்,தமிழ்த் தேசியத்தை இழந்தால் அப்பிரதேசத்தில் அபிவிருத்தி மேற்கொண்டாலும் கூட உரிமைப் பாதிப்பால் அங்கு அபிவிருத் தியை அனுபவிக்க முடியாமல் வேதனை நிறைந்த வாழ்க்கையாகத்தான் தமிழர்களுடைய வாழ்க்கை அமையலாம்.

  அரசினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் இலங்கை முழுவதும் இருந்து பெறும் வரிகள், வெளிநாட்டு உதவிகள் மூலம் மேற்கொள்ளப்படுவதால் அதே வேளை வடக்கு கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தியை மேற்கொண்டு ஓரம்காட்டாது சமநிலையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. எனவே வடக்கு கிழக்கில் அபிவிருத் திக்காகப் பெரும்பான்மை சமூக கட்சிக ளுக்கு சிறுபான்மையோரின் ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சி துணைபோக வேண் டும் என்பது காரணமாக அமையமாட் டாது. இலங்கை நாட்டின் பாகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் அமைவதால் அதற்குரிய அபிவிருத்தியை அரசு புரிய வேண் டிய கட்டாயநிலை இருப்பதால் அபிவி ருத்திக்காக அரசுடன் நிற்க வேண்டியுள்ளதென அரசுக்கு மறைமுகமாக உதவி நிற்பது அரசையும் அதேவேளை தன் இனத்தையும் ஏமாற்றும் மாபெரும் துரோ கமான செயலாகும்.

  அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர், தாயகம், தமிழ்த் தேசியம் என்ற உணர்வை மழுங்கடிக்கும் நோக்கத்துக்கு மானமுள்ள எத்தமிழனும் துணைபோக மாட்டார்கள் என்பதே தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வாக அமையுமென்பதில் இருவேறுபட்ட கருத்து இருக்க முடியாது.

  தற்பொழுது எதிர்நோக்கும் நாட்டின் அபிவிருத்தியா? தேசியமா ? என்ற போட்டியில் அபிவிருத்தி அணி வெற்றியீட்டின் தமிழர்களுக்காக அவர்களின் உரிமைக் காக குரல் எழுப்பும் மேலைத்தேய நாடுகளும், இந்திய மாநிலமும் உறங்கிவிடும். அதன் பின் தமிழ்த் தாயகம்,தேசியம் மழுங் கடிக்கப்பட்டு விடும். தட்டிக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். தமிழ்த் தாய கம் ,தேசியம் சார்பான அணி வடக்கிலும் கிழக்கிலும் வெற்றிபெறுமாயின் தமிழ னுக்கு ஒரே இலங்கைக்குள் ஆனால் தன் னைத்தான் ஆளும் கௌரவமான பூரண அதிகார ஆட்சி அமைவதற்கு வெளிநாடு களின் அழுத்தம் அமைய சாத்தியமுண்டு என்பதுடன் அபிவிருத்தியும் ஏற்பட வாய்ப் பிருக்கும் என்பதில் இருவேறுபட்ட கருத் தும் இருக்க முடியாது. நமது நாட்டு இரு தேசியங்கள் இருதாயகங்கள் இவை இரண்டும் ஒரே நாட்டுக்குள் இணைந்த அலகுகளாக ஒரு இலங்கைக்குள் யாப்பு ரீதியாக அரசியல் தீர்வு அமைவதன் மூலமே நீண்ட, நிரந்தர அமைதியான தீர்வு அமைய முடியும். எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவே இதற்குப் பதிலாக அமையப் போகிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  அருளம்பலம் இராஐரட்ணம் LLB
  சிரேஷ்ட சட்டத்தரணி,
  சட்டவிரிவுரையாளர்

 2. என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால் எதையும் எதிர்த்துக் கொண்டிருந்தால் எதிரி தொடர்ந்து செய்து கொண்டிருப்பான் ஏற்றூக்கொண்டுவிட்டால் நிறூத்தி விடுவான்.புத்தர் கோயிலுக்கு தமிழரெல்லாம் அர்ச்சனை தட்டோடு போனால் யோசிப்போம் அது மட்டுமல்ல புலம் பெயர்ந்த மண்ணீலும் நாங்கள் புத்தர் கோயில்கள் கட்டுவோம் பூஜை செய்வோம் பாருங்கள் பகிடியை.உணர்சியாய் அணூகாமல் அறீவால் அணூகினால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.

  1. இந்து கிறிஸ்துவக் கோவில்களை இடித்தா புத்த விகாரை கட்டவேண்டும் தமிழ்மாறன்? இதைவிட தமிழர் எல்லோரும் சிறிது காலம் புத்த சமயத்தைப் பின்பற்றி சிங்களவர் போல் நடித்தால் தமிழரின் உரிமையை இந்தா வாங்க காணும் நடித்தது என்று கொடுத்துவிடுவார்கள்!

   1. பங்காருவை அம்மா ஆக்கி இருக்கிறோம் மற்றூம் கல்கி அவதாரம் எடுத்துள்ள தெலுங்கனை கடவுள் என் கிறோம் புத்தரையும் ஒரு வைரவர் ஆக்கினால் சிங்களவனது ஆக்கிரமிப்புச் சிந்தனை அடிபட்டுப் போகும்.

  2. கடவுளே இல்லை என்ற புத்தரை கடவுளாக்கி விட்டனர். புத்தரிடம் பூ கொண்டு போவதை விட மகின்தவிடம் எல்லா தமிழரும் அர்சனை தட்டுடன் போய் காலில் வ்ழுந்தால் எல்லா தமிழனும் ஒரே மாதிரி இருக்கிறானே நினைத்து சிங்களவருக்கு ஈடாக உரிமை தருவான்(ர்)

 3. Some Tamil academics question why the new sites are all from a period when Sinhalese Buddhist culture is thought to have flourished. Others want more Tamil archaeologists involved, as well as foreign experts or the UN, to ensure that the work is objective.

  “The archaeological department is the handmaiden of the Government,” said one prominent Tamil scholar, who declined to be identified for fear of reprisals.

  “The concern is that they’re going to identify these sites as Sinhalese, build lots of Buddhist shrines and tell Sinhalese people this is their lost land.”

  The Government announced last month that 300,000 local and foreign tourists had visited the northern province since the war ended – and officials say that the vast majority were Sinhalese from the south.

  Government archaeologists deny identifying sites on ethnic or religious grounds.

  “The emphasis from the President is that there should be a balancing of Buddhist and non-Buddhist sites,” said Sudarshan Seneviratne, the head of the Central Cultural Fund, which finances archaeology. “He’s a smart politician. He knows how to cater to all communities.”

  The JHU invoked the same argument in December when it presented 29 demands to Mr Rajapaksa, including one for him to rebuild dozens of Buddhist sites in the north. His response has never been made public but the JHU — which is led by a passionate amateur archaeologist — claims that the President concurred.

  “He agreed to take immediate steps to restore Buddhist sites in the north,” Udaya Gammanpila, a senior JHU member, said. “He said the army and the archaeological department were already working on it.”

  Even if that is untrue, the JHU can directly influence archaeology because Champika Ranawaka, its chief ideologue, is Environment Minister and his approval is required to excavate and protect sites

  Tamil scholars say that that may not be possible with the JHU in government and the army empowered to rebuild Buddhist shrines on contentious sites.

  “Archaeology has always been political in Sri Lanka,” said one Tamil historian overseas, who also did not want to be identified for fear of endangering relatives in Sri Lanka. “It’s no different today.”
  For more:
  http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7088337.ece

 4. வன்னியில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

  வன்னியில் புதுமாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால் வரையான பகுதிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபைத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.

  இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களது உயிரிழப்புக்களை சுனாமி பேரலைத் தாக்கத்தின் போது கொல்லப்பட்டதாக பதிவினை மேற்கொள்ளுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், முகாம்களுக்கு பொறுப்பான குறிப்பிட்ட அதிகாரிகள் கிராம அலுவலர்கள் மூலம் மக்களது உயிரிழப்புக்களைப் பதிவு செய்யும் போது சுனாமியின் போது உயிரிழந்தாக பதிவினை மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்து வருவதாகவும் முகாம்களில் உள்ள மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

  சர்வதேச ரீதியாக நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலில் வன்னிப் போர்க்குற்றங்களை மூடி மறைப்பதற்கான முனைப்புக்களில் இதனையும் ஒன்றாக இலங்கை அரசு மேற்கொள்வதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 5. தமிழர்கள் தென்னிலங்கையில் அமைத்துள்ள இந்துக்கோயில்களை சிங்களவர்கள் இடித்துத் தள்ளுகின்றார்களா? இனச் சுத்திகரிப்பு என்பதும் சிங்கள மயமாக்கல் என்பதும் தவர்க்க முடியாமல் நிகழவே செய்யும். அதற்குரிய அடித்தளத்தை அமைத்தவர்கள் தமிழர்கள் தாம். தமிழர்களாகிய எமக்கு பிரதேசம் ஒன்றும் முக்கியமானதாக இருந்ததில்லை. எப்போதும் தென்னிலங்கையில் போய் செருகிக்கொள்வதும் புலம்பெயர்வதும் போரின் நெருக்கடிக்கு அப்பால் விருப்பமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை எமது பெரு விருப்பத்துடன் காரணப்பொருளாக இணைந்துகொள்கின்றது. நாம் எமது பிரதேசத்தை விட்டு விலகி சிங்களப் பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் இருந்து எமக்கான தனித்துவத்தை நிலைநாட்ட முற்படுகின்றோம். இது என்றைக்கும் நிறைவேறாது. நாம் போகும் இடமெல்லாம் எமது காணிகளை தவிர கடவுள் கலாச்சாரம் போன்ற அனைத்தையும் காவிக்கொண்டே செல்கின்றோம். ஆனால் காணிகளைத் தான் தூக்கிக் கொண்டு போக முடிந்ததில்லை. முடிந்தால் சிங்களவர்களுக்கும் எமக்கும் ஒருவித பிரச்சனையும் வந்திருக்காது. எமக்கு நன்றாகத் தெரிகின்றது பிரதேசத்தை பிரிந்து எமக்கான தனித்துவத்தை தக்கவைப்பதோ அல்லது இனச் சுத்திகரிப்பு சிங்கள மயமாக்கலை தடுப்பதோ நடமுறைக்குச் சாத்தியமற்றதென்று இருந்தும் சத்தம் போடுகின்றோம். இதனால் யாருக்கு என்ன பிரயோசனம்? தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் தற்போது வாழ்பவர்கள் சிங்கள மொழி கற்பதும் பெளத்த மதத்திற்கு தழுவுவதும் சிங்கள கலாச்சாரங்களுக்கு மாறுவதும் தான் வாழ்வை பேரினவாதத்தின் ஊடாக வாழ்வை தக்கவைப்பதற்கான வழியாக இருந்தால் பிரதேசங்களை துறந்து தென்னிலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருப்பவர்கள் அதற்கு குறுக்கே வர எந்த தகுதியும் இல்லை. எமது தனித்துவம் குறித்த முதல்கேள்வி எமது பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டேதான் கேட்கமுடியும். அதுவே பலன் தரும் ஏனைய சத்தம் போடும் நிகழ்வுகள் மாரித்தவளைபோல் விடிய விடியக் கத்தி வயிறு வெடித்துச் சாகவேண்டியதுதான்.

  1. இஸ்ரேலில் யூதர்களூம் இதைத்தான் பலஸ்தீனியர்களூக்குச் சொல்கிறார்கள் அதேநேரம் பலஸ்தீனியர்களது பிரதேசத்தை ஆக்கிரமிப்புச் செய்கிறார்கள்.உலகெங்கும் அமெரிக்கராக பிரிட்டிஸ் பிரென்ச் ஆக இருக்கும் யூதரெல்லாம் இஸ்ரேல் கொடியைத்தான் காவுகிறார்கள்.ஆக நமக்கான கடமை என்ப்து நமது அடையாளமாகத் தொடர்வதில் குற்ற்ம் இல்லை இந்த அடையாளம் தான் நமது தன்னம்பிக்கை.சிங்கள மேலாதிக்கம் இதை திட்டமிட்டுச் செய்து நமது மன வலிமையை உடைக்கப் பார்க்கிறது ஆக நாற்காலியில் இருந்து யோசிப்பதை விட செயலாற்றூவது மிக முக்கியமானது.

  2. வடக்கு கிழக்கில் வாழ விரும்பாமல் தமிழர்கள் வெளியேறவில்லை.
   திட்டமிட்ட இனச்சுத்திகரிப்புநடக்கிறதைப் பற்றிப் பம்மாத்து வேண்டாம்.
   அதை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதே கேள்வி.

   இதுவரையிலான தமிழ்த் தலைமைகள் தவறி விட்டன.
   தமிழ் மக்கள் புதிய பாதைகளைத் தேட வேன்டிய நேரம் இது.
   தவறினால் மேலும் பெரும் இழப்புக்களைச் சந்திப்பர்.

   புலம்பெயர்ந்த தமிழரின் பங்குபற்றலை மறுக்க யாருக்கும் உரிமை இல்லை.
   புலம் பெயர்ந்தோர் சிலர் இங்குள்ள மக்களின் யதார்த்தநிலைமைகளைக் கருத்தில் கொள்ளாமல் ஒருதலையாகச் செயலில் இறங்குவதே விமர்சனத்துக்குரியது.

  3. ஈழத்தில் தமிழர்கள் தமது மண்ணைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்திருந்தால் மண் தான் தின்று பிழைத்திருக்க வேண்டும். ஒரு சிறு வீதமான தமிழர்தான் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெரும்பான்மை மக்களைப்போல் நடத்தப் பட்டிருந்தால் எதற்காக புலம்பெயரவேண்டும்? பாலும் தேனும் ஓடும் நாடுகளுக்கு வரமுடியவில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு, வந்தபின் ஓடுவது பாலும் தேனுமல்ல ஆனால் கசப்பான கஷ்டமான வாழ்க்கை என்பதால் சிலருக்கு வெறுப்பு.

   அரசியலால் வென்றெடுக்க முடியாததை ஆயுதபலத்தால் வெல்லலாம் என்ற நிலைமையும் இந்தியாவின் புண்ணியத்தால் இல்லாது போனபின் ஈழத்தமிழருக்கு அவர்களின் உயிரையும், உடமைகளையும் காத்துக்கொள்ள உண்மையில் அவர்களுக்கு என்ன மாற்று வழி உள்ளது? அவர்களுக்குள்ள முதற் பலம் அவர்களின் புலம்பெயர் உறவுகள்தான். இலங்கையில் மாத்திரமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் ஓரளவேனும் ஒற்றுமையாய் இருந்தார்களென்றால் காரணம் புலிகளுக்குப் பயந்துதானா? புலிகள் இல்லாததினால்தானா பல எலிகள் புறப்பட்டு பல்வேறு இணையத் தளங்களை உருவாக்கி இவற்றில் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் குழிபறிக்கும் கும்ம்பல்கள் என்று புழுத்துப் போய்விட்டன? ஒற்றுமை ஒற்றுமை என்று வாய் கிளியைக் கத்தி வயிறு வெடித்தாலும் பரவாயில்லை, இனி தமிழர் ஒற்றுமையாய் போராடாவிட்டால் ஈழத்தில் இருப்பது மாத்திரமல்ல புலத்தில் உழைத்ததும் பறிபோய்விடும். சிங்களப் பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்க பல நாடுகள் தயாராக இருப்பதால் இவர்களின் கை எங்கும் நீளும். உலகின் எந்த மூலையிலும் தமிழன் நிமதியாக வாழ முடியாது போய்விடும்.

   1. லண்டனுக்கு வந்த காலத்தில் நேதன்ஸ் எனும் பெரும் வண்டியைப் பார்த்து அது தமிழனது எனும் பெருமை பெற்ற போது லோகண்ணா சொன்னார் அட தம்பி அது தமிழனது அல்ல வெள்ளயின்ர எண்டு இன்றூ நாம் வளர்ந்திருக்கிறோம்.எம்மை ஈசன் எல்லார்க்கும் வளம் சிவன் கைவிட மாட்டான் ஆகக் கலங்காதீர்.வெல்வோம் வாழ்வோம்.வரலாறூ நம்மை விடுதலை செய்யும்.

   2. சூர்யா ஒரு சிறு திருத்தம்:
    காற் பங்கு ஈழத் தமிழருக்கு மேல் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.
    சற்று வசதியிருந்தோர் தூர நாடுகட்குப் போனார்கள். இல்லாதோர் இந்தியவில் முகாம்களில் அல்லற் படுகிறார்கள்.

 6. இப்பவும்தான் கேட்கிறார் அந்த அண்ணன், அட தம்பி நீ பெரிசா வளர்ந்த மாதிரித் தெரியவிலையே என்று!

Comments are closed.