மகிந்த அரசை நோக்கி கிறீஸ்தவ மத பீடங்களின் கண்டனம் !

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தெரிவானதின் பின்னணியில், ஒரு ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கைது செய்ய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிவில் சமூகங்கள் அதிலும் அதிகாரத்தை நிர்ணயிக்கும் நிலையிலுள்ள அமைப்புக்கள் தமது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளன.

உள்ளூர் பௌத்த பீடங்களான அஸ்கிரிய மற்றும் மல்வத்த ஆகியன வெளிப்படுத்திய கண்டனங்களைத் தொடர்ந்து இன்று கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிகன் மத குருக்கள் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆங்கிலிககன் தலைமை மத குருக்களான குமார இலங்க சிங்க, கொழும்பு பிஷப் துலிப் டீ சிக்கேரா, குருனாகலை விக்க ஜெனரல், கத்தோலிக்க மத குருக்களான மன்னார் ராயப்பு ஜோசப், மட்டக்களப்பு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, யாழ்ப்பாணம் தோமஸ் சவுந்தரனாயகம் ஆகியோர் கையெழுத்திட்ட இந்த அறிக்கை தேர்தல் வன்முறைகளையும் விமர்சித்துள்ளது.

இலங்கையில் சிவில் சமூகங்களும், மக்களமைப்புகளும் ஒருபுறம் அழிக்கப்பட்ட நிலையிலும், மறுபுறத்தில் தன்னார்வ நிறுவனங்களால் உள்வாங்கப்பட்ட நிலையிலும், எஞ்சியுள்ள மத சார் அமைப்புக்களே எதிர்ப்பியக்கங்களின் தீர்மானகரமான சக்திகளாக அமைந்துள்ளன.

One thought on “மகிந்த அரசை நோக்கி கிறீஸ்தவ மத பீடங்களின் கண்டனம் !”

  1. கிறீஸ்தவ அமைப்புக்கள் மதப்பிரசாரத்தில் மட்டும் ஈடுபடாமல் சனநாயகம் பற்றீயும் சிந்திப்பது ஆசிர்வதாதமாக இருக்கிறது.கிங்ஸ்லி சுவாம்பிள்லை கரம்பொன் மண்ணீற்கு சொந்தக்காரர் ஆகவேதான் பரந்த மனதுடன் விரிந்த உலகின் கதவுகளூக்கு செய்தி சென்றூள்ளது.

Comments are closed.