மகிந்தவிற்கு பன் கீ அனுப்பிய இன்னொரு கடிதம்!

un7ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தான் ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் நலன் குறித்தும் அரசியல் தீர்வு குறித்தும் அக்கடிதத்தில் தாம் வலியுறுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

“கடந்த திங்கட்கிழமை ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைபேசிவாயிலாக உரையாடினேன். இந்த வாரம் எனது விசேட பிரதிநிதியாக ஐ. நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி பொதுச்செயலாளர் லின் பஸ்கோவை, இது குறித்து ஆராயுமாறு அங்கு அனுப்பி வைத்துள்ளேன்.

எனது கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கும் படி அவரிடம் கொடுத்தனுப்பியுள்ளேன். இடம்பெயர் மக்களுக்கான சர்வதேசத்தின் நிலைப்பாட்டினை தெளிவுப்படுத்தி அறிக்கை ஒன்றைச் சமர்பிக்கும் படி நான் கேட்டு கொண்டுள்ளேன்” என பான்கீ மூன் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

எதுவித விசாரணைகளுமின்றித் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஐ.நா. ஊழியர் இருவர் குறித்துத் தாம் அழுத்தம் கொடுத்திருப்பதாகவும் ஐ.நா. செயலாளர்நாயகம் தெரிவித்தார்.