மகிந்தவிற்கு ஆதரவு வழங்கவேண்டும் : சுப்பிரமணியம் சுவாமி மிரட்டல்

இந்திய இராஜ தந்திர அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பவரும், தமிழ் நாட்டில் பார்ப்பன சாதி வெறி  சுலோகங்களை முன்வைப்பவரும், சிதம்பரம் கோவிலில் தமிழ் இசை பாடக்கூடாது என்று நீதி மன்றம் சென்றவரும், இலங்கையின் இனப்படுகொலையை ஆதரரித்தவருமான சுப்பிரமணியம் சுவாமி தமிழ் மக்கள் மகிந்தவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். தவிர இந்தியாவின் ஆதரவு தமிழர்களுக்குக்க் கிடைக்க வேண்டுமானால் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும் என்ற மிரட்டல் பாணியிலான பத்திரிகை அறிக்கை ஒன்றை சுப்பிரமணியம் சுவாமி வெளியிட்டுள்ளார். ஜனதாக் கட்சியின் தலைவரான இவர் ஜெயலலிதாவின் ஆலோசகர் என்பது குறிப்பிடத் தக்கது.

2 thoughts on “மகிந்தவிற்கு ஆதரவு வழங்கவேண்டும் : சுப்பிரமணியம் சுவாமி மிரட்டல்”

  1. ஜெயலலிதாவுக்கு வழங்குகின்ற அந்த?!!!!! ஆலோசனையோடுநிறுத்திக் கொள்ளுங்கள்.மகிந்தருக்கே சவால் நாங்கள் விட்டிருக்கிறோம்.இந்திய அரசே அன்பாகத் தான் எங்கள் பிரதிநிதிகளை கூப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள்!இனி ஒன்றும் இழப்பதற்கு எங்களிடம் இல்லை!எனவே யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையுமில்லை!!வந்தால் மலை,போனால்…………………ர்!

  2. சுப்பிரமணீய சுவாமி பேசுவது லண்டனில் கோமாலித்தனமாகவே பார்க்கப் படுகிரது.பண்ணாடை என்பார்கல்.இவர் பேச்சு வடிவேலுத்தனமானது.பிராமணர் என்பதை தவிர எந்த தகுதியும் இல்லாதவர் அந்த தகுதி ஒன்ரில் வாழ்பவர்.ஒரு வகையி மோட்டுச்சாம்பிராணீதான்.

Comments are closed.