மகிந்தவின் வெற்றியில் டக்லஸ் பாரிய பங்கு வகிப்பார் : ரங்கன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை வடக்கில் உறுதிப்படுத்தக் கூடியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்றும் இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக பகிரங்கமாக கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கான உத்தரவாதத்தை தாமே ஏற்றுக் கொண்டு ஒரு தலைவரை தேர்தலில் ஆதரிக்கும் ஒரேயொரு அரசியல் தலைவரும் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்று இலங்கை ஜனநாயக முன்னணியின்(SLDF) முக்கிய உறுப்பினரும் சட்ட வல்லுனருமான பிரித்தானியாவில் வாழும் ரங்கன் தேவராஜன் அவர்கள் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் குடிமக்கள் குரலுக்கான மேடை எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 2010 ஜனாதிபதித் தேர்தலும் இலங்கையின் எதிர்காலமும் என்ற தொனிப்பொருளின் கீழான மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்மாநாட்டில் உரை நிகழ்த்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளின் விளைவுகளை இப்போதே எமது மக்கள் கண்டு வருவதாகவும் இதன் பிரதிபலனாகவே 13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்துவதும் அதனை செழுமைப்படுத்துவதும் மற்றும் தாமதிக்காது வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நிலைப்பாடு இன்று அவரது மஹி;ந்த சிந்தனை கொள்கைப் பிரகடனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வெற்றி இன்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது வெற்றியில் பாரிய பங்களிப்பை செலுத்துவார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி மாநாட்டில் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா புளொட் தலைவர் சித்தார்த்தன் .பி.ஆர்.எல்.எப் செயலாளர் ஸ்ரீதரன் மற்றும் மோகன் ஆகியோர் உரைநிகழ்த்தியதுடன் ரங்கன் தேவராஜன் அவர்கள் இம் மாநாட்டிற்கு தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தமிழ் மக்களை தேர்தலைப் பகிஸ்கரிக்க முடியாமல் அரச துணைக்குழுக்களின் மிரட்டல் அமைந்திருக்கும் என பிரித்தானியாவைச் சேர்ந்த மற்றொரு சட்டத்தரணியான கணநாதன் புதிய திசைகள் உரையாடலின் போது தெரிவித்தார்.

10 thoughts on “மகிந்தவின் வெற்றியில் டக்லஸ் பாரிய பங்கு வகிப்பார் : ரங்கன்”

 1. அப்போ தோல்வியில் பங்கு கிடையாதா?இது என்னைய்யா நியாயம்?மொத்தத்தில் மிரட்டுவது என்றும் கடைசியாக முடிவெடுத்திருக்கிறீர்கள்!இங்கிலாந்திலிருந்து வந்து மிரட்டும் அளவுக்கு உங்களுக்கு குளிர் விட்டுப் போயிருக்கிறது!!பூனை(புலி)இல்லாத வீட்டில்……………..கொண்டாட்டம்!!!யாழ்ப்பாணத்து ஆக்களுக்கு உயிரெல்லாம் ம……………………கு சமமாம்!!!!

 2. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளின் விளைவுகளை 90 களின் ஆரம்பத்திலிருந்தே தீவகத்திலிருந்து தொடக்கி வைத்து காட்டிக்கொண்டேயுள்ளார்.

  பிரித்தானியாவில் வாழும் ரங்கன் தேவராஜன் அவர்கள் சொல்வார்கள், தீவகத்தில் அவரின் குடும்பம் வாழ்ந்திருந்து கூலிப்படையினால் துரத்துப்பட்டிரிந்தால் தெரியும்.

  கட்சிகள்ளை காப்பாற்ற வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தம் எல்லோரும் வாக்கு வேட்டையில்…..ஹ்ம்மம்ம்ம்ம்

  கட்சிகளை காப்பாற்ற வேண்டிய காலத்தின் நிர்ப்பந்தம் எல்லோரும் வாக்கு வேட்டையில்…..ஹ்ம்மம்ம்ம்ம்

  தமிழர்களின் விடிவிற்காக ஒரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்று சேர முடியாதவர்கள், இன்று மகிந்தவின் வாக்கிற்காக ஒரே மேடையில்………ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் ஸ்ரீதரனை விடுங்கள், ஆனால் புளொட் தலைவர் சித்தார்த்தனுமா?

  எல்லாம்

  காலம்.

  எல்லாவற்றிற்கும் மனித நேயம் வேண்டும்!

 3. இத் தேர்தலில் தமிழ்-முஸ்லிம்-மலையகத் தமிழ் மக்களின் முன்னால் ஒரு தெரிவுமே இல்லை.
  எனவே தான் பகிஷ்கரிப்புப் பரிந்துரைக்கப்படுகிறது.
  அதற்கும் அப்பாற் சென்று மக்கள் வாக்குக் கடதாசிகளைப் பழுதாக்குவார்களாயின் அது அரசியல் முதிர்ச்சியைக் குறிக்கும்.

  அதன் மூலம் இரண்டு பேரினவாதக் கொடுமைக்கார வேட்பாளர்களையும் அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் தில்லுமுல்லுக்காரர்களையும் மக்கள் நிராகரிக்கலாம்.

  இன்று ஒருவரை ஆதரிக்கிற சந்தர்ப்பவாதக் கூட்டம் அவர் தோற்றால் நாளை மாறி மற்றவரை ஆதரிக்கக் கூசாது என்பதை என்னால் உறுதியாகக் கூற இயலும்.

 4. கணனாதன் சொல்வதில்தான் உண்மை இருக்கிரது மக்கல் வாழ் விரும்புகிரார்கல்.

 5. // இலங்கை ஜனநாயக முன்னணியின்(ளுடுனுகு) முக்கிய உறுப்பினரும் சட்ட வல்லுனருமான பிரித்தானியாவில் வாழும் ரங்கன் தேவராஜன் அவர்கள் தெரிவித்தார்.//

  இலங்கை ஜனநாயக முன்னணியும் சரி தேசமும் சரி தேனியும் சாp மகிந்தரை அடுத்த மன்னராக்கும் ‘ஜனநாயகப் பணி’யில் ஈடுபடுவது நன்றாகப் புரிகின்றது. 

  மகிந்தவினதும் டக்ளஸினதும் ‘ஜனநாயகத்தை’ ஆதரிப்பதனூடாக தேசத்திடம் ஜனநாயகம் கோரி இலங்கை ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் கையெழுத்து பெற்றிருந்தார்கள். அன்று ஜனநாயகத்திற்காகக் கையெழுத்து வைத்தவர்களின் தலையில்மிளகாய் இப்போது மிளகாய் அரைத்திருக்கிறது ஜனநாயக முன்னணி. 

  தேசத்தினதும் ஜனநாயக முன்னணியினதும் பிடுங்குப்பாடு ஒரு உள்வீட்டு விவகாரம் என்று தெரியாமல் கையெழுத்து வைத்தவர்கள் பாவம் அம்போ என விடப்பட்டிருக்கிறார்கள். 

  நிர்மலா என்னதான் ஜனநாயகம்  பேசி சப்புகக்ட்டினாலும் பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும். 

  அந்த வகையில் துணிந்து தனது ‘ஜனநாயக்’ கருத்தை வெளியிட்ட இலங்கை ஜனநாயக முன்னணியின் முக்கிய உறுப்பினரான ரங்கன் தேவராஜனுக்குப் பாராட்டுக்கள். 

 6. படத்திலை இருக்கிற ரங்கன் அண்ணர் சரியா மெலிந்து வாடிப்போயிருக்கிறார். பாவம்

 7. இலங்கை ஜனநாயக முன்னணியின் கெட்டித்தனம் உங்களுக்கு தெரியாது. இவர்கள் யார் ஆடசிக்கு வந்தாலும் சந்திரிகா என்றால் என்ன ரணில் என்றால் என்ன மகிந்த என்றால் என்ன யாரோடும் டீல் வைக்கும் சாணக்கியம் உள்ளவர்கள். எப்போதும் அதிகாரத்தின் உச்சியில் பெரிய ஆட்களாக தொங்குபவர்கள்.

 8. இது மட்டுமல்ல, படையினரிடம் சரணடைந்த மற்றும் புலிகளால் பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டோரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ச்சியாக விடுத்துவந்த வேண்டுகோளை அடுத்து புனர்வாழ்வு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு தொகுதி முன்னாள் புலி உறுப்பினர்களை விடுதலை செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது.

  புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை புலிகள் பலவந்தமாக பிடித்துச் சென்றிருப்பதாக அவர்களது பெற்றோர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சென்று முறையிட்டதோடு அப்பாவிகளான தமது பிள்ளைகளை மீட்டுத்தரும்படியும் பலதடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

  இதனையடுத்து இவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தமையையடுத்து ஜனாதிபதி இவ் முடிபவை எடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது.

  இனி வருங்காலங்களில் தமிழ் மக்களிற்கு என்னென்ன தேவையோ மாண்புமிகு அம்மைச்சர் அவர்களை கேட்டால், அவர் ஜனாதிபதியுடன் பேசி உங்களிற்கு வேண்டியதை செய்வார்,

  (முழு நாட்டையும், மக்களையும் பிரதிநிதிப்படுத்தும் ஜனாதிபதிக்கு சொந்தமாக முடிவெடுக்கும் திறன் இல்லைதானே, அம்மைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தது, பேச்சுவார்த்தை நடத்தி செய்ய வேண்டிய நிலை…….எல்லாம் காலம்….hmhmhmmmmmmm…..)

  எல்லாவற்றிகும் அம்மைச்சர் போல் மனிதாபிமானம், மனித நேயம் வேண்டும்!

  நடுநில்லையான http://www.uthr.org இல் சென்று பார்த்தல் எல்லா வண்டவாளங்களும் தெரியும்!

 9. ஜே.வி.பியுடன் நாட்டில் தேன்நிலவு கொண்டாடியவர்கள், புலம்/ புலன் பெயர் தேசத்தில் தண்ணி பார்ட்டி வைத்து கொண்டாடியவர்கள் இப்போ புது ஜானம் வந்து தமிழ் பேசும் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்விற்கு ஜே.வி.பி. ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்நிலையில் ஜே.வி.பியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள எதிரணியினரால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைக்குத் தீர்வினை முன்வைக்க முடியாது எனவும் புதிய கண்டுபிடிப்பு பிடித்துள்ளார்கள்.

  வாழ்க ஜனநாயகம்! சமத்துவம்! சோஷலிசம்! ……………..இப்போ தோளில் கை போட்ட கோமறேடுக்கள் எல்லாம் எங்கே?

  நிஜத்தை புரியாதவர்கள்,உண்ம்மையான தோழமையை புரியாதவர்கள், மனிதர்களை நேசிக்க தெரியாதவர்கள்……….எப்போ தான் நிஜத்தை புரியப்போகிறார்கள்?

  எல்லாவற்றிகும் மனிதாபிமானம், மனித நேயம் வேண்டும்!

 10. யாரை நம்புவதொ இ.தமிழ் மக்கள். த.செல்வா கூறியது போல், தமிழ் மக்கலை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். கடவுள் என்றவர் இருந்தால். நன்றி.

Comments are closed.