மகிந்த ராஜபக்சவின் பிரசாரப் பணிகள்:இந்திய விளம்பர நிறுவனத்திடம்!

vijakalஇந்தியாவின் பிரபல விளம்பர நிறுவனமான விஜயலாவ் நிறுவனத்திடம் மகிந்த ராஜபக்ச வின் தேர்தல் பிரசாரப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தாம் மேற்கொள்ளும் பிரசாரப் பணிகளுக்காக சர்வதேச மட்டத்திலான அறவீடுகளை மேற்கொள்ளும் இந்திய நிறுவனத்திற்கு ஜனாதிபதியின் தேர்தல் விளம்பரப் பணிகளுக்காக பல கோடி டொலர் பெறுமதியான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இதனைத் தவிர அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொண்ட இரண்டு அமெரிக்கர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வின் தேர்தல் பிரசாரம் சம்பந்தமாக ஆலோசனை பெறுவதற்காக வரவழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கே.பி.யிடம் பெறப்பட்ட டொலர்களிலேயே ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு பெருந்தொகையான பணத்தை வெளிநாட்டு நிறுவனம் மற்றும் நபர்களுக்கு வழங்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி சந்தேகம் வெளியிட்டுள்ளது.