மகளிர் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தொடரும்!: லாலு பிரசாத்

 மகளிர் மசோதாவிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார். மசோதா தொடர்பான கட்சியின் நிலையில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என அவர் தெரிவித்தார்.

÷இது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் கூறியது:

÷மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக இந்த ஒதுக்கீட்டில் தலித், முஸ்லிம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறோம் என்றார்.

÷அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்கள் தரப்பு நியாயங்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது அரசிடம் வெளிப்படுத்துவோம் என லாலு பிரசாத் குறிப்பிட்டார்.