மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களினால் பேரணி ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.யாழ்ப்பாணம் செயலகத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி கச்சேரி, நல்லூர் வீதி, வழியாக கஸ்தூரியார் வீதியூடாக வீரசிங்கம் மண்டபத்தை வந்தடைந்தது.

இதன்போது திருமணக் கொடுமைக்கு எதிரான வீதி நாடகமும் இடம் பெற்றது. இப்பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை வலியுறுத்தும் பிரசுரங்களை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது