பௌத்தத்தின் மீது பாச மிகு ஆதவன் தீட்சண்யாவிற்கு .. : சபா நாவலன்

ஆதவன் தீட்சண்யா,

உத்தரபுரத்தில் உங்களது கட்சி போர்க்கொடி தூக்கிய போது ஆதரவு கொடுப்பதையும் மகிழ்ச்சியடைவதை விடவும் என்ன செய்யமுடியும்? அது மட்டும் சி.பி.எம் என்ற கட்சியையும் அதன் நீண்ட நாள் உறுப்பினரையும் எடைபோட அளவுகோலாகுமா என்றால் சந்தேகம் தான். நீங்கள் எனது நாலுவரிப் பின்னூட்டத்திற்கு எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதற்கு முன்பதாக இவையெல்லாம் எனது நினைவுச் சுழலில் வந்துபோகிறது.

உங்கள் யன்னல்களைத் திறந்துபாருங்கள் “அக்ரஹாரங்களின்” கற்பூரக்காற்றை தென்றல் சுமந்துவருவதற்குப் பதிலாக இரத்தவாடைதான் வீசும்; அதுதான், நந்திகிராமிலும், தண்டக்காரண்யாவிலுமிருந்து பெருகும் மனித இரத்த வாடையத் தான் குறிப்பிடுகிறேன்.

கொத்துக் கொத்தாக உங்கள் கொல்லைப் புறத்தில் மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் புலிகளின் பாசிசம் அழிக்கப்படுகிறது என்று உங்கள் கட்சியோடு இணைந்து கூக்குரல் போட்டீர்களே இன்னமும் நினைவிருக்கிறது.

இலங்கைத் தீவில் ராஜபக்சவின் பௌத்தம் மனிதப் பிணங்களின் மேல் “ஜனநாயகத்தை!” மீட்ட போது நீங்களும் உங்கள் புலம்பெயர் தோழர்களும் தமிழ் நாட்டின் இதயத்தில் எழுந்து நின்று தேசிய கீதம் பாடியதாக நண்பர்கள் சொல்லித்தான் தெரியும். எவ்வளவு வேலைப்பழு மிக்கவர் நீங்கள்.

தவிர, அமரிக்காவா சீனாவா, தென்னாபிரிகாவா வட ஆபிரிக்காவா, பூக்கோவா தெரீதாவா இப்படி பெரிய பெரிய விடயதானங்களைப் பற்றியெல்லாம் எழுதுவதிலேயே நேரம் தொலைத்துவிடுவீர்களே, இதற்கெல்லாம் மத்தியில் எனது பின்னூட்டத்தைப் போய் கட்டுரையாக வடித்து…

இதையும் தவிர, மகிந்த சிந்தனையின் மனிதக் கொலைகள் பிரச்சனையாகத் தெரியாத உங்களுக்கு, பழங்குடிகள் செத்து மடியும் போது அசையாமல் சி.பி.எம் இன் உறுதியோடு மௌனித்திருந்த உங்களுக்கு எனது பின்னூடம் ஏற்படுத்திய கொதினிலை உணர்ச்சி இருக்கிறதே அதுதான் புரிந்துகொள்ள முடியாத புதிர்.

நெத்தியடி அடித்திருக்கிறீர்கள்; ஆனால் எனது நெத்தியில் வியர்வைக்க்குப் பதிலாகக் குருதி வடியவில்லை.

இன்று மாலை உங்கள் “பின்னூட்டக் கட்டுரையை” நண்பர் ஒருவர் அனுப்பிவைக்க, இவ்வளவு பிஸியான பெரியபெரிய எழுத்துக்கள் எழுதும் உங்களுக்கு பின்னூட்டம் ஏற்படுத்திய பாதிப்புக் குறித்து எனது மூளைக்குள் வியப்புக்குறி குந்தியிருந்து குடைய ஆரம்பித்துவிட்டது. இதுதான் இந்தக் கடிதமெழுதும் விவகாரத்தை ஆரம்பிக்க மூல காரணமாய் அமைந்தது.

உங்களதும் கட்சியினது நடைமுறை அரசியலையும் ஒதுக்குவைத்துவிட்டுப் பார்த்தால் நீங்களும் அவ்வப்போது மார்க்சியம் கொம்யூனிசம் என்று பேசிக்கொள்வதால் தனிப்படவே இந்தக் கடிததை எழுதி அனுப்பித் தொலைத்திருக்கலாம் ஆனல் நீங்கள் பொதுத் தளத்தில் எழுதியிருப்பதால் நானும் அவ்வாறே செய்யலாம் என முடிவிற்கு வருகிறேன்.

நான் இணைய வெளியில் இதுவரைக்கும் நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத நீங்கள் நான் எழுதிய பின்னூட்டடம் ஒன்றிற்கு ஆதாரம் கேட்டு உங்கள் இரத்த நாளங்களின் கொதி நிலையை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.

எனது முதலாவது கேள்வி இதெல்லாம் ஏன்……

நானும் உங்களைப் போல பெரிய பெரிய விடயங்களைப் பேசுகிறேனோ என்று எண்ணி புரட்சிக்கான அரசியல் கொமிசாரின் உருளு நாற்காலியைத் தேடலாம் என்று கூட ஒரு கணம் தடுமாறிவிட்டேன்.

எது எப்படியானாலும் எனது பின்னூட்டத்தை வைத்தே கட்டுரை எழுதிய நீங்கள் பலே கில்லாடி தான் போங்கள்.

சரி, அடுத்தத காரணம் என்னவாக இருக்கலாம் என்று இன்னும் மூளையை குடைகிறேன். அருள் எழிலன் உங்களை கேள்விமேல் கேள்வி கேட்டு இனியொருவிலும் கீற்று இணையத்திலும் கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு நீங்கள் பதில் சொல்வதற்குப் பதிலாக எனக்கும் நெத்தியடி தருகிறீர்களோ என எண்ணுகிறேன். ஆனால் நீங்கள் அப்படிப்படவரா என்ன? எப்பேர்பட்ட எழுத்தாளர்!

இன்னும் எனது யூகக் குரங்கு எனது மூளையின் மூலையில் குந்தியிருந்து குடைகிறது. ஏன் இப்படி .. இன்னும் விடை கிடைக்கவில்லை ஆதவன்.

மார்க்சியம், பின்நவீனத்துவம், பின் மார்க்சியம், தலித்தியம், பௌத்தம், ஜெயினிசம் இப்படி எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கிக் காச்சிய சாம்பாரை சமூகத்தின் புதுவிசை என்று மார்தட்டிக்கொள்ளும் வேளையில் பௌத்ததைப் பாதுகாக்க நீங்கள் எனது பின்னூட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியிருபீர்களோ? இல்லை அப்படியிராது அகில இந்திய கம்யூனிசக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர் நீங்கள் போய் இப்படியெல்லாம்…? இருக்காது.

வன்னி இனப்படுகொலை தணிந்திருந்த வேளையில் உங்கள் புலம் பெயர் அரசியற் தோழர் பௌத்த மரபிலிருந்து வந்ததாக இலங்கைத் தேசிய கீதத்தை ஒரு ஒன்று கூடலில் பாடிப் பரபரப்பு ஏற்படுத்தியது வேறு நினைவிற்கு வருகிறது. நீங்கள் வழிபடும் அம்பேத்கார் கூட பௌத்ததிற்கு மதமாற்றம் செய்துகொண்டாராமே? இவை எல்லாவற்றோடும் உங்களது முதல் இலங்கைப் பயணம், மகிந்த சிந்தனை கூறும் பௌத்தம் எல்லாம் கலக்கிக் காய்சிய இன்னொரு சாம்பாரும் எனது எண்னங்களில் வந்து தொலைக்கிறது. இலங்கையில் பௌத்தத் தீயை மூட்டிவைத்த அனகாரிக தர்மபாலவின் ஆரியர் சிந்தனையைப் போல, ஆரியரல்லாதவர்களை குறிப்பாக இலங்கை வேடர்களை அரை மனிதர்கள் (semi-human) என்றழைத்த பிளவார்ஸ்கி போன்றோரின் வழிவந்த பௌத்த சிந்தனை முறையையா நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள். தலித்தியம் உங்கள் உயிர் மூச்சாயிற்றே!

ஊகங்களைக் கருத்துக்களாக உருவமைப்பதில் எனக்க்கு உடன்பாடில்லை என்பதால் அப்படியெதுவும் இருக்கமுடியாது என்ற நம்பிக்கைக்கு வந்தாயிற்று.

பின்னூட்டம் குறித்த குறிப்பு : தியோ சோபிகல் சமூகம் குறித்தும் அதன் ஆரிய சிந்தனை குறித்தும் பல சர்சைகள் நிலவுகின்றன. பிளவாற்ஸ்கியின் இறப்பின் பின்னர் வெளியான அவரது இறுதி நூலின் மூன்றாம் பகுதி பிரசுரத்திற்கு வருகிறது. அதனை வெளியிட்டவர் அன்னி பெசன்ட் தான். கிறீஸ்தவ வெள்ளையர்களையும் யூதர்களையும் கூட ஆரியர்களாகச் சித்தரிக்கும் பிளவாட்ஸ்கி(அப்போ ஹில்லர் விரும்பிய நூல்களில் இவரது நூலும் ஒன்றென்பது ஏன் என்ற கேள்வியெழ அதற்கு வேறு கட்டுரை எழுதிவிடாதீர்கள்), ஆரியர்களே சமூகத்தின் உயர்வான மனித விழுமியங்களைக் உடையவர்கள் என்கிறார். இதைத் தான் இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக் காலக் கதாநாயகனான் அனகாரிகவும் கூறுகிறார். தனது இறப்பிற்கு ஒரு வருடங்களின் முன்னர் பிரித்தானியாவில் சரே என்னுமிடத்தில் தனது தியோ சோபிகல் சமூகத்தின் தலைமையகத்தை நிறுவுகிறார். அதற்குப் புரட்டஸ்தாந்து சபையின் ஆதரவும் கிடைக்கிறது. இவையெல்லாம் பின்னூட்டமாக இல்லாமல் கட்டுரையாக எழுதியிருக்கலாம் என்பது சுயவிமர்சனம்.

மக்கள் ஊடகம் என்று புளெக்குகளை அழைக்கிறார்கள். பின்னூட்டங்கள் என்பது தோன்றுகின்ற அபிப்பிராயங்களை அவ்வப்போது எழுத அதற்கு அதே பதிவின் கீழ் உடனடியாக எதிர்வினையாற்ற ஆரோக்கியமான விவாதம் முன்னெடுக்கப்படும் என்பதே இதன் உள்ளர்த்தம். ஆயினும் பின்னூட்டங்கள் கட்டுரைகளின் மையக்க்கருவிற்கு அப்பாலும் பல சந்தர்பங்களில் சென்றுவிடுவதால் விவாதங்கள் திசை மாறிவிடுகிறது. நீங்களோ கட்டுரையாக எழுதி அதுவும் விமானத்தை எல்லாம் நடுவானில் வெடிக்கவைத்து ….!

“அந்தக் கேள்விக்கு மட்டும் இன்னும் விடை தெரியவில்லை.” மன்னன், மகாராசன், என்ற பெயர்களிலிருந்து எண்களை பெயர்களாக வைத்துக் கொள்வது வரை ஆயிரம் மனிதர்கள் பின்னூட்டம் போடுகிறார்கள். நூறு கட்டுரைகளுக்கு மேல் எழுதியுள்ளேன். எனது பின்னூட்டத்திற்கு மட்டும் நீங்கள் கட்டுரை எழுதியதற்குக் காரணம்.. அதுவும் உங்கள் எழுத்துப் பணி அரசியல் பணி அனைத்தையும் விட்டுவிட்டு!

குறிப்பு: நாம் ஒரு எழுத்துக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பது எனது அவா! பாருங்கள், முதலில் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆக, பொதுத் தளத்தில் உங்களை எனது எதிரி என்ற வகைக்குள் உள்ளடக்கிவிட்டு கடிதம் எழுதவில்லை. நீங்கள் எழுதிய அதே பாணியிலான ஒரு சிறு முயற்சி. அவ்வளவு தான்! உங்கள் எழுத்து முறமை என்னக்கு விரக்தி தருவதைப் போல் எனது எழுத்துக்கள் உங்களை பாதித்திருந்தால் மன்னிப்பும் கோருகிறேன்..!

தொடர்புடைய பதிவுகள் :

சிங்கள பௌத்த நச்சு வேர்களும் ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் :

ஆதவன் தீட்சண்யா – பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு

ஆதவன் தீட்சண்யா பின்னூட்டத்திற்கு எழுதிய கட்டுரை:

சிங்களப் பேரினவாதம் 1983 ஜூலை 23 அன்று இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்தக் கொடுமையை மையப்படுத்தி குருதியுறைந்தப் படுகொலைகள் என்ற தலைப்பில் சபாநாவலன் எழுதிய கட்டுரையொன்று இனியொரு.காமில் வெளியாகியுள்ளது. சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தை பிரித்தானிய காலனியாட்சி திட்டமிட்டே வளர்த்தது என்று இக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ள கருத்தை மேலும் பலப்படுத்திட சிவா என்பவர் “… அனகாரிக தர்மபாலவைத் திட்டமிட்டு உருவாக்கியது பிரித்தானிய அரசு. பௌத்த மதத்தை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்திய பிரித்தானியப் பிரித்தாளும் தந்திரம், நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை பேரினவாதமாக வளர்த்துள்ளது. அனகாரிக தர்மபாலவின் சிங்கள பவுத்தம் கிறிஸ்தவர்கட்கெதிராகவும் முஸ்லிம்கட்கெதிராகவுமே வளர்த்தெடுக்கப்பட்டது. எனவே பிரித்தானியரின் நோக்கம் என்னவாயிருந்தது என்ற கேள்வி எழுகிறது…” என்று பின்னூட்டமிட்டுள்ளார்.

சிவாவுக்கு பதில் சொல்ல வருகிற கட்டுரையாளர் நாவலன் “இலங்கையில் டேவிட் ஹேவிதாரண என்ற அனகாரிக தர்மபாலவை ஊடாக உருவாக்கியவர் மடம் பிளவாட்ஸ்கியும் கேணல் ஒல்கொட்டும். அநகாரிக பிளவாற்ஸ்கியுடன் தமிழ்நாட்டில் தங்கியிருந்து Theosiphical society இல் செயற்பட்டு இலங்கை திரும்பிய பின்னர் ஒல்கொட்டுடன் இணைந்து பௌத்த பாடசாலைகளை நிறுவுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒல்கோட்டும் பிளவாட்ஸ்கியும் கிறிஸ்தவர்களாகவே செத்துப் போகிறார்கள். பிளவாட்ஸ்கி இங்கிலாந்தில்தான் மரணிக்கிறார்…” என்று கூறுகிறார். கிறித்துவத்திற்குள்ளேயே தேங்கிச் செத்ததாக அவ்விருவரையும் சித்தரிக்கிற நாவலன், அவர்கள் ஏன் தங்கள் மதத்தில் இருந்த டேவிட் ஹேவிதாரணவை அனகாரிக தர்மபாலாவாக்கி பௌத்தத்திற்கு கிளப்பிவிட்டார்கள் என்ற மர்மத்தின் முடிச்சினை அவிழ்க்கவில்லை.

யார் என்னவாக இருந்து எப்படியாகச் செத்தார்கள் என்று இப்போது ஆராய்ந்து ஒரு மண்ணும் ஆகப்போவதில்லை. ஆனால் நம்பத்தகுந்த பதங்களைப் பிரயோகித்து வரலாற்றின் சிலபக்கங்களை மீட்டெடுப்பதான தோற்றம் காட்டுவது முறையல்ல என்று சொல்ல வேண்டியுள்ளது. அனகாரிக தர்மபாலாவின் குணவியல்புகளுக்கு கர்னல் ஆல்காட் மற்றும் மேடம் பிளாவட்ஸ்கி ஆகிய இருவரையும் பொறுப்பாக்குகிற நாவலன் அவ்விருவர் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்கு வரலாற்றுத் தரவுகளைத் தேடியலைய வேண்டியதில்லை என்றாலும் குறைந்தபட்சம் இதற்குமுன் தானே எழுதியிருக்கும் கட்டுரையையாவது ஒருமுறை திருப்பிப் பார்த்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

இதற்குமுன் தமிழ்பவர்.காம் என்ற இணையதளத்தில், “சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு- புதிய போரின் முன்னறிவிப்பு” என்ற தனது கட்டுரையில் “ஹெலேனா பிளவாட்ஸ்கியும் ஒல்கேட்டும் பௌத்தத்தை ஆரியர்களின் உயர்ந்த மதமாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இந்த இருவரினதும் இறுதிக்கால வாழ்க்கை பௌத்தக் கொள்கைகளுடன் எந்தச் சார்புநிலையினையும் கொண்டிராத போதிலும், பௌத்த மதத்தைச் சுற்றிய இவர்களது ஆர்வத்தினால் இலங்கைக்குப் பலமுறை பயணம் செய்தனர்…” என்று எழுதிய இதே சபா நாவலன் இப்போது இனியொருவில் எழுதும்போது “இதில் வேடிக்கை என்னவென்றால் ஒல்கோட்டும் பிளவாட்ஸ்கியும் கிறிஸ்தவர்களாகவே செத்துப் போகிறார்கள்…” என்று எழுதியிருக்கிறார். இரண்டு கட்டுரைகளுக்கும் இடைப்பட்டக் காலத்தில் ஆல்காட்டுக்கும் பிளவாட்ஸ்கிக்கும் இருந்த பௌத்த ஆர்வம் எப்படி குன்றியது என்ற விளக்கங்கள் எதையும் தர நாவலன் மெனக்கெடவில்லை.

அவர்கள் இருவரும் கிறிஸ்தவர்களாகவே இருந்து இறந்தார்களா என்பதற்கான ஆதாரத்தை நாவலன்தான் கொடுக்கவேண்டும். ஆனால் அவர்கள் பௌத்தர்களாக இருந்தமைக்கு ஏராளமான தரவுகள் உள்ளன. Old Dairy Leaves என்ற தனது சுயசரிதையின் தொகுதி இரண்டில் 167-169 வரையான பக்கங்களில் தானும் பிளாவட்ஸ்கியும் இலங்கைக்கு சென்று 1880 மே 25ம் நாளன்று பஞ்சசீலத்தையும் திரிசரணத்தையும் ஏற்று பௌத்தர்களானதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சம்பிரதாயமாக தம்மை பௌத்தர்கள் என்று அறிவித்துக் கொண்டதுதான் அந்த நாளே தவிர அதற்கும் முன்பிருந்தே தாங்களிருவரும் பௌத்தத்தை வாழ்முறையாக ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் பிறிதொரு இடத்தில் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட முதல் அமெரிக்கர், முதல் ஐரோப்பியர் என்று குறிக்கப்பெறுகின்றனர்.
கீழைத்தேய தத்துவங்கள்/ மதங்கள் பற்றிய ஆய்வுகளினூடாக அவர்கள் வந்தடைந்த புள்ளி பௌத்தமாயிருக்க அடுத்துவந்த ஆண்டுகளில் அவர்களிருவரும் குறிப்பாக ஆல்காட் இலங்கையில் பௌத்தத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்ததை அறியமுடிகிறது. நாவலன் சொல்வதுபோல காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக திட்டமிட்டே பௌத்த மீட்டுருவாக்கத்தை இவ்விருவரும் மேற்கொண்டனரா அல்லது அவர்களது பணியின் விளைவுகளை காலனியாதிக்கம் தன் நோக்கத்திற்கு இசைவாக பயன்படுத்திக்கொண்டதா என்று முறையாக ஆய்வேதும் நடத்தப்படவில்லை. ஆனால், சிங்கள இனவாதத்தின் மேலாதிக்க வெறி அனகாரிக தர்மபாலாவிலிருந்து தொடங்குகிறதென்ற எளிதான முடிவுக்கு வருகிற ஒருவர், கிறித்துவரான தர்மபாலாவை ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் பௌத்தராக மாற்றியதற்குப் பின் மிகப்பெரும் சதித்திட்டம் இருந்ததென்ற குற்றச்சாட்டுடன்தான் தன்வாதத்தை முடிக்கவேண்டியிருக்கும். அந்தவகையிலான நாவலனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பது எனது நோக்கமல்ல. ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் கடைசிவரை கிறித்துவர்களாகவே இருந்து செத்துப்போயினரா என்பதை மட்டும் பார்ப்போம்.

பிளாவட்ஸ்கி தன் அந்திமத்தை இங்கிலாந்தில் கழித்து அங்கேயே செத்துப்போனார். இங்கிலாந்தில் செத்துப்போனார் என்பதைக்கொண்டு அவர் கிறிஸ்தவராகவே இருந்து செத்தார் என்ற முடிவுக்கு வரமுடியுமானால் விமானம் வெடித்து நடுவானில் செத்தவர்களை எந்த மதத்தில் சேர்ப்பது? லண்டனில் வசிப்பதனாலேயே தானும் ஒரு கிறிஸ்தவராகத்தான் இருக்கமுடியும் என்று நாவலன் தன்னைத்தானே மதக்கடத்தல் செய்துகொண்டதாக நம்பிக்கொண்டால் அது எவ்வளவு அபத்தமோ அதற்கிணையான அபத்தம்தான் இதுவும். சரி, ஆல்காட் சாவுக்கு வருவோம். ஆல்காட்டும் பிளாவட்ஸ்கியும் இலங்கையுடனானது போலவே தமிழ்நாட்டுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாயிருந்தனர். தியாசாபிகல் சொசைட்டியின் தலைமையகத்தை சென்னை அடையாறுக்கு மாற்றிக்கொண்டு அங்கிருந்துதான் தமது பணிகளை ஒருங்கிணைத்தனர். அன்றைய பவுத்த பகுத்தறிவுச் சிந்தனையாளர்களான அயோத்திதாசர், சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர் கர்னல் ஆல்காட்டுடன் அறிவார்ந்த தொடர்பினைப் பேணிவந்துள்ளனர். பௌத்த மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்த அயோத்திதாசர், 1898ஆம் ஆண்டு ஆல்காட்டின் உதவியுடனேயே தான் இலங்கை சென்று தீட்சை பெற்று முறைப்படி பௌத்தம் தழுவியதாக குறிப்பிடுகிறார். (அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 180). சாக்கிய பௌத்த சங்கம் தலித்துகளுக்கான கல்விச்சாலைகளை நடத்துவதற்கு ஆல்காட் உதவியாக இருந்திருக்கிறார். அவ்வமைப்பின் தலைமையகம் இயங்கிய இடத்திற்கான மாதாந்திர வாடகைத் தொகையை ஆல்காட் செலுத்திவந்ததாகவும் மேற்சுட்டிய கடிதத்தில் அயோத்திதாசர் நினைவுகூர்கிறார். அதாவது ஆல்காட் பௌத்தம்சார் நடவடிக்கைகளுடன் தன்னை இறுதிவரை இணைத்துக் கொண்டவராகவே இருந்திருக்கிறார். இதையும் காலனியாதிக்க நலனுக்காக ஆல்காட் அயோத்திதாசரை தூண்டிவிட்ட பிரித்தாளும் சதியாக நாவலன் பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கையில் மேற்தொடர்கிறேன்.

ஆல்காட்டின் மரணம் மற்றும் இறுதிச்சடங்குகள் குறித்து வே.ப.குப்புசாமி என்பவர் எழுப்பிய வினாவுக்கு அயோத்திதாசர் டிசம்பர் 8, 1909 தேதியிட்ட தமிழன் இதழில் சொல்லியிருக்கிற பதிலை நாவலன் படிப்பது நல்லது. ( அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுதி 1, பக்கம் 212,213). “சகோதிரர்கள் என் ஞாபகத்திற்காக மேன்மையான சகோதிர ஐக்கிய மார்க்கத்தை பிரசங்கத்தாலும் விசுவாசத்தாலும் நடத்துங்கள். எனக்குப் பிரியமும் சமநிலையுமுள்ள சகோதிரர்கள், நான் உங்களிடம் வந்து வாழ்த்தி விண்ணப்பிப்பதாவது உலகத்திலுள்ள சருவ சகோதிரர்களுக்கும் ( சத்தியத்தை ) விட வேறு மதங் கிடையாதென்று விளக்கி அதை சகோதிர வாஞ்சையாலும் அன்பினாலும் நடத்துவீர்களானால் கலகமில்லாமல் உலகம் சீர் பெரும்…” என்று 2.2.1907 ஆம் தேதி ஆல்காட் எழுதிய குறிப்பை சுட்டிக்காட்டும் அயோத்திதாசர், அதற்கொப்பவே ஆல்காட்டின் இறுதிவிருப்பங்கள் இருந்தன என்பதை பதிவு செய்கிறார்.

மரணத்தருவாயில் இருக்கும் தன் தலைமாட்டில் பௌத்தக்கொடி பறக்க வேண்டுமேன்றும், தன் பிரேதத்தை எடுக்கும்போது முதலாவதாக பௌத்தர்களும், அவர்களையடுத்து பிராமணர்கள், ஜோராஸ்டர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் என்ற நியமத்தில் வந்திருந்து தத்தமது தியானங்களை நடத்தி தகனம் செய்யவேண்டும் என்றும் ஆல்காட் கொண்டிருந்த விருப்பத்தினை அன்னிப்பெசன்ட் அம்மையார் சாக்கைய முனிவர் சங்கத்தின் பொதுக்காரியதரிசியாகிய தன்னிடம் தெரிவித்ததாகவும், அதன்பேரில் தான் பௌத்தக்கொடியைக் கொண்டுபோய் அவரது சிரசினருகில் வைத்த பதின்மூன்றாம் நாளாகிய 17.21908 அன்று காலை 7.17 மணியளவில் ஆல்காட்டின் உயிர் பிரிந்தது என்றும் அயோத்திதாசர் எழுதியிருக்கிறார்.

“…பௌத்தக்கொடிகள் பரக்க சகோதிர ஐக்கியஞ்சிறக்க ஆனந்தகோஷத்துடன் சென்று தென்னந்தோப்பின் மத்தியில் தகனஞ்செய்து மறுநாட்காலையில் காரியதரிசி அவர்களால் (அயோத்திதாசரால்) தணலை பால்கொண்டவிக்க மற்றவர்களுங் கலந்து அஸ்திகளைப் பொருக்கி பகவன் நிருவாணமடைந்த பீடத்திற்கருகிலுள்ள கங்கைநதியில் விடுவதற்கு ஓர் பாகமும், சங்கத்துள் ஸ்தாபிக்க ஓர் பாகமும், சாக்கைய சங்கத்தார் ஓர் சிரியபாகமும் எடுத்துக்கொண்டு மற்றவைகளை சமுத்திரத்தில் கரைத்துவிட்டார்கள். கர்னல் எச்.எஸ்.ஆல்காட் துரையவர்கள் புத்ததன்மத்தைச்சார்ந்து இத்தியாதி நன்மெகளை உலகத்தில் செய்துவந்தாரென்று அவர் மரணகாலத்தில் சகலருக்கும் விளங்கியது சொல்லாமற்செய்த நன்மெயின் பயனாம்….” என்று முடிக்கிறார் அயோத்திதாசர். எச்.எஸ்.ஆல்காட் துரையவர்கள் புத்ததன்மத்தைச்சார்ந்து இத்தியாதி நன்மெகளை உலகத்தில் செய்துவந்தாரென்று அவர் மரணகாலத்தில் சகலருக்கும் விளங்கித்தானிருக்கிறது என்று அயோத்திதாசர் குறிப்பிட்டது நாவலனுக்கும் பொருந்தும்தானே

24 thoughts on “பௌத்தத்தின் மீது பாச மிகு ஆதவன் தீட்சண்யாவிற்கு .. : சபா நாவலன்”

 1. நாவலன் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எழுதும் எதற்கும் இவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். எங்காவது சிறு தகவல் பிழையோ, கால மாறுபாடோ இருந்தால் …டீச்சர் அவன் என்னை கிள்ளி வெச்சிட்டான்………ஒண்ணுக்கு போகணும் டீச்சர் என்று…..டை கட்டி, ஷூ போட்ட கான்வெண்டு பயன் மாதிரிப் பேசுவாங்க…..மத்திய இந்தியாவில் பழங்குடிகள் மீதான போரை உங்க கட்சி ஆதரிக்குதே என்றால் அதற்கு பதிலே இருக்காது………..புலிகள் இருந்தவரை தலித் விடுதலையில் பெயரால் ஈழ மக்களின் போராட்டத்தைச் சிதைத்தார்கள்…….இப்போ புலிகள் இல்லை……..உடனே பௌத்த மரபுக்குள் செட்டிலாகி விட்டார்கள்………லும்பினி………சம்பினி எல்லாமே அதோட தொடர்ச்சிதான்.,

 2. இல்ங்கையில் பௌத்தம் என்பது பாசிசமே….. எந்த மதமும் பாசிசக் கொலைகளுக்கு விதிவிலக்கல்ல என்பதற்கு பௌத்தமும் இலங்கையில் பௌத்தம் ஒரு சான்று………..

 3. நாவலன்,
  கட்டுரைகளோ பின்னூட்டங்களோ -அவற்றை பொறுப்புடன் வாசிக்கும்போது எதிர்வினைக்குரியதென்று தோன்றுகிற விசயத்தின்மீது எழுதுவதை தவறென்று நீங்கள் சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். குறிப்பிட்ட அந்த கட்டுரையில் கர்னல் ஆல்காட்டும் மேடம் பிளாவட்ஸ்கியும் கடைசிவரை கிறித்துவர்களாகவே இருந்து செத்துப்போயினர் என்று போகிறபோக்கில் நீங்கள் சொல்லிவிட்டுச் சென்ற விசயம் வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் பிழையானது என்பதையே நான் சுட்டிக்காட்டியுள்ளேன். அதை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவமின்றி யார்யாரோ எடுத்த வாந்தியை வழித்து நக்கி மீண்டும் என்மீது துப்பப் பார்க்கிறீர்கள்.

  நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதித் தள்ளுவதாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் நான் எழுப்பியக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பாங்கு இதுதானா? ஒருவேளை நாவலன் எழுதினால் சரியாகத்தான் இருக்கும் என்கிற கற்பிதம் பொய்த்துவிட்ட பதற்றத்தில் இப்படி நிதானக்குறைவாக எழுதுகிறீர்களோ?

  நானொன்றைக் கேட்டால் நீங்களொன்றை சொன்னதன் மூலம் இப்போதும் என் கேள்விகள் பதிலளிக்கப்படாமல்தான் இருக்கிறன. அல்லது நீங்கள் ஒத்துக்கொள்ளும்வரை நீங்கள் எழுதிய பிழையான செய்தி உங்களுக்கு முன்னே மறித்து நிற்கின்றன. அவற்றை இவ்வாறு கத்தி கூப்பாடு போட்டு ஒதுக்கித் தள்ளுவதுதான் உங்கள் உத்தி என்றால் விட்டொழித்துவிட்டு இதேபோல தப்பும்தவறுமாய் இன்னும் நூறு கட்டுரைகளை எழுதித் தள்ளுங்கள்.

  -ஆதவன் தீட்சண்யா

 4. “2500 வருடங்களுக்கு முன்னர் இவ் உலகில் தோன்றிய முதல் பகுத்தறிவுவாதி புத்தர். கடவுள் இல்லை என்று அன்றே அவர் கூறினார்” என்று இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவரான காலம்சென்ற தோழர் சண்முகதாசன் தனது “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள”; என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

  இலங்கையின் மாபெரும் வரலாற்றுப் பதிவேடு எனக் குறிப்பிடப்படும் மகாவம்சம் என்னும் நூல் மகாநாம என்னும் புத்தமத குருவால் கி.பி 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். ஒரு மதகுரு வரலாற்று ஆசிரியர் ஆகும்போது மதரீதியான கட்டுக்கதைகள் வரலாறாகப் பதியப்படுகிறது. அதுதான் இங்கும் நடந்தது. புத்தர் தன் வாழ்க்கைக் காலத்தில் மூன்று தடவை இலங்கைக்கு வந்து சென்றார். இவற்றில் ஒரு தடவை சிவனொளிபாத மலையில் தனது கால் பாதத்தை பொறித்துச் சென்றார். புத்தர் தன் மறைவுக்கு முன் இலங்கையின் பாதுகாப்பை சக்கராவுக்கு ஒப்படைத்தார். சக்கரா விஸ்ணுவை அழைத்து தீவின் பாதுகாப்பை அவரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு பல கட்டுக்கதைகள் இவ் மகாவம்சம் நூலில் வரலாறாகப் பதியப்பட்டுள்ளது.

  சிங்கள பௌத்தர்களில் பெரும்பாலானவர்களின் இனரீதியான சிந்தனைக்கு இம் மகாவம்ச சரித்திர நூலை உண்மை என்று அவர்கள் நம்புவதே பெரிதும் காரணமாக அமைகின்றது. இருப்பினும் சிங்கள மக்களில் தோன்றிய புத்திஜீவிகள் சிலர் துணிச்சலாக இதை மறுத்துரைத்திருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “மகாவம்சம் நூலின் பிரதிகள் அனைத்தையும் எரித்துக் கொளுத்தவேண்டும். ஏனென்றால் சிங்கள பௌத்தர்களின் இன ரீதியான சிந்தனைக்கு அவைதான் பெரிதும் பொறுப்பானவை”என்று மதிப்புக்குரிய சிங்கள கல்விமான் டாக்டர்.ஈ.டபிள்யு.அதிகாரம் என்பவர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இக் கட்டுரை சிங்கள வார இதழ் “றிவிரச”வில் 1983ம் ஆண்டு செப்டெம்பர் 25ம் திகதி வெளிவந்தது. இவர் மட்டுமன்றி இலங்கையின் மிகவும் பிரசித்தி பெற்ற தொல்லியலாளரான டாக்டர்.பரணவிதான அவர்களும் போதிய அறிவியல் நோக்குடனும் துணிவுடனும் இந்த மகாவம்ச கட்டுக்கதைகளை மறுத்துரைத்துள்ளார்.

  இலங்கையில் புத்த மதத்தைப் புரிந்து கொள்ள அதன் வரலாற்றின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவுகளை அறிந்து கொள்வது அவசியமாகும். முழு மனித குலத்தினதும் விமோசனத்திற்காகப் பாடுபடுவதை பெரிய பிரயத்தனம்(மகாயான) என்றும் தனி ஒருவருடைய விமோசனத்திற்காகப் பாடுபடுவதை தாழ்வான பிரயத்தனம்(கீனயான) என்றும் இரு பெரும் பிரிவுகள் பௌத்த மதத்தில் தோன்றின. புத்த மதத்தின் மகாயானப் பிரிவினர் கூடுதலான சுதந்திரமானவர்களாகவும் முற்போக்கானவர்களாகவும் இருந்தார்கள். துணிவான தத்துவஞானிகள் அவர்களால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.

  மகாவிகாரை தேரவாத (கீனயான) புத்தமதப் பாரம்பரிய பிரிவின் கோட்டையாக விளங்கியது. மகாயான தத்துவத்திற்கு அபயகிரி மடாலயத்தில் ஆதரவாளர்கள் இருந்தார்கள். இவர்களுக்கிடையில் உக்கிரமான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. கி.பி 215ம் ஆண்டளவில் ஆட்சி புரிந்த வொறக்க திஸ்ஸவின் காலம் தொடக்கம் எதிர்த் தரப்பை எரித்தொழிக்கும் செயல்களும் இடம்பெற்றன. அபயகிரி மடாலயம் வைத்திருந்த பதிவேடுகள் எரித்து அழிக்கப்பட்டன. இவ்வாறு மகாயானப் பிரிவு நசுக்கப்பட்டு கீனயானப் பிரிவான தேரவாதம் துரதிருஸ்டவசமாக இலங்கையில் வெற்றிகண்டது. இதனால் இலங்கையில் புத்த மதத்தில் சீர்திருத்தம் நசுக்கப்பட்டது. இதனால்தான் இலங்கையில் புத்தமத சிந்தனையிலான அறிவு ரீதியான தேக்கம் ஏற்பட்டது.

  இலங்கை அரசியலில் புத்தமத குருமார்களின் பாத்திரம் இடைக்கிடையே ஆக்கபூர்வமாக இருந்துள்ளபோதும் பெரும்பாலும் எதிர் மறையாகவும் பிற்போக்கானதாகவுமே இருந்து வந்துள்ளது. சில குறிப்பிட்ட புற நடைகள் இருந்துள்ளபோதும் புத்த குருமார் கல்வி அறிவற்றவர்களாகவும் அறியாமையானவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் சிங்களம் தவிர வேறு எந்த மொழிகளையும் கற்பதில்லை. அவர்கள் குறுகிய மனப்பான்மையுடையவர்களாகவும் ஒற்றைப் போக்கு உடையவர்களாகவும் வெளி உலகைத் தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். புத்தமதம் என்றால் அது சிங்களவர்களுக்கே உரியது என்று அவர்கள் கருதுகின்றார்கள். இதனாலேயே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமர் பண்டாரநாயக்கா அவர்களையே சுட்டுக் கொன்றார்கள். அத்துடன் இனக்கலவரங்களின் போது சில புத்தமத குருமார்கள் தமது மஞ்சள் நிற அங்கியை உயர்த்திப் பிடித்த வண்ணம் வெறிபிடித்த மக்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

  கொழும்பு வஜிராம விகாரையின் பிரதான குருவான மடிகெபன்னசீக என்பவர் 1982ம் ஆண்டு செப்டெம்பர் 15ம் திகதி இந்தியாடுடே சஞ்சிகைக்கு பின்வருமாறு பேட்டியளித்தார். “எமது விருந்தோம்பல் காரணமாக தென்னிந்தியாவில் இருந்து வந்த படையெடுப்பாளர்களான தமிழர்களை இங்கு தங்க அனுமதித்தோம். எங்கும் வாழவும் அனுமதித்தோம். எங்களுடன் திருமணம் செய்யவும் அனுமதித்தோம். ஆனால் அவர்கள் வடக்கு கிழக்கில் 261 புத்தமத விகாரைகளை அழித்துள்ளார்கள். அவர்கள் லட்சக்கணக்கில் கொழும்பில் வாழுகிறார்கள். ஆனால் வடக்கில் இருக்கும் ஒரு சில ஆயிரம் இராணுவத்தை வெளியேறும்படி கேட்கின்றனர். இது என்ன நியாயம்?” என்று கேட்டுள்ளார். இதன்மூலம் அவர்களின் சிந்தனை ஓட்டத்தை புரிந்துகொள்ள முடியும். இதுதான் அவர்களின் புத்தமத பக்தியும் கருணையும்.

  இலங்கையில் உள்ள புத்தமத குருமார்கள் புத்தர் போதித்தவாறு உலோகாயுதப் பொருட்கள் அற்ற எளிய வாழ்க்கையை வாழவில்லை. கிராமங்களில் இருந்த ஏழைப் புத்த குருமார்கள்தான் இதற்குப் புறநடையாக இருந்தார்கள். ஆனால் பல புத்த குருமார்கள் சுரண்டல்கார செல்வந்தர்களாக இருக்கின்றார்கள். இலங்கையின் புத்தமதத்தின் வரலாற்றில் ஆரம்பத்துடனேயே இது தொடங்கிவிட்டது. வாலகம்பாகு காலந் தொட்டே(கி.மு103-102, கி.மு 89-77)சிங்கள மன்னர்கள் மடாலயங்களுக்கு நிலத்தை தானம் செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இது புத்தமதக் கோட்பாடுகளுக்கு நேர் விரோதமானது. வாலகம்பாகு தான் நாடு கடந்திருந்தபோது தனக்கு உதவி செய்த புத்த குருமார்களுக்கு வெகுமதி வழங்க இந்தப் பழக்கத்தை கடைப்பிடித்தார். அதன்பின் சங்க ஆதரவைப் பெற மற்ற மன்னர்கள் இந்தப் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்தார்கள். பொருளாதார நலன்களை சங்கவுக்கு அளித்ததால் அதன் எண்ணிக்கை பெருகியது. சங்க உறுப்பினர்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கை உத்தரவாதமாகியது. புத்தரின் போதனைகளுக்கும் இதற்கும் வெகு தூரம். ஆனால் மகாயானப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இப்படி இல்லை. அவர்கள் ஒருவகை உற்பத்தி உழைப்பில் ஈடுபட்டார்கள்.

  இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அரசியல் கட்சிகள் யாவும் தமது பதவி நலன்களுக்காக சுயநல அரசியலுக்காக சிங்கள பௌத்த கோஸத்தை ஊட்டி வளர்த்தன. இதனால் கால ஓட்டத்தில் பௌத்த குருமார்கள் நேரடியாக அரசியலில் குதித்தனர் .ஆனால் சிங்கள மக்கள் அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற அனுமதிக்கவில்லை. நான்காவது இடத்தையே அவர்களால் பெறமுடிந்தது. சிங்கள மக்கள் அனைவரும் பௌத்த வெறியர்களாக இருந்திருப்பின் இன்று புத்த பிக்குமாரின் கட்சியே ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும். ஒரு புத்த பிக்குவே ஜனாதிபதியாக வந்திருப்பார். ஆனால் சிங்கள மக்கள் அவ்வாறு நிகழவிடாமல் தடுத்து நிறுத்தி நம்பிக்கை ஊட்டியுள்ளார்கள். இது ஒரு நல்ல விடயம். இருப்பினும் மதத்தை அரசியலில் இருந்து பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர் காலம் கிடையாது. இது பௌத்த மதத்திற்கு மட்டுமல்ல இந்து முஸ்லிம் மதங்களுக்கும் பொருந்தும்.

 5. பிழைப்பிற்காக எழுதுவோருக்கு பல சந்தர்ப்பங்களீல் பிழைப்பு வாத சிந்தனைகளே கை கொடுத்துக் காக்கின்றன அதற்காக இவர்கள் தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.கத்திக் கொண்டிருக்கும் நாய்களூக்கு கல்லெறீந்தால் லாபம் நமக்கில்லை

 6. அம்பேத்கரின் பவுத்தமும் தேரவாத பவுத்தமும் ஒன்றல்ல.
  இலங்கையில் உள்ள பவுத்தம் பேரளவில் தான் தேரவாதமே ஒழிய, நடைமுறை இந்து மதங்களின் பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டது.
  தமிழர்களளவுக்குச் சிங்களவரிடையே சோதிடம், கடவுளர், சடங்குகள் மீது பாரிய நம்பிக்கை உண்டு.

 7. சாதி முறையும் அவர்களிடையே உண்டு.

  1. சிங்களவர் என்ன தேவ உலகத்தில் இருந்து வந்தவர்களா என்ன? தெற்கு ஆசியாவில் சாதியில்லா சமூகத்தை காட்டுங்கள் பார்ப்போம்.இந்து மதத்தில் இருந்து வந்தவையே எல்லாச சமயமும் ஆக தேரவாதம்,தீவிரவாதம் எல்லாம் லேபிள்களே தவிர புது சிந்தனகள் அல்ல.என்ன சிங்களவருக்கு தமிழரின் ஒற்றூமை இன்மை ஆள ஆள விழுங்கும் தன்மை வசதியாகப் போயிற்றூ அதனால் தமிழரை மிதித்து நடக்கிறார்கள் இதில் ஆச்சரியப்பட் ஒன்றூமே இல்லை.

   1. ”இந்து மதத்தில் இருந்து வந்தவையே எல்லாச் சமயமும்” என்ற கூற்ரு பிழையானது. இந்து மதம் இந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்த ஆரியரின் கண்டுபிடிப்பு.

  2. பவுத்தம் சாதிமுறையை அறவே நிராகரித்த மதம். சிங்களவரிடையே உள்ள சாதி முறையின் விருத்திக்கு ‘இந்து மதப்’ பாதிப்புக்களே காரணம்.
   இஸ்லாமியர் ஒப்பிடுகையில் சாதி முறைக்குட்படாதவர்கள். தென்னாசியாவிலும் அவர்கள் இருக்கிறதாகக் கேள்வி

 8. Athavan theedsanya´s party is responsible for atrocities against the adivadisis in India and he loves Buddhism.. Sinhala Buddhisms also somehow partly responsible for atrocities against the Tamils in Sri Lanka.. they love Buddhism.Guess .what have they got in common But Whether is it Buddhism or Hinduism or Judaism; Islam or Christianity…They all have swimed in blood or are still swiming in the blood.

  1. way and which they express and act on that attraction, are copious and sometime conflicting.todays moral relativism and religious pluralism spiritual hunger.

    1. கணனித் தவறாக இருக்கலாம்.பேப்பரில் வருகிற நாள்பலன் போல நினைத்தது ஒன்றூ நடந்தது வேறோன்றூ.

  2. சுகாதி அவர்களுக்கு,பெளத்தத்தை ஆதரித்து நான் எங்கே எழிதிருக்கிறேன் அல்லது பேசியிருக்கிறேன்? புத்தகம் பேசுது இதழ் என்னிடம் எடுத்த நேர்காணலிலும் “எனக்கு அடிப்படையான பல சந்தேகங்கள் இருக்கு. பௌத்தம் தழைத்தோங்கும் ஜப்பானில் யுத்தவெறியை மட்டுப்படுத்த அதனால் முடியவில்லை. இலங்கையில் அது பேரினவாதமாக வெளிப்படுகிறது. …. அம்பேத்கரோடு பௌத்தம் தழுவின பத்துலட்சம் பேரோட சமூகநிலை இப்போ என்னவாக இருக்குன்னு தெரியல. பௌத்தம் தழுவி அரைநூற்றாண்டு ஓடிவிட்டது. இப்போது அவர்களோடு சமூகத்தின் பிற பகுதி எப்படியான உறவு வச்சிருக்குன்னு தெரியணும். அதிகாரம் கிடைக்கிறபோது எந்தவொரு மதமும் ஒரு ஒடுக்குமுறை கருவியாகத்தான் இருக்கமுடியும்கிறதை பௌத்தம் எந்த வகையில் மறுக்கிறது…? இதையெல்லாம் தெளிவுபடுத்தாமல் எல்லாருக்கும் புத்தர் தாயத்து வழங்கவேண்டுமாங்கிற கேள்வி இருக்கு.

   ஒரு நாத்திகராகவோ, மதத்தை மறுதலிக்கிறவராகவோ இருந்து அந்தநிலைக்கு தோதானதாக அம்பேத்கர் பௌத்தத்தை தேர்ந்து கொண்டாரான்னும் விவாதிக்க வேண்டியிருக்கு.” என்றே சொல்லியிருந்தேன்.
   என்மீது வசைபாட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு அதற்கு இசைவான யூகங்களை முன்வைப்பது சரியா? – ஆதவன் தீட்சண்யா

  3. கருத்தின் முக்கியமான பகுதி ஆதவன் தீ.யின் கட்சி என்று கூறப்படும் ஒரு கட்சியின் நிலைப்பாடும்நடத்தையும் பற்றியது.
   மறுத்து ஒரு சொல் பேச இயலாத ஆதவன் தீ., தான் பெளத்தத்தை ஆதரித்து எங்கே எழுதியியுக்கிறேன் என்று நழுவுகிறார்.
   ஒரு முற்போக்குவாதி மிகவும் மதிக்கத்தக்க மதம் பெளத்தம் என்பேன். அதை ஆதரிப்பது பற்றி ஆதவன் தீ. ஏன் வெட்கப்பட வேன்டும்?
   வருந்தத்தக்கது ஏதெனின், இன்று நடைமுறையில் உள்ள பெளத்தங்கட்கும், புத்தரின் போதனைக்கும் ஆழமான மெய்யியற் சிந்தனைக்குமிடையே வெகு தூரம் என்பது தான்.

   ஆதவன் தீ. அவர் சார்ந்த்த கட்சி எனச் சொல்லப்பட்டது பற்றிக் கொஞ்சம் விளக்குவாரா!

 9. உங்கள் மீது வசை பாடுவதாக நீங்களே முடிவெடுப்பதுதான் தவறானது.

 10. As far i know this guy is another kind of Jeyamohan who just love to issue some controversial statement to be in the middle of the public talk or in gossip

  1. நாவலன் தன் கட்டுரையில் கர்னல் ஆல்காட் மற்றும் பிளாவட்ஸ்கி பற்றி தெரிவித்திருந்த கருத்திலிருந்த பிழையை சுட்டிக்காட்டுவதும் அதற்கான ஆதாரங்களைத் தருவதும் உங்கள் பார்வையில் controversial statement விடுக்கிற எனது மலிவான தந்திரமாகவே இருக்கட்டும். ஆனால் நான் முன்வைத்தவை உண்மையா இல்லையா என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதிக் குவிக்கிற அவர் பதில் சொல்லியிருக்கலாம். வரலாற்று ஆய்வாளர் போன்று எழுதிக் கொண்டிருக்கும் தன் பிம்பம் உடைந்துவிட்டதே என்ற ஆத்திரத்தில் ஏதேதோ எழுதினாரேயன்றி என் கேள்விகள் பக்கம் வராமலே ஜகா வாங்கிவிட்டார். அவரது கட்டுரையை வெளியிட்ட இணையதள பொறுப்பாளர்களாவது அவர் சார்பில் சொல்லியிருக்கலாம். சரி, பின்னூட்டத்தில் பெடலெடுக்கிற உங்களில் யாராவது அவருக்கு சுட்டிக்காட்டுவீர்களென்றால் அந்த நோக்கம் உங்களுக்கும் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் என்ன கேட்டாலும் நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நல்லா இருக்கு உங்க நியாயம்.
   – ஆதவன் தீட்சண்யா

  2. சி.பி.எம். பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் பவுத்தம் பற்றிய கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி நழுவுகிறீர்களே. அது என்ன மாதிரிப் பெடல் அடிப்பு?
   நான் சபா நாவலனிடம் உங்கள் சார்பாகக் கேட்கிறேன். அதற்கு முதல் சி.பி.எம். சார்பான பதிலை எனக்குச் சொல்லுவீர்களா?

 11. படையப்பா படம் பார்தவர்கள் இருக்கிறார்களா?
  அந்தப் பா..ம்பு புத்துல கையவிட்டு……………..

 12. இங்கே சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் “கர்னல் ஆல்காட் மற்றும் பிளாவட்ஸ்கி” ஆகியோரைப் பற்றி நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன்!.இதில் புரிந்துக் கொள்ள வேண்டியது அவர்கள் மையம் கொண்டிருந்த சென்னை நகரத்தின் அடையாற்றில் உருவான “தியோசப்பிகல் சொசைட்டி” என்பது ஆரியர்களுக்கு ஆதரவானதோ(மேடம் பிளவட்ஸ்கி ஒரு ரஷியர்,அவர் ஆரிய ஆதரவு கருத்துக்களை எழுதியுள்ளார்,அது முதலாம் இரண்டாம் உலகப்போர் சூழ்நிலையில்),இல்லையோ அது அவசியமில்லை.இனவாத புத்தமதம் ஐரோப்பியர்களால் தூண்டபட்டதா என்றால்,அதை மறுக்க முடியாது – அக்காலத்தில் இப்படி குற்றம் சாட்டுவது தவிர்க்கமுடியாது என்பது ஆராய்ச்சிக்குறியது.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற “கம்பெரேட்டிவ் மெத்தடாலஜி” என்பது ஆராய்ச்சி ரீதியில்,”மரபணு ரீதியான இனங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை நிறுவுகிறது”!.ஆனால் பிளாவட்ஸ்கி,மேடம் அன்னி பெஸண்ட்,கேணல் ஆல்கால்ட்,போன்றவர்களின் நோக்கம் மத ஆராய்ச்சியே தவிர காலனித்துவத்தை நிறுவுவது அல்ல.அதற்கு மேலும்..அவர்களின் நோக்கம்,”ஓரியண்ட்” என்று அவர்களால் அறியப்பட்ட(முஸ்லீம்கள் மூலம்) “கிழக்குலகத்தை மேற்குலகம் புரிந்துக் கொள்ளும் வகையில் விளக்கங்களை அவர்கள் மொழிகளில் பதிவு செய்வதே ஆகும்”.சமஸ்கிருதநூல்கள் முதலில் முஸ்லீம்கள் மூலம் உருது – பெர்ஷிய மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு பிறகுதான் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன!.அதாவது அவர்களின் புத்தமத,இந்துமத புரிதல்களில் பாரிய திரிபுகள் இருந்திருக்கின்றன.அவர்கள் முதலில் புத்தமதத்திற்கு அறிமுகமானது,”ஜப்பானிய கோணம் கொண்ட சென் புத்தமதமாகும்”.இது தியானம்,யோகம் என்பதனை “கண்டம்பிளேஷ்ன்” முலம் பயின்ற ஹத்த யோகா வகையை சார்ந்தது!.ஆகையால்,இனவாதம் என்பதனை கிட்டடெட்ட ருவாண்டா பிரச்சனையுடன் ஒப்பிடலாம்!.மேடம் அன்னிபெசண் கூட,ஆரிய இந்து மதத்தை ஆதரித்தது,பிளாவட்ஸ்கியின் பாதிப்பு என்று முற்றாக கூறிவிட முடியாது.அவர் மையம் கொண்டிருந்த சென்னை மாகாணத்தில்,ஆரியர்களுக்கு? எதிரான(மகாராஷ்டத்திலும்),”திராவிட இயக்கங்களின்” தோற்றம் பிரிட்டிஷாரின் ஆட்சியை ஆதரித்தது,அது அவரின் “ஹோம் ரூல் இயக்கத்தின் நோக்கத்திற்கு” எதிராக அமைந்ததினாலேயே,அவர் ஆரிய எதிர்ப்பை மறுத்தலித்தார்!……

 13. தியோசொபிகல் சொசைடியின் மதம் சம்பந்தமான விஞ்ஞான(மேற்குலக) விளக்கங்களை திரிபுகள் என்று ஒதுக்கி விடமுடியாது.பிராமணர்கள் இந்துமத கோட்ப்பாடுகளை உருவாக்கவில்லை.அவர்கள் “கோட்பாடுகளை மனப்பாடம் செய்து” அதை நடைமுறை சடங்குகளாக(ரிச்சுவல்ஸ்) ஆக்கினார்கள்.அர்த்தங்கள் புரியாத இந்த சடங்குகளின் அதீத இயந்திரத்தன்மைதான் புத்தமதத்தின் பிறப்பிற்கு வழி கோலியது!.மூட நம்பிக்கைகளை அகற்றி இதன் அர்த்தங்களை விளக்கப்படுத்துதலே தியோசபிகல் சொசைட்டியின் முயற்சி!.இதன் மூலமே பரதநாட்டியத்தை திரிபுபடுத்தி?,”கலாஷேத்திரா முறை” உருவாகியது.இன்று நாம் பழகும் யோக முறைகளும் இத்தகைய விஞ்ஞான திரிபுகளே!.ஆசியர்களாகிய நாம்,”மின்சாரத்தையும்,மோட்டார் கர்களையும்” ஏற்றுக் கொண்டுவிட்ட போது,இவைகளையும் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.ஆனால் இவைகள் சில சமயங்களில் அரசியல் தீர்வுகளை தருவதில்லை!.
  சுலபமான விளக்கம் வேண்டுமென்றால்,பிரிட்டிஷ் வானவியல்- இயற்பியலாரான,திரு.ஸ்டீபன் ஹாக்கின்ஸின் இக்கூற்று இந்து மத கோட்பாட்டுடன் ஒத்திருக்கிறது என்றால்,/”Their existence would be a key confirmation of string theory, and they could make up the mysterious dark matter that holds galaxies together,” he told the BBC./–
  “theoretical physicist and Nobel laureate Steven Weinberg at the University of Texas in Austin.” இவருடைய இக்கூற்று அதன் திரிபுகளை ஒத்திருக்கிறது!./ Are they also going to be disappointed about our position in nature, our purpose?
  We don’t see any purpose dictated to human beings in nature. Human life does have a purpose, but it is a purpose that we invent for ourselves. It takes a certain act of courage to look at nature, not see any plan for human beings in there and yet go on and live good lives, love each other, create beautiful things, explore the universe. All these take more courage without having some divine plan that we discover, but one that we rather create for ourselves.

  Do you think most people have that kind of courage?
  I don’t know. People have to have a lot of courage just to get on with their lives. And if there is no … Well, I don’t know the answer to that question./–

Comments are closed.