போர்தின்ற இலங்கை தற்கொலையில் நான்காவது இடம்

suicide-rates-srilankaபுலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறையின் சென்று வருகின்றவர்களும் புலம்பெயர் நாடுகளிலிந்து அவருக்கத்தக்க இனவாதம் பேசுபவர்களும் வேற்றுக்கிரக வாசிகள் என்பதைப் புதிய தகவல்கள் நிறுவியுள்ளன. உலகில் அதிகமாக மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தை வகிக்கிறது.

இலங்கையில் அபிவிருத்தி நடைபெறுகிறது என்றும் இலங்கை சிங்கப்பூராகிறது என்றும் பூரிப்படையும் புலம்பெயர் வாசிகளுக்கு இச் செய்தி புதியது. போரும் போரின் பின்னான பல்தேசிய முதலீடுகளின் ஆக்கிரமிப்பும் புதிய பணக்கார வர்க்கத்தை இலங்கையில் உருவாக்கியுள்ளது. சட்டவிரோதப் பண முதலீடுகளும் இராணுவ வியாபாரமும் இலங்கையில் மாபியா வலையமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இவர்களின் வசதிக்காக தோற்றுவிக்கபட்டுள்ள வீதிகளும் விமானங்களும் விடுதிகளும் அபிவிருத்தியல்ல. இலங்கையில் பட்டினியால் தற்கொலை செய்துகொள்ளும் தமிழ் சிங்கள வறியவர்களின் தொகை வரலாறு காணத அளவிற்கு அதிகரித்துள்ளது.

போரின் உளவியல் பாதிப்பிற்கு உள்ளான மற்றொரு பகுதியும் இப் பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் 29 பேர் தற்கொலை செய்துகொள்ளும் நாடாக இலங்கையை ராஜபக்ச அரசு மாற்றியுள்ளது.

இந்த வகையில் ஒடுக்க்ப்படும் சிங்கள மக்களின் ஆதரவுத் தளம் மட்டுமே சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைப் பெரும்பான்மையினரின் போராட்டமாக மாற்றியமைக்கும்.