போர்க்குற்ற விசாரணைக் குழுவிற்கு விசா இல்லை: இனக்கொலையாளி மகிந்த

Mahindaவன்னியில் நடைபெற்ற இனப்படுகொலையின் சூத்திரதாரியும் குடும்ப அரச சர்வாதிகாரியுமான மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு விசா வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். படுகொலைகளைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். குற்றங்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க இலங்கை ஐவர் குழுவை அமைத்துள்ளது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலர் அவதேஷ் கெüசல், பாகிஸ்தான் வழக்குரைஞர் அகமர் பிலால் ஸþஃபி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், ஐ.நா. சார்பில் பல்வேறு போர்க்குற்றப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ள வழக்குரைஞர் டெஸ்மண்ட் டிசில்வா, அமெரிக்க சட்ட வல்லுநர் டேவிட் கிரேன், ஜெஃப்ரி நைஸ் ஆகியோர் இலங்கை அறிவித்துள்ள குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

அமெரிக்க அரசின் ஆணைக்கு இணங்கச் செயற்படும் ஐ.நா இஸ்ரேல் இலங்கை போன்ற நாடுகளில் இனப்படுகொலைகளை அனுமதிப்பதும் பின்னர் போர்க்குற்றம் என்று கூறி போராட்டங்களைக் காலம் தாழ்த்துவதும் உள் நோக்கம் கொண்ட செயற்பாடுகள். ராஜபக்சவும் ஏனைய குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டால் மனிதகுலம் மகிழ்ச்சியடையும். அதேவேளை ராஜபச்க தண்டிக்கப்படப் போகிறார் என்ற மாயையைத் தோற்றுவித்து அதனைப் பிழைப்பாக மாற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்

அமெரிக்கா இந்தியா உட்பட்ட நாடுகளின் நோக்கங்களுக்குத் துணை செல்கின்றன.
இலங்கையில் உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களை மகிந்த அலரி மாளிகையில்சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

ஐ.நா. மனித உரிமைகள் குழுவுடனான ஒத்துழையாமை தொடரும். மேலும், போர்க்குற்றப் புகார் தொடர்பாக, சர்வதேச அளவிலான விசாரணை மேற்கொள்பவர்கள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.