போரின் பின்னைய இலங்கை : புதிய திசைகள் கலந்துரையாடல்

போரின் பின்னைய இலங்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் நாளை சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து பேராசியர் சிவசேகரம் உரையாடலில் கலந்துகொள்கிறார்.

புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஏழாவது பகுதி வெள்ளி (21.05.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
குரல்வெப்(kuralweb.com) மற்றும் 

இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்)

கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.