போராட்ட முன்னறிவிப்பு : சண்ரைஸ் கலந்துரையாடல்

லண்டனில் புதியதிசைகள் அமைப்பு நாளை சனியன்று நிகத்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் ஆகியவற்றின் முன்னறிவிப்பாக இன்று, வெள்ளி இரவு 10:30 மணியிலிருந்து சண்ரைஸ் வானொலியில் உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. புதிய திசைகள் அமைப்புடன் தமிழ் நாட்டில் எல்லா மாநிலங்களிலும் போராட்ட நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் மருதையனின் போராட்டம் தொடர்பான உரையும் ஒலிபரப்பாகும். புதிய திசைகள் அமைப்புடன்
Progressive Nepalese Society UK,  Democracy and class struggle
ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் கலந்துகொள்கின்றன.
குரல்வெப்(kuralweb.com) மற்றும் இனியொரு (inioru.com) இணையத் தளங்களூடாக முன்கூட்டியே தமது கருத்துக்களையும் வினாக்களையும் முன்வைக்கலாம். நிகழ்ச்சியைக் கேட்க விரும்புவோர் http://firstaudio.net ஊடாகக் கேட்கலாம். (FStream மென்பொருளை தரவிறக்கம் செய்து வானொலி நிகழ்ச்சியை iPhone ஊடாகவும் கேட்கலாம்)

கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட பின்னூட்டங்களையோ கேள்விகளையோ பதிவு செய்து கொள்ள முடியும்.

இலங்கை  புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி உட்பட பல அமைப்புக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: 020 8586 9636

3 thoughts on “போராட்ட முன்னறிவிப்பு : சண்ரைஸ் கலந்துரையாடல்”

  1. //இன்று, வெள்ளி இரவு 10:30 மணியிலிருந்து சண்ரைஸ் வானொலியில் உரையாடல் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது//
    இரவு 10.30 என்பது லண்டன் நேரப்படியா? அப்படியென்றால் இந்திய நேரப்படி எப்போது கேட்கவேண்டும்?

  2. சென்னையில் நீங்கள் நடத்திய போராட்டங்களில் பத்தாயியம் மக்கள் கலந்திருக்கிறார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். வன்னிப் படுகொலை நடந்த போது உங்களால் ஏன் கிளர்ச்சியை உருவாக்க முடியவில்லை. இப்போது மட்டும் ஏன் போராடுவான்?
    இது மருதையனிடம்ம் எனது கேள்வி

Comments are closed.