போபால் மரணங்கள் இந்திய வெளியுறவுத்துறையின் துரோகம்- முன்னாள் சிபிஐ அதிகாரி குற்றச்சாட்டு

26 ஆண்டுகளுக்குப் பிறகு 20,000 பேர் வரை கொல்லப்பட்ட போபால் விஷ வாய்வுக் கசிவு வழக்கில் எவர் ஒருவரும் தண்டிக்கப்படாமல் வழங்கப்பட்ட நீதி தொடர்பாக கடுமையான சர்ச்சைகள் இந்தியாவில் எழுந்துள்ளன. ஆனாலும் இத்தீர்ப்பையும் ஆளும் வர்க்கங்களின் வாரன் ஆண்டர்சன் தொடர்பான நலபையும் இந்திய ஆட்சியாளர்கள் மூடி மறைக்கிறார்கள். என்பது பல தரப்பினரின் குற்றச்சாட்டு. இந்நிலையில் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தை இது தொடர்பாக கடுமையாக விமர்சித்திருக்கிறார்,இது

 

குறித்து பி.ஆர்.லால் கூறியதாவது:

யூனியன் 1994 கார்பைடு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட வேண்டாம் என வெளியுறவுத் துறை அதிகாரிகள் சிலர் என்னை வற்புறுத்தினர். சிபிஐ விசாரணையில் சில அதிகாரிகள் தலையிட்டதால்தான் நீதி கிடைக்க தாமதம் ஆகிறது. மனிதர்களை படுகொலை செய்ததற்காக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 304-ன் கீழ்தான் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன்படி அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால், அதன் பின்னர் 304 “பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்தப் பிரிவு சாதாரணமாக சாலை விபத்துகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எந்த ஆதாரத்தில், எந்த சூழ்நிலையில் இதுபோன்று வழக்கை சிபிஐ நீர்க்கச் செய்தது என்பது தெரியவில்லை. மற்ற நாடுகளில் எல்லாம் நீதித் துறை, அதிகார வர்க்கம், அரசியல் தலைவர்களின் குறுக்கீடு இல்லாமல் மத்திய புலனாய்வு ஏஜென்சிகள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன என்றார். ஏப்ரல் முதல் 1995 ஜூலை வரை இந்த வழக்கை பி.ஆர்.லால் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொய்லி கண்டனம்: லால் பேட்டி குறித்து மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது: ஓய்வு பெற்ற பின் பலர் பலவித அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். லால் அறிக்கை பொறுப்பற்றதாகும். அவர் கூறுவது போன்று நடக்கவேயில்லை. இதுபோன்று அறிக்கை விடுவதன் மூலம் தியாகிகளாக சிலர் முயற்சிக்கின்றனர் என்றார் மொய்லி.

ஆன்டர்சனுக்கு

 

எதிரான வழக்கு முடிக்கப்படவில்லைமொய்லி

யூனியன்

 

கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆன்டர்சனுக்கு எதிரான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் எம். வீரப்ப மொய்லி கூறினார். போபால் விஷவாயு கசிவு வழக்கின் தீர்ப்பில் வாரன் ஆன்டர்சன் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து தில்லியில் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் நிருபர்கள் செவ்வாய்க்கிழமை கேட்டபோது அவர் அளித்த பதில்: இந்த வழக்கை விசாரித்த சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது வாரன் ஆன்டர்சனின் பெயரையும் அதில் சேர்த்திருந்தது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றங்களை நீதிமன்றம்தான் தயாரித்தது. வழக்கு நடந்தபோது நீதிமன்றம் மூலம் அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை. மேலும் அதற்கு அவர் பதிலும் அளிக்கவில்லை. அவர்தான் வாரன் ஆன்டர்சன். இதையடுத்து அவர் தலைமறைவானவர் மற்றும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் அவர் மீதான வழக்கு இன்னும் முடிக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது என்றார் அவர்.

தீர்ப்பை

 

எதிர்த்து மேல்முறையீடு

போபால் விஷ வாயு கசிவு விபத்து வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் ஜப்பார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். வழக்கை விரைவுபடுத்தி, குற்றம்சாட்டப்பட்டோருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வகை செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங், சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரை சந்தித்து முறையிடுவோம் என்றார் அவர்.