போபால் குற்றவாளி வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்த ராஜீவ்காந்தி.

போபால் விஷ வாய்வுக் கசிவு கொலைக் குற்றவாளியான வாரன் ஆண்டர்சனை ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தனி விமானத்தில் பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைத்த உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது. இப்போது இது குறித்து மன்மோகன், சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு மௌனம் சாதித்தாலும், கசப்பான உண்மைகள் நம் நெஞ்சில் அறைகின்றன. 1984ம் ஆண்டில் விமா​னப் போக்​கு​வ​ரத்​துத்​துறை இயக்​கு​ந​ராக இருந்த ஆர்.எஸ்.​ சோதி,​​ தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் பல திடு்க்கிடும் விவரங்களைத் தெரிவித்துள்ளாகர். அவர் அளித்துள்ள பேட்டி:​ம் ஆண்டு டிசம்​பர் 2, 3ம் தேதி​க​ளில் விஷ​வாயு கசிவு சம்​ப​வம் நடந்​தது.​ அதன் பின்​னர் 7ம் தேதி ஆன்​டர்​சன் கைது செய்​யப்​பட்​டார்.​ ஆனால் கைது செய்​யப்​பட்ட சில மணி நேரங்​க​ளில் அவர் விடு​விக்​கப்​பட்​டார்.​ வாரன் ஆன்​டர்​சனை போபாலி​லி​ருந்து டெல்​லிக்கு அழைத்​துச் செல்லுமாறு அப்போ​தைய முதல்​வர் அர்​ஜுன் சிங் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து எனக்கு உத்​த​ரவு வந்​தது.​இ​தைத் தொடர்ந்து அவ​ருக்​காக போபால் விமான நிலை​யத்​தில் மத்​திய பிர​தேச முதல்​வ​ரின் அதி​கா​ரப்​பூர்வ அரசு விமா​னம் தயா​ராக வைக்​கப்​பட்​டது.​ அவ​ரு​டன் மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் வந்​த​னர்.​இ​தை​ய​டுத்து தயா​ராக இருந்த விமா​னத்​தில் ஆன்​டர்​சன் ஏறி டெல்லி சென்​றார்.​ விமா​னத்​தில் அவ​ரு​டன் வேறு யாரும் செல்​ல​வில்லை.​
கேப்​டன் எஸ்.எச்.​ அலி விமா​னத்தை ஓட்​டிச் சென்​றார்.​ ஆனால் விமா​னத்​தில் யார் இருக்​கி​றார்​கள் என்ற தக​வல் கேப்​டன் அலிக்கே தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ அது மிக மிக ரக​சி​ய​மா​கவே வைக்​கப்​பட்​டி​ருந்​தது என்​று கூறியுள்ளார்.இது குறித்து விமான கேப்​டன் அலி கூறுகையில், விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருக்​கு​மாறு எனக்கு உத்​த​ர​வி​டப்​பட்​டது.​ இதை​ய​டுத்து ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தா​கவே விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருந்​தேன்.​ வந்​த​வர் யார் என்​பதை என்​னி​டம் தெரி​விக்​க​வில்லை.​ அதை ரக​சி​ய​மாக வைத்​தி​ருந்​த​னர்.​1 மணி நேரம் 35 நிமி​டங்கள் பறந்து டெல்​லி​யில் தரையிறங்​கி​னோம்.​ விமா​னத்தி​லி​ருந்து அந்த நபர் இறங்​கி​ய​தும்,​​ ஒரு தூதரக காரில் அவரை ஒருவர் அழைத்​துச் சென்​றார்.​ விமா​னத்​தில் வந்த அந்த நபர் மிகவும் கவலையுடன் காணப்​பட்​டார் என்று கூறியுள்ளார்.கேப்டன் அலி நேர்காணல், கேள்வி: இதையெல்லாம் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிட்டது யார்?பதில்: எங்களுடைய கேப்டன் ஆர்.எஸ்.சோதியிடம் இருந்து உத்தரவு வந்தது. அவர், எங்களுடைய இயக்குனராக இருந்தார். முதல்வர் அல்லது முதல்வரின் செயலாளரிடம் இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கும். அவர்கள், இயக்குனருக்கு உத்தரவிட்டனர். அவர், எங்களுக்கு உத்தரவிட்டார்.கேள்வி: விமானத்தில் வேறு யாரெல்லாம் இருந்தனர்?பதில்: அவர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் கிடையாது.கேள்வி: டெல்லியில் அவரை வரவேற்க யாரெல்லாம் இருந்தார்கள்?பதில்: ஒரே ஒருவர் மட்டுமேஅவரும் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்தார்.கேள்வி: ஆண்டர்சன் எப்படி காணப்பட்டார்?பதில்: மிகவும் களைப்பாகவும், மனக் குழப்பத்துடனும் காணப்பட்டார். விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பின்னர் தான், அது ஆண்டர்சன் என்பதை அறிந்தோம். அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்றார்.மத்திய அரசு தலையீட்டால் அர்ஜூன் சி்ங் உதவினாரா?:இந்த விஷயத்தில் ராஜி்வ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசின் உத்தரவு இல்லாமல், ஆண்டர்சனை அர்ஜூன் சிங் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே பலரும் கருதுகின்றனர்.

1984

6 thoughts on “போபால் குற்றவாளி வாரன் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்ப வைத்த ராஜீவ்காந்தி.”

 1. அர்ஜூன் சிங்கிற்கு பெரிதாக அரசியல் எதிர்காலம் ஒன்றும் எதிர்காலத்தில் இல்லை … சோனியா வேறு அர்ஜூனிர்க்கு மிக மிக பிடித்தமானவர் … சில உண்மைகளேனும் அவர் வாயிலிருந்து வெளி வருமானால் தேவலாம் …

 2. அது மட்டுமா? தன்னை கொலை செய்த பாதகனையும், அவரும்,அவரின் தாயாரும்,பாரத ரத்னா எம்.ஜி.யாரும் தானே நன்கு வளர்த்து விட்டனர்!

 3. ராஜிவை விமர்சனம் செய்ய, அவரைக் கொன்ற எந்த இலங்கைக் காரனுக்கும், இனத்துக் காரனுக்கும் யோக்யதை இல்லை!

 4. // அது மட்டுமா? தன்னை கொலை செய்த பாதகனையும், அவரும்,அவரின் தாயாரும்,பாரத ரத்னா எம்.ஜி.யாரும் தானே நன்கு வளர்த்து விட்டனர்! //

  ராஜிவை விமர்சனம் செய்ய, அவரைக் கொன்ற எந்த இலங்கைக் காரனுக்கும், இனத்துக் காரனுக்கும் யோக்யதை இல்லை! //

  எவனும் நல்லநோக்கத்துக்காக போராட்ட இயக்கங்களை வளர்த்துவிடவில்லை.

  சிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முற்பட்ட சக்திகளை பிரித்து பல இயக்கங்களாக பயிற்றுவித்து அவைகளுக்குள் மோதலை உண்டாக்கி இலங்கையை போர்க்களமாக்கி பின்னர் பிரச்சனையை தீர்ப்பதாக அமைதிப்படையாக உள் நுழைந்ததே இந்தியா. இந்தியா எக்காலத்திலும் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக இருந்ததும் இல்லை இருக்கப்போவதும் இல்லை. ஈழத்தமிழருக்கு விடிவைத்தருவதாக கூறி நுழைந்த ராஜீவின் படைகள் ஆயுதங்களை வாங்கியபின் முதுகில் குத்தவில்லையா? அகிம்சை வழியில் போராடி திலீபன் பூபதித்தாய் போன்றவர்களை சாகடிக்கவில்லையா? நாலாயிரம் வரையிலான அப்பாவிகளை கொல்லவில்லையா? ராஜீவின் உயிர்தான் உயிர் மற்றவன் உயிரெல்லாம் என்ன மயிரா? மனுதர்மம் என்றும் கடவுளின் பெயரால் சாதியாக பிரித்து சமூகங்களை நிரந்தரமாக ஏற்தாழ்வுள்ளதாக அமைத்து ஆளப்படுவதே இந்திய அரசாட்சி. அதே பிரித்தாளும் சூழ்ச்சியையே ஈழத்தமிழர்மீதும் போராட்ட இயக்கங்கள் மீதும் இந்திய அதிகாரவர்க்கம் இன்றுவரை பாவித்து வருகின்றது. விமர்சனம் செய்யும் யோக்கியதை ஈழத்தமிழனுக்கே அதிகம் உண்டு காரணம் ராஜீவின் படைகளின் கால்களுக்குள் மிதிபட்டவர்கள் ஈழத்தமிழர்கள். உங்களிடம் இந்திய உணர்ச்சி மேலோங்கி நிற்கின்றதோ? எங்கே இந்தியன் என்ற உணர்ச்சியில் தலித்தும் பார்பனனும் ஒன்றா? இந்தியன் என்ற உணர்ச்சியில் தீண்டாமையை உங்களால் ஒழிக்க முடிந்ததா? இந்தியன் என்ற போலித்தனமான மாயைக்குள் இருந்து ராஜீவை விமர்சிக்கும் உரிமை பற்றி பிதற்றுவதை ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் ஈழத் தமிழனுக்கு இல்லை. ஈழத்தமிழனை பொறுத்தவரை ராஜீவ் ஒரு கொடிய கொலைகாரன். நாலாயிரம் வரையிலான ஈழத்தமிழனின் ரத்தம் குடித்தவன் பல்லாயிரம் வரையிலான ஈழத்தமிழர் உயிர்ப்பறிப்புக்கு சிங்களத்துக்கு துணை நின்றவன்.

  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் பரமா.  இந்தியன் என்ற தேசிய இனமே கிடையாது.  தமிழனைச் சுரண்டி வாழ்வதே வட இந்தியர்களுக்கு வழக்கமாக இருக்கிறது.  சோனியா போன்ற கொடியவர்களின் வாயை அடைக்க ஒரே வழி, ஒரு தமிழன் கூட காங்கிரஸ் பெருச்சாளிகளுக்கு வாக்களிக்காமல் இருப்பதுதான். காங்கிரஸ் தமிழனின் பரம விரோதி. 

  2. முதலில் ஈழத்தமிழனிற்குள் எத்தனை பிரிவுகள் என்பதையும் அவர்களின்

   ஒற்றுமையையும்

   கவனத்திற் கொண்டு இந்தியரின் மீது குற்ரம் சொல்ல முற்படவும்.. துரை

Comments are closed.