பொலிஸ் தாக்கியதில் அப்பாவி மாணவர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் சவர்கோன் என்ற கிராமத்தில் இந்தியப் பொலீசார் நுளைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், மாவோயிஸ்டுக்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் மூன்று பொலீசார் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதானால் ஆத்திரமடைந்த பொலீசார் சாரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில் பாடசாலை ஒன்றிலிருந்த மூன்று மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாவோயிஸ்டுக்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியதாலேயே மாணவர்கள் கொல்லப்படதாக அரச தரப்புத் தெரிவிக்கிறது. மாவோயிஸ்டுக்கள் இதனை மறுத்துள்ளனர்.

சனியன்று நிகந்த இந்தச் சம்பவம் சுற்று வட்டாரங்களில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.