பொது பல சேனா பயங்கரவாதிகளின் அழிவுக்கான புதிய திட்டம்

bbs_hinduநோர்வே அரசின் பணத்திலும், நோர்வே அரசு பணம் வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற பயங்கரவாத அமைப்பு இனக்கொலையாளி கோத்தாபயவின் ஆதரவுடன் செயற்படுகிறது. பொதுபல சேனாவும் அகில இலங்கை இந்து பேரவை என்ற அமைப்பும் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இச் சந்திப்பில் கிழக்கில் இஸ்லாமியர்களின் தொகை அதிகரிப்பதால் இந்துத் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை பௌத்த சிங்கள பாசிஸ்டுக்களால் ஆளப்படும் நாடு. கிழக்கிலும் வடக்கிலும் பௌத்த சிங்கள மயமாக்கல் மிகவும் அவதானமாக நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கை அரசிற்கு எதிராக இஸ்லாமியத் தமிழர்கள் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களான மலையக மற்றும் பூர்வீகத் தமிழர்களுடன் இணைந்து போராடுவதைத் தடுக்கும் முன் முயற்சியாக பொதுபல சேனாவின் பயங்கரவாதம் தமிழ்ப் பகுதிகளில் விரிவுபடுத்தப்படுகிறது.

கிழக்கில் இஸ்லாமியத் தமிழர்களுக்கும் ஏனைய தமிழர்களுக்கும் இடையேயான வரலாற்று வழிவந்த முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி இரண்டு பகுதியினரையும் அழிக்கும் திட்டமிட்ட செயலில் இப்பயங்கரவாத அமைப்பு இறங்கியுள்ளது.

பொதுபல சேனா என்ற தன்னார்வ நிறுவனத்தின் நிதி மூலம் தொடர்பான தகவல்களை வெளியிட அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசு மற்றும் நோர்வே அரசின் தொடர்புடன் இயங்கும் ஆதாரங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பொது பல சேனா என்ற நாஸி பயங்கரவாத அமைப்பின் புதிய தலையீடு பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பொது பல சேனா நோர்வே அமெரிக்க அரசுகளால் தோற்றுவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள்:

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)