போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் : மீண்டும் ஹில்லரி

“The Financial Times” என்ற இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கடந்த 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நடைபெற்ற யுத்தத்தில், இரு தரப்பும் மேற்கொண்ட போர்முறை குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் ஹில்லரி கிளிங்டன் இதே வகையான கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். குறிப்பாக ஐக்கியநாடுகள் தலையிட வேண்டும் என்றும், போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பல தடவைகள் வலியுறுத்தி வந்தார். தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய இலங்கை அரசுகளுடனான வர்த்த ஒப்பந்தங்களை நடைமுறைப் படுத்த மட்டுமே இவ்வாறான அறிக்கைகளும் கண்டனங்களும் பயன்பட்டன. இறுக்கமான மக்கள் சார்ந்த அமைப்பு ஒன்று உருவாகும் வரையில் இவ்வாறான அறிக்கைகள் பிராந்திய அரசியலை அமரிக்கநலன் சார்ந்து பயன்படுத்தவே பயன்படும்.