பொதுநலவாய நாடுகள் போட்டி நிறைவில் ராஜபக்ச கலந்துகொண்டார்.

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் இன்று நிறைவிற்கு வந்தன. மிகப்பெரும் ஊழல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளின் இறுதி நாளில் சர்ச்சைக்குரிய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இலங்கை உட்பட பிராந்திய நாடுகளில் தனது ஆதிக்கத்தை தெரிவிப்பதற்கான சின்னமாகவே ராஜபக்சவின் வரவு அமைந்ததாக ஆய்வாளர்களின் கருத்து அமைந்திருந்தது. இந்திய அரசு திட்டமிட்டே இனப்படுகொலை நடத்தப்பட்டதை உலக அரங்கில் தெரிவித்துள்ளதுடன் படுகொலைகளின் அடியாள் ராஜபக்சவிற்கும் சர்வதேச அரசியல் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளது.
தமிழ் நாட்டில் ராஜபக்சவின் வரவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நிகத்திய சுமார் 200 இற்கு மேற்பட்டோர் இன்று கைதாகியிருந்தனர். நிகழ்வின் காட்சியமைப்பை திரைப்படத் துறையைச் சேர்ந்த பாரத் பாரத்பாலா வடிவமைத்திருந்தார்.