பேஸ் புக் (facebook) அமரிக்காவின் உளவு தளமாகத் தொழிற்படுகிறது : ஜுலியன் அசாஞ்ஜ்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜ் தனது நேர்காணல் ஒன்றில் பேஸ் புக் என்பது அமரிக்க உளவுத்துறையின் வேவு தளமாகத் தொழிற்படுகிறது என்று தெரிவித்தார். பேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்களின் பின்னணியில் தானியங்கி தரவு சேகரிக்கும் மென்பொருள் தனி நபர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து அமரிக்க உளவுத்துறைக்கு வழங்குகிறது என்று மேலும் குறிப்பிட்டார். பேஸ் புக்கில் நண்பர்களை இணைக்கும் போது அவர்களின் நடவடிக்கைகள், நண்பர்கள், வாழ்விடங்கள், உறவினர்கள் போன்ற இலவச தகவல் சேவையை அமரிக்க உளவுத்துறைக்கு இலவசமாக பாவனையாளர்கள் வழங்குகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பேஸ் புக் பிரதானமாகவும் தவிர, யாஹூ, கூகிள் போன்றன உளவு வேலைக்காகப் பயன்படும் மிகவும் அரிய கண்டுபிடிப்புக்கள் என மேலும் குறிப்பிட்ட அசாஞ்ஜ், தகவல் தொழில் நுட்பம் உருவாக்கிய “அறிவு சமூகம்” குறித்த புதிய விவாதத்திற்கும் அதன் மாற்றுக் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 thoughts on “பேஸ் புக் (facebook) அமரிக்காவின் உளவு தளமாகத் தொழிற்படுகிறது : ஜுலியன் அசாஞ்ஜ்”

  1. Face Book is indeed a good medium to unload a lot of things. Hang in there Julian. You have the innocent face of a school boy. Sri Lankan Tamils will bail you out. Some of them have committed real crimes.

  2. ஏன்டாப்பா பேஸ்புக்கோடநிறுத்திட்டே, அமெரிக்காவுல உள்ள எல்லா சமூக ஊடக்ங்களையும் சேர்த்துகிறதுதானே. வேணுன்னா ஐபிஎம், கொகாகோலா, மற்ரா மட்டை மண்ணாங்கட்டிகளையும் சேத்துக்கிறது.

Comments are closed.