பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஐ.நா வருகைக்குக் கண்டனம்!

சர்வதேச அரசியல் சூழல் தொடர்பான ஆதிக்க சக்திகள் சார்ந்தியங்கும் ஐக்கியநாடுகள் சபை இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை இதுவரை தாமதப்படுத்தி வந்திருந்தது. இப்போது திடீரென பன் கீ மூன் ஆலோசனைக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. அரச தரப்பிலிருந்து இக்குழுவிற்கு எதிரான எதிர்ப்புகள் ஒரு புறம். மறுபுறம் மற்றைய பேரினவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐ.நா குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அந்த கட்சி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு, வெளித்தரப்புகளுக்கு அதிகாரம் இல்லையென்றும் அந்த கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் தற்போதைய அரசாங்கம் உள்நாட்;டு முகாமைத்துவத்தை உரிய வகையில் முன்னெடுக்குமானால், இவ்வாறான சூழ்நிலை ஏற்படாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன் பான் கீ மூனின் குழு தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.