பேச மறுக்கும் இந்தியா நாடாளுமன்றக் குழு!

tamilparlதமிழ்நாட்டு அரசியல் தூதுக்குழு ஒன்று இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது இந்தியா கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம தொடர்ந்து கூறியதாவது: உள்ளூர், சர்வதேச கொள்கைகள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளும் அரசாங்கத்தின் போக்கை சர்வதேச சமூகம் பெரிதும் வரவேற்கிறது.

தவிர, இலங்கை சென்ற பாராளுமன்றக் குழு, பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையோ கருத்துக்களைக் கூறவோ மறுத்துவருவதாகவும், திருமாவளவன், கனிமொழி ஆகியோர் ஊடகங்களைத் தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.