பொட்டு அம்மான் பத்திரமாக இருக்கிறார் : பிரபாகரன் குறித்துக் கூற முடியாது.

 தமிழக உளவுத்துறையான கியூ பிராஞ்சினால் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும்  சிரஞ்சீவி மாஸ்டர் என்பவரின் நேர்காணைலை  ஜூனியர்  விகடன் இதழ் வெளியிட்டுள்ளது.  அதன் மறு பிரதி இங்கே:

கேள்வி : உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா?

பதில் : என்னைப் பற்றிய பல விவரங்களை ஏற்கெனவே நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். தமிழகத்தில் தங்கியிருந்தாலும், இது காலம்வரையிலு் நான் எந்தவிதத் தவறான செயல்பாடுகளிலும் ஈடுபட்டது கிடையாது. பழைய வழக்குகளின் அடிப்படையில் போலீஸ் எங்களைக் கைது செய்திருக்கிறது. அந்த வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காகப் போடப்பட்டவை.

கேள்வி : பிரபாகரனுக்கு எதிரான வரதராஜப்பெருமாளை கொலை செய்யவே நீங்கள் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டதாக ஏற்கெனவே தமிழகத்தில் பிடிபட்ட புலிகள் வாக்குமூலம் வெளியிட்டிருக்கிறார்களே..?

பதில் : (சிரிக்கிறார்..) எனக்கு அப்படியெல்லாம் எவ்வித அஸைன்மெண்ட்டும் கொடுக்கப்படவில்லை. புலிகள் எனச் சொல்லி அப்போது போலீஸாரால் கைது செய்ப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்.. அவர்களின் வல்லமை என்ன என்பது போலீஸாருக்கே தெரியும்..

அவர்கள் மூலமாக வரதராஜப் பெருமாளை நான் கொல்ல முயன்றதாகச் சொன்னது வேடிக்கையானது. பிடிபட்டவர்கள் அப்படியொரு வாக்குமூலத்தைக் கொடுத்தார்களா? இல்லை.. வேண்டுமென்றே அப்படியொரு வாக்குமூலம் திட்டமிட்டு வெளியிடப்பட்டதா..? என்பதும் தெரியவில்லை.. புலி உறுப்பினர்களாகப் பிடிபடுபவர்கள் மீது எத்தகைய வழக்குகள் போடப்பட வேண்டும் என்பதையெல்லாம் தமிழக அரசியல்தான் தீர்மானிக்கிறது.

கேள்வி : ஈழப் போர் தீவிரமாக இருந்தபோது நீங்கள் அங்கேதான் இருந்தீர்கள்? போர்க் கொடூரங்களின் நேரடி சாட்சியமாக என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

பதில் : சிங்கள அரசின் கொடூரம் உலகத்துக்கே தெரியும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு சேர அழிக்கப்பட்டனர். பஸ் மோதி பள்ளி மாணவன் மரணம் என்ற செய்தியை செய்தித்தாள்களில் படித்தால், அது நம் குழந்தையாக இல்லாவிட்டாலும் நம் மனது பதறுகிறது.

ஆனால், ஈழத்தில் கொத்து, கொத்தாகக் குழந்தைகள் கொல்லப்பட்ட கொடூரம் உலகறிய நடந்தும், சிங்கள அரசைக் கண்டிக்க உலக சமுதாயம் முன் வரவில்லை. மற்றபடி அந்தக் கொடூரங்கள் குறித்து விளக்கிச் சொல்லும் நிலையில் நாங்கள் இல்லை.

கேள்வி : பிரபாகரன் தப்பிவிட்டதாக ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லி சிங்கள அரசு ஒரு சடலத்தைக் காட்டியது. இதில் எதுதான் உண்மை.?

பதில் : எங்களின் தலைமையைக் கேட்காமல் நாங்கள் ஏதும் சொல்ல முடியாது.. அதே நேரம் இட்டுக்கட்டி ஏதும் சொல்ல நாங்கள் விரும்பவில்லை..

கேள்வி : சரி.. உங்களின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் நிலை குறித்தாவது சொல்லுங்களேன்..?

பதில் : (பலமாகச் சிரிக்கிறார்) மிகப் பத்திரமாக இருக்கிறார். அவருக்கு எந்தப் பாதிப்புமில்லை..

கேள்வி : கேணல் ராம், புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறு்பபாளர் கே.பி. உள்ளிட்டோர் சிங்கள சதிக்கு ஆளாகி தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே..?

பதில் : சிங்கள அரசு தமிழர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒற்றுமையைக் குலைக்க அனைத்துவித முயற்சிகளையும் செய்கிறது. போர்க்காலத்திலும் சிங்கள அரசு இப்படித்தான் சதி செய்தது. அடுத்தடுத்து அரங்கேற்றப்படும் இத்தகைய சதிகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி : ஈழத்துக்கான விடிவு கிடைக்க இனியும் வாய்ப்பு இருக்கிறதா..?

பதில் : முகாமில் அடைபட்டுக் கிடக்கும் என்னால் இதற்கென்ன பதில் சொல்ல முடியும்? எத்தகைய அடக்கு முறையும் ஒரு நாள் உடையத்தானே செய்யும்.. – உறுதியுடன் சொல்கிறார் சிரஞ்சீவி மாஸ்டர்.

11 thoughts on “பொட்டு அம்மான் பத்திரமாக இருக்கிறார் : பிரபாகரன் குறித்துக் கூற முடியாது.”

 1. தமிழீழக் கனவு தங்களின் கையைவிட்டு போய்விட்டதாகவும்… நடந்து முடிந்த கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் பிராயச்சித்தம் தேடியும் உலகசமாதானத்திற்காக வேண்டியும் காவியுடைதரித்து பொட்டம்மானும் பிரபாகரனும் இமயமலையடிவாரத்தில்
  தியானம் செய்வதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.
  நம்புவதும் நம்பாமல் விடுவதும் அவரவர் ஊகங்களைப் பொறுத்தது.

 2. புத்தி பேதலித்து இருக்கிறது. பாவம்.

 3. தயாரிப்பு, டைரக்ஸ்ன், க்தை, இவை மூண்றுக்கும் சொக்கத்தங்கம் சோனியாவும், தமிழினத்தலைவன் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்பவருமாகிய கரிநாய்நிதியும் இணைந்து பரிசுகளை வாரிவழங்குவார் .

 4. சிரஞ்சீவியே ஒரு பம்மாத்து,நீங்க சுத்தாம மாறுங்க,இலங்கை அரசாங்கத்தோடு பிரபா,போட்டு 1987 இலேயே கூட்டு வைத்த தமிழ் துரோகிகள்,இவங்கள் சிங்கலவநோடுதான் இருக்கிறாங்கள் என்பது எங்களுக்கும் தெரியும்.இனிமேல் உங்கள் வியாபாரத்தை இதில் வைக்காதீர்கள்.நாங்கள் உங்களை நம்பீட்டம்.சரியா??

  1. //இலங்கை அரசாங்கத்தோடு பிரபா,போட்டு 1987 இலேயே கூட்டு வைத்த தமிழ் துரோகிகள்//

   நீங்கள் அரசியல் அறிந்தவரா, இல்லா சராசரி சமூக பிரக்ஞை இல்லாதவரா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் மேற்கண்ட விசயத்தில் அறியாமை இருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஒரு வேளை இதுபோல் வலைதளங்களைப் படிப்பதால் அப்படி குரோதத்தோடு எழுதுகிறீர்களா என்பதும் தெரியவில்லை. 

   ஈழம் என்பது இந்தியாவிற்கு சம்பந்த இல்லாத ஒரு அண்டை நாடு மட்டுமே. இந்தியா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தவே அங்கு அமைதிப்படையை அனுப்பியது. அதற்கு முதலில் தமிழர்களின் உரிமை என்று நாடகமாடியது, பிறகு இலங்கை அரசு பணிந்துவிட்டபோது ஈழப் போராளிகளை அடங்கச் சொன்னது. ஆனால் விடுதலைபுளிகள் அமைப்பு அடங்க மறுத்து தனது நாட்டின் சுதந்திரமே முதன்மையானது என்ற போராடியது. இந்திய இராணுவமும் அரசும் அதையும் தாண்டி இலங்கையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலையிட்டு ஒரு பொம்மையரசாக மாற்ற முயற்சித்தது. அது ஒரு முழு இறையாண்மை பெற்ற நாடாக இல்லை. மற்றவர்களின் அரைக்காலனியாக இருந்தது. இருந்தும் அதுனுடைய பேரம் பேசும் உரிமையை பறிக்கும்போது அதற்கு இலாபம் இல்லை. அந்த அச்சத்தின் காரணமாகவும், தைரியமாக இந்தியாவை பகைத்துக்கொண்டு அதை வெளியேற கோருவது முடியவில்லை. அதனால் இலங்கை அரசு தன்னுடைய அரைக்காலனிய இறையாண்மையிலிருந்து (தரகு) காத்துக்கொள்ளவும், விடுதலைப்புலிகளுக்கு அன்று முதன்மை எதிரியாக இருந்த அந்நிய நாட்டு சக்தியாக இந்தியா இருந்தததிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அதை விரட்டியடிக்கவேண்டி இருந்தது. அதனால் இரண்டும் மறைமுகமாக ஒன்று சேர்ந்து அந்நியப் படையான இந்தியப் படையை விரட்டியடித்தது. இந்து கூட்டை சதி என்றால் உங்களுக்கு வரலாற்று அறிவில்லை என்று பொருள்.

   வடகிழக்கு மாகாண கவுன்சிலை கலைப்பது, அதற்குத் தேர்தல் நடத்துவது, பிரிந்து செல்லும் உரிமை கோருவதை தேசவிரோதம் எனும் அரசியல் சட்ட 6வது திருத்தத்தை ரத்துச் செய்வது, வடகிழக்கு மாநிலத்தில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைக் கைவிடுவது என்று இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. ஆனால் இந்திய இராணுவம் வெளியேறியவுடன் அனைத்து வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிட்டது. இது புரிந்துகொண்டுதான் அனுகியது. அதன் பிறகு அம்பலப்படுத்தியது. ஆனால் அந்நியப் படையை விரட்டுவதற்கு ஒவ்வொரும் ஒவ்வொரு நலனிலிருந்து ஒப்பந்தம் செய்துக்கொள்கிறது. எவ்வளவு பிற்போக்காளர்களால் இது போடப்படாலும், இது சரியானதே. அதன் பிறகு இலங்கை அரசை எதிர்த்துப் போராட எந்த நிலையிலும் தயங்கவில்லை. பிரிட்டிசை எதிர்த்து எத்தனையோ பிற்போக்கான இந்திய மன்னர்கள் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் அந்நிய படையை எதிர்ப்பதற்கு ஒன்று சேர்வது என்பது புறநிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பிர்கு சேவையே செய்யும். இதுதான் சமீபத்தில் ஈராக்கில் நடந்தது. ஆப்கானிஸ்தானில் நடப்பது.

   நீங்கள் ஒரு வேளை இந்தியாவின் நிலையிலிருந்து ஒரு தேசிய வெறியோடு அனுகினால் உங்களுடைய பார்வை வேறானதாகவே இருக்கக்கூடும். ஆனால் வேறு ஒரு நாட்டை அடிமைப்படுத்தும் எந்த நாடும் ஜனநாயகத்தை தன் நாட்டிலேயே குழி தோண்டி புதைக்கவே செய்யும். sonja, velu ஆகிய இருவருக்கும் இதுவே பதிலாக இருக்கமுடியும். 

   ஒரு போரில் தோல்வி என்பது வேறு, முற்றாக ஒடுக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இறுதி வரை தனது அரசியல் கோரிக்கையை தனது விடுதலையை சமரசம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் விடுத்த கடைசி அறிக்கையும் நாங்கள் தோல்விகண்டுவிட்டோம் அதனால் இந்தப் போராட்டத்தை நிறுத்துகிறோம் என்று கூறியபின்புதான் அடக்கப்பட்டார்கள். வீரபாண்டிய கட்டபொம்மனை, உமர் முக்தரை நயவஞ்சகமாக அல்லது சுற்றி வளைக்கப்பட்டு அடக்கப்பட்டே இழுத்து வந்து கொல்லப்பட்டார்கள். இவர்கள் எப்படி ஆயிரம் அரசியல் போர்கலை தவறுகள் செய்து தோற்றுப் போயிருந்தாலும் விடுதலைப் போராட்ட வீரர்களே. 

   அதை எப்படி வெற்றியாக மாற்றவேண்டும். அதற்கு சரியான அரசியலை எப்படி கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் இழைத்த அரசியல் பிழை என்ன என்று விவாதம் நடத்துங்கள். ஆனால் அவர்கள் செய்த விடுதலைக்கான தியாகத்தை, அவர்களின் தோல்வியை கொச்சைபடுத்தாதீர்கள். 

   ஒரு தோல்வியில் நிறைய அவநம்பிக்கைகள் முளைக்கலாம். அதில் முன்னனியில் இருந்தவர்கள் துரோகியாகலாம். இது ரஷ்யப் புரட்சியிலும் 1905 ஆண்டு முதலில் தோல்வி கண்ட போது பிளக்னோவ் லெனின் குருவே துரோகியாக வில்லையா. டிராட்ஸ்கி துரோகியாகவில்லையா. அதுபோல் துரோகியாகியவர்களை காட்டி உண்மையிலேயே வீரத்தியாகம் அடைந்தவர்களை கொச்சைப் படுத்துவது என்பது ஒரு மகனின் துரோகத்திற்காக தாயினை ஒழுக்கக்கேடனவள் என்பதற்கு சமம். அந்த தவறான மதிப்பீட்டினை கற்றுக்கொடுக்கவே நமக்கு ஆதிக்கவாதிகள், அதற்கு துணைபோனவர்கள், வாய்ஜாலங்களிலும், அட்டை கத்தியுடன் புரட்சி பேசுபவர்கள் ஆகியோர் முயற்சிக்கிறார்கள். 

   வரலாற்று தெளிவு வேண்டும். அதைவிட காலத்தின் இடத்தின் நிலை கொண்டு சீர்தூக்கி பார்க்க வேண்டும். அதற்கு மார்க்சியத்தை விட வேறு சிறந்த ஆயுதம் இருக்கப்போவதில்லை. அதை தன்னடக்கத்தோடு முதலில் கற்க முயலவேண்டும். பிறகு அதை கொண்டு ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டும் என்பதே மேற்கண்ட இரு நபருக்கும் எனது பதிலாகும்.

   1. இவ்வளவு தூரம் அறிவுபூர்வமாக சிந்திக்கத் தெரிந்து அதை நல்ல தமிழில் எழுதவும் தெரிந்தால் ஏன் இங்கு வந்து பலர் இப்படி குப்பை கொட்டுவார்கள். காழ்ப்புணர்வுதான் பெரும்பாலும் சத்தியெடுக்கப் பண்ணுகிறது.

   2. அறிவு அறிவுபூர்வமாக சுட்டிருக்கிறீர்கள் சூடு வாங்கியவர்களே உங்களை பாராட்டும்போது அதை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்ற எண்ணம்தான் ஏற்படுகிறது.

   3. பெரிய ஆல மரத்தின் கீழ் ஓர் சிறிய மரம் வளர்ந்த்து விருட்சமாக முடியாது. இதே நிலமை தான் இலங்கைத் தமிழர்களிற்கு அன்றும் இன்றும். இந்தியாவின் ந்ட்பும அதன்
    அனுசரணையுமின்றி புலிகள் விசுப ரூபமெடுத்தாலும் முடியாது.

    புலிகள் ஆயுத பலத்தை மட்டுமே நம்பியிருந்தனர். மக்களின் ஆதரவை எதிர்பார்க்கவில்லை. புலம் பெயர் தமிழரின்
    பணத்தைத அபக்ரிக்கவே விரும்பினர்.. பிறரின் அறிவுரைகளை
    விசமாகவே கருதினார்கள். தமிழ்மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியாமலும். இந்தியாவின் முக்கியத்தை உணராம்லும் வண்டியில் பூட்டிய குதிரை அக்கம் ப்க்கம் பார்க்காமல் செனறது போல் தமிழரை அழிவிற்கு கொண்டு
    சென்றவ்ர்கல் தான் புலிகள். துரை

 5. பொட்டமன் ராஜபக்சவின் காலடியில் இருக்கிறார், பிரபா பசிலின் காலடியில் இருக்கிறார், கேட்பவன் கெனயன் என்றால் கேப்ப மாட்டில் நெய் வரும்,

 6. திரு அறிவு அவர்களே தங்களது அறிவு பூர்வமான் ப்திலடிக்கு நன்றி.

 7. அதென்ன பொட்டம்மான் பற்றி கூற முடியும் பிரபாகரன் பற்றி இருட்டடிப்பு.

Comments are closed.