பெளத்த பிக்குகளின் சாகும் வரை உண்ணாவிரதம் : தொடர்கிறது

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி பௌத்த பிக்குகள் நேற்று முதல் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் இன்றும் தொடர்கின்றது.

உண்ணா விரதத்தை முன்னிட்டு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பிக்குகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரங்களை பொலிஸார் அகற்ற முற்பட்ட போதிலும் பௌத்த பிக்குகள் தொடர்ந்தும் உண்ணா விரதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் உண்ணாவிரதம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.