பெரியார் படம் தெலுங்கில் ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

சுயமரியாதைக் கருத்துக்களுக்காக நீண்டகாலமாக போராடி வந்தவர் பெரியார். தமிழக திராவிட இயக்கத்தை பரவலாக மக்களிடம் கொண்டு சென்ற பெரியாருக்குப் பின்னர் கொள்கையையும் கட்சியையும் தன் தம்பியான கி.வீரமணி என்பவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார். அதன் பின்னர் திராவிடர் கழகம் தென்னிந்தியாவின் அதிக சொத்துக்கள் மிகப்பெரிய கம்பெனியாக மாற்றப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவிடமும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியிடமும் அண்டிப்பிழைத்து சொத்தை வளர்த்துக் கொள்வதே வீரமணியின் வேலை. இந்நிலையில் திக கம்பெனியே இயக்கிய படம்தான் பெரியார் படம். கருணாநிதியை திருப்திப்படுத்தும் விதமாக பெரியார் படத்தை எடுத்து முழு வரிவிலக்கையும் பெற்றுக் கொண்ட வீரமணி அப்படத்தை இந்தி, மலையாளம், தெலுங்கில் வெளியிட தீர்மானித்து வெளியிட்டார். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நாயக்கர் இன மக்கள் அதிகமாக வாழக் கூடிய ஆந்திராவில் இப்படத்தை ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியிட்டுள்ளா கி.,வீரமணி.ஈ.வே.ரா பெரியார் என்றழைக்கபப்ட்ட இராமாசி ஈரோட்டைச் சார்ந்த் நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை தனது சினிமா விற்பனைக்கு பய்ன்படுத்தியுள்ள வீரமணியின் திராவிட முகமூடியை இனியாவது தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

11 thoughts on “பெரியார் படம் தெலுங்கில் ஈ.வே. இராமசாமி நாயக்கர் என்ற பெயரில் வெளியாகி உள்ளது.”

 1. தெலுங்கில் மட்டுமல்ல, தமிழிலும் அவர் ஈ.வே.ராமசமி நாயக்கர் என்றே நீண்ட காலமாக அறியப்பட்டார்.
  பெரியார் என்பது காலத்தாற் பிற்பட்டு, முதலில் திராவிட இயக்கத்துள் மட்டும் பயன் பட்டுப், பின்னர் தமிழகத்தில் பரவலாந்து.
  ஈ.வே.ராமசமி நாயக்கர் என்பதோ சாதிப் பேர் கூடாது என்பதால் ஈ.வே.ராமசமி என்பதோ அவரை எவ்வகையிலும் தாழ்த்தாது. சும்மா ஈ.வே.ரா. என்றாற் கூடப் போதும்.

  நான் வீரமணியின் அபிமானியல்ல. ஆனால் அவர் மீது வலிந்து குற்றம் காண்பது ஏற்புடையதல்ல.

 2. ஈ, வே, ரா, பெரியார் என்றுதான் அழைக்கபட்டாரே தவிர நாய்க்கர் என்று அழைக்கபடவில்லை, அது பார்ப்பாணனின் பத்திரிகைகளால் அழைக்கபட்டதே தவிர, ஒரு பொளுதும் பெரியாரின் தொன்டர்களால் அழைக்கபடவில்லை,

  1. தயவு செய்து பெரியார் என்ற பேர் எப்போது பரவலான வழக்குக்கு வந்தது, அவரைத் தமிழகத்துக்கு வெளியே எப்போது முதல் பெரியார் என்று அழைத்தார்கள் என்று சொல்லுங்கள்..

   நான் சொல்வது தெலுங்கில் அவரை அவரது இயற் பெயரில் அழைப்பதில் தவறில்லை என்பது தான்.

   1. அப்படியென்றால் கர்நாடகாவில் ரஜனியை சிவாஜிராவ் ,என்றும் , ஆந்திராவில் கருணாநிதியை தெட்சணாமூர்த்தி என்றும், ஜெயலலிதாவை அம்மு என்றும், ஆற்காடு வீராசாமியை ,வீராச்சாமி நாயுடு ஏன்றும், அழகிரியை அழகிரி நாயக்கர்,ஸ்ராலினை ,ஸ்ராலின் நாயக்கர், இப்படி அழைக்க ஒத்துக்குவாங்களா,

    1. சுப்புவின் காமடிதான் இன்றய கைலைட்

 3. அடிநிலையிலிருந்த சாதிகளுக்காக அல்லாது, இரண்டாம் நிலையில்ருந்த சாதிகளின் ஆதிக்கத்துக்காகக் குரல் கொடுத்தவர் பெரியார். திராவிடம் என்ற தவறான சுலோகம் இன்றுவரை தமிழ் நாட்டை ஒரு கற்பனைக்குள் கட்டிவைத்திருந்தது. ஆளும் வர்க்கத்துக்குப் பெரியாரீயமும் பெரியாரும் மகத்தான சேவை செய்துள்ளனர். சமரசமும் எதிர்ப்பும் என்ற இவரின் போக்கு தன்னார்வ நிறுவனங்களின் அரசியல்.

 4. செத்துப்போன பெரியாரை வைத்து சாகப்போகும் கருணாநிதியை திருப்திப்படுத்த, பெரியார் கழகம் என்ற கொம்பனியை நடத்தும் வீரமணி செய்திருக்கும் விளம்பர உத்தியே தவிர வேறு எதுவுமில்லை.
  பெரியார் ஒருபோதும் எதையும் பிரித்துப்பார்த்தவரல்ல, காலம் கோமாளிகளின் கைகளில் சிக்கி ,தந்தை பெரியார் அவர்களை விளம்பரப்பொருளாக்கியிருக்கிறது, பெரியார். பெரியார் என்று எப்போதோவே இந்தியா முழுவதும் அறியப்பட்டுவிட்டார், அவர் மொழி சாதிக்கு அப்பாற்பட்ட பொதுவான சமூகத்தின் மூட நம்பிக்கைகளை இல்லாமல் அழிக்கும் நாசினி”’
  கருணாநிதி தன்னுடைய நாயக்கர் வம்சத்தில்த்தான் பெரியாரும் பிறந்தவர் என்பதை வெளிப்படுத்துவதற்காக கோமாளி வீரமணியை பயன்படுத்தினார் என்பதுதான் உண்மை, எவர் தாம் வாழ தந்தை பெரியாரை பயன்படுத்தினாலும் பெரியாரின் புகழ் குறைந்துவிடப்போவதில்லை, கோமாளிகளின் கூத்துக்கள் மட்டும் அம்பலமாகிக்கொண்டேயிருக்கும்,

 5. Thanthai Periyar is thousand times better than other Asian Machiavellian Revolutionaries…He is our first Anarchist and libertarian Socialist. We can even call him as our early-feminist.
  i am sure the Leftist can learn a lot from him.

  1. Periyaar announced himself as a communist after visiting the USSR. He retreated when the colonial regime tightened the screws on the left. He stated his reason openly.
   As a social activist, he is among the most effective in Tamilnadu, and even India. But that is no case for making a cult figure out of him — which is what various mercenaries are doing in Tamilnadu today.
   Do you seriously consider the likes of CPI & CPM leaders to be really ‘leftists’.

Comments are closed.