பெண்களை வெளிக்கொணர்ந்த பொலிவாரியப் புரட்சி!

வெனிசுலாவில் சாவேஸ் தலைமையிலான அரசு மேற்கொண்டு வரும் பொலிவாரியப் புரட்சி, வறுமைக்குறைப்பு, வேலைவாய்ப்பு பெருக்கம் என்று பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது.

அதேவேளையில்,விளையாட்டுத்துறையிலும் சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவிக்கும் ஆட்டக்காரர்களையும் அது உருவாக்கியுள்ளது.

மனித வளத்தை மேம்படுத்துவதில் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பது பொலிவாரியப் புரட்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஏராளமானவர்களுக்கு அது வேலைவாய்ப்பைத் தேடித்தரும் ஒரு துறையாகவும் வெனிசுலாவில் கடந்த 11 ஆண்டுகளில் மாறியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தென் அமெரிக்க விளையாட்டுப்போட்டியில் 13 தங்கம், 15 வெள்ளி மற்றும் 21 வெண்கலம் என்று மொத்தம் 49 பதக்கங்களை வெனிசுலா வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் 110 பேர் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர்.

இந்த சாதனைகளோடு பெண்களுக்கும் நிறைய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பெண்கள் கால்பந்து அணி உலகக்கோப்பைப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. டென்னிஸ் அரங்கில் வெனிசுலாவின் அட்ரியானா பெரிஸ் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

2 thoughts on “பெண்களை வெளிக்கொணர்ந்த பொலிவாரியப் புரட்சி!”

 1. இந்தியர்கள்தான் கிரிக்கெட் என்ற வட்டத்துள் விழுந்து உலகம் உருண்டை என்ற உண்மையோடு உருண்டு கொண்டிருக்கிரார்கள்.இல்ங்கையில் றக்பி ஆடுகிறார்கள்.கோல்வ் ஆடுகிறார்கள் இந்தியாவில் கிரிக்கெட் மட்டைதான் வாழ்க்கை என்றூ நினைக்கிறார்கள். செம்மரியாட்டுக் கூட்டம் என்றால் இவர்கள்தாம்.

  1. தயவு செய்து பிறநாட்டினரை இழிவாகப் பேசாதீர்கள்.
   றக்பி விளையாடுவதால் நாம் உயர்ந்தோராக மாடோம்.
   உலகின் முட்டாள்தனமான விளையட்டுகளில்:
   கிரிக்கட்: கால விரயம்
   கொல்ப்: பண விரயம்
   றக்பி: முரட்டுத்தனம்

   இந்தியா பல நல்ல விளையாட்டுக்களின் உண்மையான தோற்றுவாய்.

Comments are closed.