பெண்களை பாலியல் துன்புறுத்தல் குற்றச் செயலாக்கப்பட வேண்டும் : எகிப்தில் கோரிக்கை.

01.08.2008

எகிப்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது என்பது குற்றச்செயலாக சட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு நீடித்த சிறைத் தண்டனை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்நாட்டில் பெண்கள் உரிமைக்காக குரல்கொடுத்துவரும் அரசு அமைப்பு கூறுகிறது.

எகிப்து அதிபரின் மனைவி சுஸான் முபாரக் தலைமை வகிக்கும் பெண்களுக்கான தேசிய சபை என்ற இந்த அமைப்பு, பெண்களுக்கான பாலியல் வன்முறையானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமடைந்துள்ளதாக கூறுகிறது.

எகிப்தின் குற்றவியல் சட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் என்பற்கு தனியான வரையறையோ விளக்கமோ கிடையாது. தவிர பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென இந்த அமைப்பு விரும்புகிறது