புஷ் உலகத்தைக் கட்டுப்படுத்த மன் மோகன் சிங் ஒத்துழைப்பு

 
 
 
 
 

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ், பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்ற இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளனர்.இதுதொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்புப் பேரவையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜான்ட்ரோ வாஷிங்டனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றிரவு நடந்த தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவது குறித்து விவாதித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்திய அரசுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை தொடரவும், இருதரப்பு உறவுகளை பலப்படுத்தவும் பிரதமரிடம் புஷ் விருப்பம் தெரிவித்தாகவும் கார்டன் ஜான்டிரோ கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பு மட்டுமின்றி, தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் உலக வர்த்தக அமைப்பின் (WTO) தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.